Saturday, 7 December 2019

தலை கீழாக கட்டப்பட்ட கோயில்,

தலை கீழாக கட்டப்பட்ட கோயில், தமிழர்களின் வியக்க வைக்கும் கட்டிடக் கலையை உணர்த்தும் கழுகுமலை வெட்டுவான் கோயில்
 கழுகுமலை வெட்டுவான் கோயில் தலை கீழாக கட்டப்பட்ட கோயில் தமிழர்களை தலை நிமிர வைத்த கட்டிடக் கலை... வாருங்கள் வெட்டுவான் கோயில் விபரங்களை முழுமையாக பார்ப்போம்...


கழுகுமலை வெட்டுவான் கோயில் என்பது தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை எனும் இடத்தில் அமைந்துள்ளது. கோவில்பட்டியிலிருந்து 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கழுகு மலையில் ஊரிலிருந்து 1 கிமீ தொலைவில் இருக்கும் மலை மீது குடைவரை கோயில்கால பிரமாண்டமாக காட்சி தருகின்றது.

1200 ஆண்டு பழமை:

இந்த குடைவரை கோயில் திராவிட கட்டிட கோயில் வடிவமைப்பை பயன்படுத்தி சுமார் கிபி 800ல் பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.


பொதுவாக ஒரு கோயிலோ அல்லது வீடோ கட்டும் போது அஸ்திவாரம் போட்டு கீழிருந்து மேலாக கட்டுவார்கள், ஆனால் இந்த குடை வரை கோயில் மலையை குடைந்து கட்டப்பட்டுள்ளதால், மேலிருந்து கீழாக கட்டப்பட்டுள்ளது.

அதாவது முதலில் கோபுரம், பின்னர் அப்படியே கீழாக சென்று சிற்பங்கள், கருவறை, அடித்தளம் போன்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர்.தலைகீழாக கோயிலை கட்ட மலையை குடைந்து, தமிழர்களின் கட்டிட  திறமையை தலை நிமிரச் செய்துள்ளனர்
.
இந்தியாவில் குடைவரை குகைக் கோயில் என்றது ஞாபகம் வருவது எல்லோராவில் அமைந்துள்ள கைலாசநாதர் குகைக் கோயில்.

அந்த வகையில் தமிழகத்தில் அமைந்துள்ள எல்லோரா என சொல்லிக் கொள்ளும் அளவிற்கு மிகச் சிறப்பாக மலையை குடைந்து குகை கோயிலை பாண்டிய மன்னர்களால் செதுக்கப்படுள்ளது. 

பிரம்மா, விஷ்ணு, சிவன், தேவ கன்னியர், பூத கணங்கள் என பல சிற்பங்கள் மிகவும் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளன. மேலும் பல சிலைகள் முழுமைப்பெறாமலும் நிற்கின்றன.

கருவறையில் பிள்ளையார் சிலை வைக்கப்படுள்ளது. ஆகமவிதிப்படி அமைக்கப்பட்ட மிருதங்க தட்சிணாமூர்த்தி இங்கு மட்டும் அமைக்கப்பட்டுள்ளது.*

கோயில் அரைகுறையாக நிறுத்தப்பட்டதற்கு பல யூகங்கள் கூறப்படுகின்றன. கோயில் வேலை நடந்து கொண்டிருந்த நிலையில், பாறையில் வெடிப்பு ஏற்பட்டதால் நிறுத்தப்பட்டிருக்கலாம் அல்லது போரில் மன்னன் இறந்ததால் அப்படியே விடப்பட்டிருக்கலாம் என கருத்து நிலவுகிறது.

தாமரைப் பூ தொங்குவது போன்ற அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. கரடுமுரடான கழுகு மலை மீது ஏறி சற்று எட்டிப்பார்த்தால் மிகவும் கலைநயமிக்க வெட்டுவான் கோயில் தென் படுகிறது.

ஒரே கல்லினால் ஆன கோயில் என்பது தான் சிறப்பு. ஒரு பெரிய மலையை ‘ப’ வடிவில் செதுக்கி அதில் 7.50 மீட்டருக்கு சதுரமாக வெட்டி, கோயிலை மேலிருந்து கீழாக வெட்டி அர்புதமாக உருவாக்கியுள்ளனர்.கழுகு மலை ஊருக்கு ஒரு அடையாளமாக இந்த கோயில் திகழ்கின்றது.

