Exquisite depiction of Devi Ambika from Tejapal's temple in Mount Abu
She is depiction sitting on a lion . A child is shown sitting in her lap.
Note her headgear. It can be compared to similar depictions on Shunga period terracottas.
Tuesday, 27 November 2018
Exquisite depiction of Devi Ambika from Tejapal's temple in Mount Abu
Thursday, 22 November 2018
பரிணாமக் கொள்கையை விளக்கும் படைப்பே தசாவதாரம்
உலகில் உள்ள பிற மதங்கள் அறிவியலுக்கு எதிரானதாகவும், அறிவியலை மறுப்பதாகவும் இருக்கின்ற போது, இந்து மதம் மட்டுமே அறிவியலோடு இணைந்த மதமாக இருக்கிறது. நமது முன்னோர்கள் தாங்கள் கண்டறிந்த அறிவியல் விசயங்களை நமக்கு மறைமுகமாக உணர்த்தி சென்றுள்ளார்கள். வடக்கு திசை நோக்கி படுக்க வேண்டாம் என்று காலம் காலமாக சொல்லப்பட்டு வந்து கொண்டிருந்த்தை, சில மூடர்கள் மூடநம்பிக்கை என்று கிண்டல் செய்தார்கள். ஆனால் வடக்கு திசை நோக்கி படுக்கும் போது மனிதனின் மூளையை பூமிகாந்தம் பாதிக்கிறது என்ற உண்மையை பிறகே மக்கள் உணர்ந்தார்கள். மஞ்சளையும் வேம்பினையும் கிருமி நாசினியாக இன்றுதான் மேலுலகம் கண்டுபிடித்திருக்கிறது. ஆனால் நம் ஞானிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அதை கண்டறிந்து பயன்படுத்திவந்துள்ளார்கள். அவர்கள் பயன்படுத்தியதோடு நில்லாமல் நம்முடைய அன்றாட வாழ்விலும் அவைகளை பயன்படுத்த வைத்துள்ளார்கள். இப்படி இந்து மதத்தில் நிறைய விசயங்களில் மறைமுகமாக இருக்கும் விஞ்ஞானத்தினை நாம் இப்போது அறிந்துகொண்டிருக்கிறோம். அந்த வகையில் இன்று டார்வினின் பரிணாமக் கொள்கையை எளிமையாக விளக்கும் இந்து மதத்தினைப் பற்றி காண்போம்.
பரிணாமக் கொள்கை –
சார்லஸ் ராபர்ட் டார்வின் கடல் வழியே, எச்எம்எஸ் பீகிள் (HMS Beagle) என்னும் கப்பலில், உலகில் பல இடங்களுக்கும் சென்று, உயிரினங்களின் தோற்றம் பற்றி ஆராய்ந்தார். ஊர்வன, பறப்பன, நடப்பன ஆகியவற்றின் பல எலும்புகளை சேகரித்து ஆய்வு மேற்கொண்ட போது, அவைகளுக்குள் சில ஒற்றுமைகள் இருப்பதை அறிந்தார். அவைகளைக் கொண்டு உயிரினங்களின் தோற்றம் எனும் நூலில் விவரித்துள்ளார். இதனை பரிணாமக் கொள்கையென கூறுகின்றார்கள். இந்த டார்வினின் பரிணாம வளர்ச்சி கொள்கை பெரும்பாலான ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட படைப்புக் கொள்கையாகும்.
