திருவள்ளுவரை நேரில் பார்த்ததுண்டா ? எப்படி இதுதான் அவர் உருவம் என்று சொல்லப்போச்சு என்றெல்லாம் கேட்கிறார்கள். பண்டைக்காலத்தில் வாழ்ந்தவர்கள் எல்லோரையும் நேரில் பார்த்துத்தான் வரைய வேண்டும் என்ற அவசியமில்லை. வள்ளுவரின் உருவம் எப்படி இருக்கும் என்று பழங்காலப் பாடல் ஒன்று சொல்கிறது...
“திருமுடிமிசையார் மயிர்முடியழகுத் தீர்க்கபுண் டரநுத லழகும்
..திகழ்நெடுந் தாடியி னழகும்
அருமுடி செபமா லிகைசின்முத் திரைசேரபயநேர் வலக்கையி னழகும்
அமிழ்துறழ் தமிழ்மா மறைமுறை வரதமமைதரு மிடக்கையி னழகும்
மயிலையி னிடைமாதவர்கள்கண் டிறைஞ்சவீற் றிருக்கும்
திருவள் ளுவரெனு நாம சற்குரு சரணமே”
பாடல் என்ன சொல்கிறது. திருவள்ளுவர் தலையை நெடுமுடியாகப் புனைந்துள்ளார்.நெற்றியில் திருநீறு விளங்குகிறது. நெடுந்தாடி அவருக்கு உள்ளது. வலக்கையில் சின் முத்திரையோடு செபமாலை உள்ளது. இடக்கையில் தமிழ் மறையாம் திருக்குறள் உள்ளது. அப்படி மயிலையில் அமர்ந்திருக்கும் திருவள்ளுவரைச் சரணடைவோம்....
ஆக. ஜடாமுடி, திருநீறு, சின்முத்திரை, ஜபமாலை ஆகிய ஹிந்து சமய அடையாளங்களோடு வரையப்பட வேண்டியதே திருவள்ளுவரின் உருவம்.
அருமையான பாடல். மேலும் -
1. சிற்ப சாத்திரம் எவ்வாறு தியானிக்க வேண்டுமோ அவ்வாறு உருவம் அமைக்க இலக்கணம் வகுத்து தருகிறது
2. ஆறுமுக நாவலர் போன்ற மெய் ஞானிகள் இதுவே திருவள்ளுவர் உருவப் படம் என்று சான்று தருகின்றனர்
No comments:
Post a Comment