மலையின் மற்றொரு பகுதியில் சமணர்கள் சித்தாந்தம் போதித்த பல்கலைக்கு அடையாளமாக பல பாறைகளின் செதுக்கப்ப்ட்ட தீர்த்தங்கரர்களின் சிற்பங்களே சாட்சியாக அமைந்துள்ளன.

இதில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட தீர்த்தங்கரர் சிற்பங்கள் 90க்கும் மேற்பட்ட வட்டெழுத்துக்கள் மலையை ஒரு மிகச் சிறந்த சிற்பக்கூடமாக காட்சி அளிக்கிறது.

இந்த சமணக் கல் படுக்கைகள் குடைவரை கட்டிட அமைப்பு பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் (கிபி 768-800) உருவாக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

 குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பார் என்பார்கள் அது போல கழுகு மலையில் கீழே முருகன் குடைவரை கோயில் உள்ளது.

இந்த கழுகு மலையில் உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயிலில் ஒன்றாக இங்கு அமைந்துள்ள முருகன் கோயிலும் ஒன்றாகும். இங்கு அமைந்துள்ள  முருகப் பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழின் மூலம் பாடியுள்ளார். இந்த திருத்தலத்தில் முருகன் மேற்கு நோக்கி பார்த்தபடி காட்சி அளிக்கிறார். 

மேற்கு நோக்கி முருகன் அமைந்துள்ள மூன்று திருத்தலங்களில் இதுவும் ஒன்று. இந்த கோயில் ராஜயோக தலம் என்று கச்சியப்பரால் போற்றப்பட்டுள்ளது.
இங்கு வள்ளி தெய்வானையுடன் முருகன் காட்சி தருகிறார்.

வாழ்க பாரதம் 🇮🇳
வளர்க பாரதம் 🇮🇳

திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஹோட்டலில் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு..?:சென்னை உயர்நீதிமன்றம் #MadrasHighCourt

திருமணமாகாத ஆணும் பெண்ணும், ஹோட்டலில் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு இருக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 



கோயம்புத்தூரில் ஒரு தனியார் ஹோட்டல் ஒன்று எந்தவித முன் அறிவிப்பும் இன்றி மூடப்பட்டது. இந்த தனியார் ஹோட்டலில் ஒரு அறையில் திருமணமாகாத ஆணும் பெண்ணும் தங்கியிருந்ததாலும், மற்றொரு அறையில் மதுபான பாட்டீல்கள் இருந்ததாலும் இந்த ஹோட்டல் போலீஸ் மற்றும் வருவாய்த் துறையினரால் மூடப்பட்டது. இதனை எதிர்த்து அந்த ஹோட்டல் உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 


இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “பத்திரிகைகளில் வெளியான செய்திகளை வைத்து இந்த ஹோட்டல் மூடப்பட்டுள்ளது. அதாவது இந்த ஹோட்டலில் திருமணமாகாத ஆணும் பெண்ணும் தங்குவதால்  மூடப்பட்டுள்ளது. திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஹோட்டலில் ஒரே அறையில் தங்குவதால் என்ன தவறு இருக்கிறது. திருமணமாகாத ஆண் பெண் ஒரே அறையில் தங்கக் கூடாது என்ற சட்டம் ஒன்றும் இல்லை.

அதேபோல திருமணமாகாத தம்பதிகள் சேர்ந்து வாழ்வது எந்தவித குற்றமும் இல்லை. அப்படி இருக்கும்போது ஆணும் பெண்ணும் ஒரே விடுதியில் ஒரே அறையில் தங்கினால் எவ்வாறு குற்றமாகும். அத்துடன் இந்த விடுதியின் அறையில் மதுபாட்டீல்கள் கிடைத்ததால் மட்டும் இவர்கள் மது விற்பனை செய்கிறார்கள் என்று கூறிவிட முடியாது. 

மேலும் இந்த விடுதியை மூடும்போது உரிய நெறிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. ஆகவே சீல் இடப்பட்ட இந்த விடுதியை ஆணை கிடைத்த 2 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர் மீண்டும் திறக்க அனுமதி அளிக்கவேண்டும்” என உத்தரவிட்டார்,

Wednesday, 4 December 2019

நீங்க பாசிட்டிவ்வா? நெகட்டிவா? இதெல்லாம் உங்களிடம் இருந்தால் தகர்த்தெரியுங்கள்..!

நம் அனுபவங்களை சீராக ஒழுங்கமைக்கும் தன்மை நம் உணர்வுகளுக்கு உண்டு என்று நம்புபவர்கள் நாம். 


