Saturday 4 January 2020

சிங்கபெண்ணே அல்ல திருட்டுப் பெண்ணே...! டியோ களவாணிகள்

சென்னையில் இரு சக்கர வாகனங்களில் அமர்ந்து இருப்பது போல நடித்து டியோ ஸ்கூட்டரை கள்ளச்சாவி போட்டு களவாட முயன்ற இளம் பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். வீட்டிற்கு வெளியே வீதியில் நிறுத்தப்படும் இரு சக்கரவாகனங்களின் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள வில்லங்கம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி...



இரு சக்கர வாகனங்களை திருடும் நம்ம ஊரு புள்ளீங்கோக்களில் சற்று முரண்பட்டது இந்த சிங்க புள்ளீங்கோ...!

திருவல்லிக்கேணி தாயார் சாகிப் தெருவை சேர்ந்த யாசர் அராபத் என்பவர் தனது டியோ ஸ்கூட்டரை வீட்டிற்கு முன்பு வீதியில் நிறுத்தி விட்டு வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது ஆக்டிவாக வலம் வந்த இரு இளம் பெண்களில் ஒருவர் அவரது வீட்டிற்கு எதிரே இருட்டில் மறைந்து நின்று நோட்டமிட மற்றொருவர் பக்கத்து வீட்டு படிக்கட்டில் அமர்ந்துகொண்டார்.

அக்கம் பக்கம் நோட்டமிட்ட சிங்க புள்ளீங்கோ ஒன்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த யாசார் அராபத்தின் ஸ்கூட்டரில் அமர்ந்தபடி கள்ளச்சாவி போட்டு திறக்க முயன்றது.

இந்த காட்சிகளை வீட்டின் சிசிடிவி திரையில் கண்ட யாசர், உஷாராகி வீட்டின் மேல் மாடியில் இருந்து கீழே இறங்கி ஓடி வந்தார். அவரை கண்டதும் சிங்க புள்ளீங்கோங்கள் இரண்டும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது.

அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இருவரையும் விரட்டிச்சென்ற போது அதில் ஒரு பெண் களவாணி மட்டும் சிக்கினாள்.

தான் செய்த தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்பாள் என்று மக்கள் நினைத்திருக்க, நாங்க பார்க்காத ஜெயிலே இல்ல என்ற ரேஞ்சில் அந்த பெண் கெத்தாக குரல் கொடுத்த காட்சி தான் இது..!

ஒரு வீட்டின் இரும்பு கேட்டிற்குள் சிறைவைக்கப்பட்ட அந்த பெண்ணை அண்ணாசாலை காவல் துறையினர் விரைந்து வந்து அழைத்து சென்றனர்.

விசாரணையில் அந்த பெண் 19 வயது கஞ்சா வியாபாரி சந்தியா என்பதும் அவருடன் வந்தது மோசடி மோனிஷா என்பதும் தெரியவந்தது.

சந்தியாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல் துறையினர் கள்ளச்சாவியை கையில் கொடுத்து இருசக்கர வாகனத்தை திருடச்சொன்ன மோசடி மோனிஷாவை வலைவீசி தேடி வருகின்றனர்.

பெண்கள் நுழையாத துறையே இல்லை என்று கலக்கிக் கொண்டிருக்கும் பல சாதனை பெண்களின் மத்தியில், முறையற்ற வளர்ப்பு முறை, கூடா நட்பு போன்றவற்றால் தடம் மாறி குற்றங்களை துணிந்து செய்யும் இது போன்ற சில வேதனை பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...