இதிலிருக்கும் சிக்கலே , பெரும்பாலானோர் அதிகப்படியாக எதிர்மறையான எண்ணங்களை, அது எதிர்மறையான எண்ணம் என்ற விழிப்புணர்வே இன்றி வளர்த்து வருவது தான். இது ஒரு கட்டத்தில் எதிர்மறையாக இருப்பதே அவர்களின் இயல்பு என்ற பிம்பத்தை ஏற்படுத்தி விடுகிறது.

வெற்றிக்கு இடையூறாக பல எதிர்மறை எண்ணங்கள் நமக்கு தெரியாமலேயே நம்மிடம் இருக்கலாம். அவற்றில் சில இங்கே தொகுக்கப்பட்டுள்ளன…இவற்றில் எதாவது, எப்போதாவது அல்லது எப்போதும் எழுகிறதா என ஆராய்ந்து பாருங்கள்  இருந்தால் தகர்த்தெரியுங்கள்…. ஆகாயம் தொடுங்கள்.. !!

#1 நீங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டவர் என நினைப்பது

உங்களுடைய தோல்விக்கும் சூழலுக்கும் அடுத்தவரை சாடுவதை நிறுத்துங்கள். நீங்கள் அடைந்திருக்கும் இடம் உங்களுக்கு விருப்பமானதாக இல்லாத வேளையில் அதை மாற்றும் முயற்சிகளை எடுங்கள். அதை விடுத்து இந்த விருப்பமற்ற இடத்திற்க்கு வழிநடத்தியவர்கள் இவர்கள் என மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துவதை நிறுத்துங்கள்.  உங்கள் வாழ்விற்க்கு உங்கள் பயணத்திற்க்கு நீங்கள், நீங்கள் மட்டுமே பொறுப்பு என்பதை மனமார நம்புங்கள்

#2 பிறரிடம் இருந்து அதிகம் எதிர்பார்ப்பது

என்னதான் உங்கள் எதிர்பார்ப்பது அதீத நியாயமானதாக இருந்தாலும். “இவரால் இது நிகழ்ந்தால் நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம்” என்ற எண்ணத்தை மட்டும் மனதில் விதைத்தால். பெரும்பாலும் அது ஏமாற்றத்தில் முடியும் வாய்ப்புகளே அதிகம். உங்கள் எதிர்பார்ப்புகள் பிறருக்கு முக்கியமானவையாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை உணருங்கள்



 

#3 பிறரின் துணையோடே நம் வாழ்வு முழுமையடைகிறது என எண்ணுவது.

நம்மை தவிர வேறு எவராலும் நம்மை முழுமைப்படுத்த இயலாது. நண்பர்கள், குறிப்பிட்ட சில உறவுகள், என யாரோவொருவரால் நம் வாழ்வை முழுமை அடைய வேண்டும் என்று காத்திருக்காதீர்கள். நம்மளவில் ஆனந்தமாக இருக்க கற்றுகொள்ளுங்கள் முடியாத வேளையில் அதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள்

#4 பணமும் இன்பமும் ஒன்றென நினைப்பது.

பணம் என்பது ஒருபோதும் வெற்றியின் அளவுகோல் ஆகாது. ஒரு சராசரி பணியாளர் அடையும் இன்பமும், ஆனந்தமும் பெரும் தொழில் முனைவோரிடம் இல்லாமல் போகலாம். நிச்சயம் பணம் பல பிரச்சனைகளை தீர்க்க வல்லது ஆனால் அது இன்பம் என்றாகிவிடாது. எனவே பணத்தை மகிழ்ச்சிக்கும் உற்சாகத்திற்க்குமான சமமான இணை என நினைப்பதை தவிருங்கள்

#5 வருங்காலத்தை நிர்மாணிப்பது கடந்த காலம் என எண்ணுவது.

உதாரணமாக ஓர் ஏழ்மை குடும்பத்தை பின்னனியாக கொண்டதனாலேயே ஏழ்மையாகவே வாழ்க்கை முடியும் என நம்புவது. சில சின்ன சறுக்கல்களை சந்தித்ததாலேயே எந்த துணிவான முடிவுகளையும் எடுக்காமல் தயங்குவது என வருங்காலத்தை கடந்த காலத்தின் நிகழ்வுகளாலேயே வடிவமைக்காதீர்கள். கடந்த காலத்தை எதனாலும் மாற்ற முடியாது. ஆனால் வருங்காலத்தை நிச்சயம் நாம் விரும்பும் மாற்றத்துடன் கட்டமைக்க முடியும். இந்த வித்தியாசத்தை உணர்ந்தாலே வருங்காலம் வசந்தம் தான்

தொல் தமிழரின் பானை கழிவறைகள்.

தமிழகத்தில் பொதுவில் மலம் கழிக்கும் அநாகரீக  வழக்கம் பெருவாரியாக இருக்கிறது என்று நம் மேல் ஒரு பழி உண்டு.
தமிழ் நாட்டில் முன்பு  தனிக்   கழிப்பறைகள் மலம் கழிக்க  உபயோகிக்கும் வழக்கம் இருந்ததில்லை என்று பொதுவாகக்கருதப்படுகிறது ஆனால் உண்மை முற்றிலும் வேறானது.
கேரளாவில் உள்ள முசிறி அல்லது முசிறிப்பட்டினம் என்ற பகுதியில் ஆய்வு செய்த தொல்லியல்துறை
நிபுணர்கள், 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்கள் கழிவறைகள் கட்டி, பயன்படுத்தியுள்ளனர் என்று கண்டறிவந்துள்ளனர்.  
சென்னையில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் பட்டினம் பகுதியின் வரலாறு 
அங்கு தொல்லியல் ஆய்வில் கிடைத்த பல்வேறு பொருட்களின் விவரங்களை 'பாமா'(PAMA) என்ற தனியார் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குனர் செரியன் விளக்கமாக எடுத்துரைத்தார். 
 
வரலாற்றுக்கு முந்தைய காலத்தில், தமிழகம் என்பது பரந்துவிரிந்து, இன்றுள்ள தமிழ்நாடு,கேரளா,ஆந்திரா, கர்நாடகா என தென்னிந்தியாவின் பெரும்பகுதியை உள்ளடக்கியதாக இருந்திருக்கும்
.  அதில் பட்டினம் நகரம் முக்கியமான துறைமுகமாக இருந்தது. இங்கு கழிவறைகள் இருந்ததற்கான சான்றாக கழிவுப் பானைகள் கிடைத்துள்ளன,''என்கிறார் பட்டினம் பகுதியில் ஆய்வு நடத்தும் தொல்லியல் ஆய்வாளர் செரியன்.  
'ஆறு பானைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, கடைசியாக வைக்கப்பட்ட பானை கூம்பு வடிவில் மண்ணில் புதைக்கப்பட்டு இருந்தது. இந்த கழிவறை வெஸ்டர்ன் டாய்லெட் என்று அறியப்படும் கழிவறையை ஒத்திருந்தது. இதே அமைப்பில் ஆறு கழிவறைகளை இதே இடத்தில் கண்டறிந்தோம்,''என்று விளக்கினார் செரியன். 
இதுவரை இங்கு நடக்கும் அகழாய்வில் தோண்டும் இடமெல்லாம் பானை ஓடுகளும் அதில் எழுத்துக்களையும் கண்டு வந்திருக்கிறோம்.
ஆனால்பானைகளின் மற்றொரு நவீன உபயோகமும் இப்போது தெரிய வந்திருக்கிறது .நம்முடைய நாகரீகத்தை பானை நாகரீகம் என்றே அழைக்கலாம் , பானை வழித்தடம் என்று பட்டு வழிப்போல சிறப்பித்துக்கூறுகிறார் சிறந்த ஆய்வாளரான
ஆர் பாலகிருஷ்ணன்.IAS. 
2006 முதல் 2016 வரை பட்டினம் பகுதியில் பாமா நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது  ''பட்டினம் பகுதியில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்தன. அதில் குறிப்பிடத்தக்க அளவு பானை ஓடுகள் கிடைத்தன. வீடுகளில் கூரை அமைக்க பயன்படுத்தப்பட்ட
ஓடுகள் கிடைத்தன. இன்னமும் பல முக்கிய செய்திகள் அந்த அகழ்வாய்வில் வெளிவந்துள்ளது .இந்த செய்தி 
https://t.co/bhjGa1zdPt இல் வெளிவந்துள்ளது விரிவான பல செய்திகளை அதில் காணலாம்    .எப்படியெல்லாம் பீடுடன் வாழ்த்திருக்கிறோம் இப்போது எத்தனை அவப்பெயரை சுமந்து நிற்கிறோம் ! உலகின் தலை சிறந்த நகர நாகரீகம் கொண்டவர்களாக நாம் இருந்திருக்கிறோம் .
இப்போது சொல்வார் இல்லாமல் வாடி  நிற்கிறோம் !

Tuesday, 3 December 2019

ஒரு கோவில் - முதல்ல கங்கர்கள் பத்தாம் நூற்றாண்டில் கட்டியிருக்காங்க.அதற்கு அவர்கள் காலத்தில் அவர்களுடன் நட்பாக இருந்த சோழர்கள் விளக்கு எரிக்க தானம் கொடுத்திருக்காங்க.அதன் பின் குலோத்துங்க சோழர் தானம் கொடுத்திருக்கிறார்.அதன் பின்பு ஹொய்சாளர்கள் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் 


அவர்கள் சில மண்டபம் கட்டி விரிவு படுத்திருக்காங்க.அதன் பின்பு பதினான்காம் நூற்றாண்டில் வந்த விஜய நகர பேரரசை சார்ந்த மன்னர்களும் தங்கள் பங்குக்கு ஆன சில பணிகளை செய்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு கால கட்டத்திலும் வேலை செய்த கலைஞர்கள் அவர்களால் எவ்வளவு அதிகபட்சம் 

நேர்த்த்தியும் துல்லியமும் உழைப்பையும் கொட்டமுடியுமோ கொட்டியிருக்கிறார்கள்.

கருவறை முன்பு ஹொய்சாளர்கள் கட்டுமானத்தில் உருவான திருக்கல்யாண மண்டபத்தை கலையார்வம் உள்ள எவரும் கண்டவுடன் கடந்து வந்து விட முடியாது..ஆனால் அப்படி இரசிப்பவர் எவரும் அங்கு வருவதில்லை போல 

ஒவ்வொரு அரசாட்சியும் அதன் கலை வளர்ச்சியும் எப்படி இருந்தது என்பதற்கு சான்றாக இருக்கும் ஒரு கோவில்.வெறும் புத்தக வாசிப்பாக சோழர்கள் பற்றி அறிவதற்கும் கர்னாடகவின் தலைனகரின் அருகே கல்வெட்டு சான்றுகளோடு நின்று கொண்டிருக்கும்

கோவிலை தொட்டு தடவி உடல் சிலிர்ப்பதும் வெவ்வேறு விதமான அனுபவம்.

அந்த அனுபவத்தை நீங்களும் பெற சிக்பெலபுரா பயணப்படுங்கள்.

#சிக்பெலபுரா - கர்னாடகா

10th Century - Ganga Dynasty

#Chikbalapura - Karnataka - India

Monday, 2 December 2019

They might have never visited our temples ,Those who decided that there are only 7 wonders in the world.

They might have never visited our temples ,Those who decided that there are only 7 wonders in the world.
Ancient Indian architecture was one of the finest&accurate in the entire world.India's engineering techniques&skills that cannot be replicated, even today,in t 21st century.

 This beautiful cave has an engraved rock painting of Maa Durga in battle pose slaying demon Mahishasura!🙏😌

 This is in Mahabalipuram - 40-50 kms from main Chennai and 30-35 Kms from Chennai South (Sholinganallur Junction). U can easily reach Mahabalipuram via East Coast Road!

Friday, 29 November 2019

We are Hindu Temples and Dear Friends we r beyond the Ancient. 😊

We are Hindu Temples and Dear Friends we r beyond the Ancient. 😊 


Anjaneyadri Hill in hampi lies in this centre of Anegondi area, karnataka

Same temple different view 
Distant view 😄 

Tuesday, 26 November 2019

ஒரு புறம் தாளம், மறுபுறம் நாட்டியம் !

ஒரு புறம் தாளம், மறுபுறம் நாட்டியம் !

ஒரே கல் , ஓரே தூண் இது போன்றதொரு கலையை உலகிற்கு அளித்தது சநாதனம் எப்படியோ வாழ்வது அல்ல வாழ்க்கை இப்படி தான் வாழ்வது வாழ்க்கை என்று உலகிற்கு உனர்த்தியது சநாதனம்

one Side Musician , Another side Dancer Single Pillar

Lepakshi - 15th Century 

Saturday, 9 November 2019

அயோத்தி வழக்கின் பின்னணி..!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி அமைந்திருந்த சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்துக்கு சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினரும் உரிமை கோரி வந்தனர்.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், அந்த நிலத்தை 3 தரப்பினரும் சரிசமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010ம் ஆண்டில் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதிகள் போப்டே, சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

இந்த விவகாரத்தில் சமரசத் தீர்வு காண்பதற்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமையில், வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர், ஸ்ரீராம் பஞ்ச்சு ஆகியோர் அடங்கிய மத்தியஸ்தக் குழுவை கடந்த மார்ச் மாதம் உச்சநீதிமன்றம் நியமித்தது. இந்த குழுவின் சமரசப் பேச்சுவார்த்தையில் அனைத்து தரப்பினரும் ஏற்கும் ஒருமித்த முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை கடந்த ஆகஸ்ட் 6ந் தேதி தொடங்கப்பட்டு தினசரி வாதங்கள் நடைபெற்றன. அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த மாதம் 16ந் தேதியன்று நிறைவடைந்தன.

உச்சநீதிமன்றம் அமைத்த மத்தியஸ்தக் குழுவின், சமரசப் பேச்சுவார்த்தையின்போது எடுக்கப்பட்ட முடிவுகளையும் தீர்வுகளையும் அறிக்கையாக முத்திரையிட்ட உறையில் அன்றைய தினம் தாக்கல் செய்தது. இந்த நிலையில் இன்று காலை அயோத்தி வழக்கின் தீர்ப்பு வெளியாக உள்ளது.

Friday, 8 November 2019

#Breaking #அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு

#Breaking : அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு - உச்சநீதிமன்றம் அறிவிப்பு -நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு

*"நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகும்" - வழக்கு பட்டியல் அட்டவணை வெளியீடு
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் குறித்த வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகிறது 

*தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்குகிறது
#SupremeCourt | #AyodhyCase

#AyodhyaCase

Tuesday, 5 November 2019

இந்து துறவி தான் திருவள்ளுவர்... வரலாற்று சான்றுகளுடன் விரிவான விளக்கம் இதோ....

திருவள்ளுவரை நேரில் பார்த்ததுண்டா ? எப்படி இதுதான் அவர் உருவம் என்று சொல்லப்போச்சு என்றெல்லாம் கேட்கிறார்கள். பண்டைக்காலத்தில் வாழ்ந்தவர்கள் எல்லோரையும் நேரில் பார்த்துத்தான் வரைய வேண்டும் என்ற அவசியமில்லை. வள்ளுவரின் உருவம் எப்படி இருக்கும் என்று பழங்காலப் பாடல் ஒன்று சொல்கிறது...

“திருமுடிமிசையார் மயிர்முடியழகுத் தீர்க்கபுண் டரநுத லழகும்
..திகழ்நெடுந் தாடியி னழகும்
அருமுடி செபமா லிகைசின்முத் திரைசேரபயநேர் வலக்கையி னழகும்
அமிழ்துறழ் தமிழ்மா மறைமுறை வரதமமைதரு மிடக்கையி னழகும்
மயிலையி னிடைமாதவர்கள்கண் டிறைஞ்சவீற் றிருக்கும்
திருவள் ளுவரெனு நாம சற்குரு சரணமே”

பாடல் என்ன சொல்கிறது. திருவள்ளுவர் தலையை நெடுமுடியாகப் புனைந்துள்ளார்.நெற்றியில் திருநீறு விளங்குகிறது. நெடுந்தாடி அவருக்கு உள்ளது. வலக்கையில் சின் முத்திரையோடு செபமாலை உள்ளது. இடக்கையில் தமிழ் மறையாம் திருக்குறள் உள்ளது. அப்படி மயிலையில் அமர்ந்திருக்கும் திருவள்ளுவரைச் சரணடைவோம்....

ஆக.  ஜடாமுடி, திருநீறு, சின்முத்திரை, ஜபமாலை ஆகிய ஹிந்து சமய அடையாளங்களோடு வரையப்பட வேண்டியதே திருவள்ளுவரின் உருவம்.

அருமையான பாடல். மேலும் - 
1. சிற்ப சாத்திரம் எவ்வாறு தியானிக்க வேண்டுமோ அவ்வாறு உருவம் அமைக்க இலக்கணம் வகுத்து தருகிறது
2. ஆறுமுக நாவலர் போன்ற மெய் ஞானிகள் இதுவே திருவள்ளுவர் உருவப் படம் என்று சான்று தருகின்றனர்
3. ஆதீனங்கள் இதையே ஆமோதித்து அடையாளம் காட்டி துணை நிற்கின்றார்கள்

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...