பூமியில் நீர் மட்டுமே சூழ்ந்திருந்த காலத்தில் நீர்வாழ்பவன தோன்றின. பின் நாட்களில் நீர் வற்றி, நிலம் தென்பட்ட போது, நீரில் வாழும் உயிர்களில் சில நீர் நில வாழ்பவனவாக மாற்றம் அடைந்தன. அவற்றிலிருந்து ஊர்வன உயிரினங்கள் தோன்றின. பின் பாலூட்டிகளாக அவை மாற்றம் அடைந்தன. பாலூட்டிகளில் ஒன்றான குரங்கினம் சிந்தனை செய்ய தொடங்கிது. அதனால் ஆறறிவு பெற்ற மனிதன் தோன்றினான். மற்ற பாலூட்டிகள் போல் அல்லாமல் இரண்டு கால்களால் மனிதன் நடந்தான். மூர்கமாக வேட்டையாடும் குணம் அவனுக்குள் இருந்தது. அதனால் வேட்டையாடி மிருகங்களை கொன்று உண்டான். தனித்தனியாக இருந்த மனிதன் குழுவாக இணைந்தார்கள். தங்களுக்குள் தலைவன் ஒருவனை தேர்ந்தெடுத்து அவன் பின் மற்றவர்கள் சென்றார்கள். அவன் சொல்படி நடந்தார்கள். நதிப்பகுதியில் விவசாயம் செய்து நாகரீக மனிதனாக மாறினான். கால்நடைகளை விவசாயத்திற்கு பயன்படுத்தினான். அவைகளை காடுகளில் மேய்ச்சல் செய்து பிழைத்தான். பின் தன்னுடைய அறிவினைப் பயன்படுத்தி தற்போதுள்ள விஞ்ஞான மனிதனாக மாறிவருகிறான். வருங்காலத்தில் உலகினையே அழிக்கும் சக்தியுடைவனாக மாறுவான் என்பதில் சந்தேகமில்லை.
தசவதாரம் –
உலகில் அதர்மம் அதிகமாகும் பொழுது தர்மத்தினை நிலைநாட்டுவதற்காக திருமால் அவதாரம் எடுக்கிறார். எண்ணற்ற அவதாரங்களை திருமால் எடுத்திருந்தாலும் மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமண அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம், பலராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், கல்கி அவதாரம் என்ற பத்து அவதாரங்கள் மட்டும் தசவதாரங்கள் என்று பெருமையாக அழைக்கப்படுகின்றன இந்த அவதாரங்களை சற்று உற்றுநோக்கும் போது, இதில் ஒளிந்திருக்கும் பரிணாமக் கொள்கையை அறிய இயலும். டார்வினின் பரிணாம வளர்ச்சி கொள்கை உயிரிகளிலிருந்து மனிதன் தோன்றியதோடு நின்றுவிடுகிறது. அதன் பிறகு மனிதனின் பரிணாமம் துவங்குகிறது. தசவதாரத்தின் முதல் ஐந்து அவதாரங்கள் உயிர்களிலிருந்து மனிதனாக மாற்றம் அடைந்ததை விவரிக்கின்றன. அடுத்த ஐந்து அவதாரங்களும் மனிதனின் படிவளர்ச்சியை விவரிக்கின்றன.
மச்ச அவதாரம் – (மீன்- நீர் வாழ்வன)
பிரளய காலத்தில் மீனாக திருமால் அவதாரம் எடுத்து உலகை காப்பாற்றியதாக புராணம் கூறுகிறது. இது தசவதாரத்தில் முதல் அவதாரமாகும். பரிமாணவியல் கொள்கைபடி நீரில்வாழும் உயிரமான மீனிலிருந்தே உயிரங்களின் தோற்றம் ஆரமித்ததை குறிக்கிறது.
கூர்ம அவதாரம் – (ஆமை- நீர் நில வாழ்வன)
திருமாலின் இரண்டாவது அவதாரம் கூர்மம். பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடையும் போது, மேரு மலையை தாங்கிபிடிக்க திருமால் ஆமை ரூபத்தில் அவதாரம் எடுத்ததாக புராணம் கூறுகிறது. பரிணாமக் கொள்கையைப்படி நீர் வாழும் உயிர் நீர்நில வாழும் உயிராக மாற்றம் அடைந்ததாக கூறப்படுகிறது.
வராக அவதாரம் – (பன்றி- நிலத்தில் வாழும் பாலூட்டி)
தசவதாரத்தின் மூன்றாவது அவதாரம் வராகம். இரணியாசுரன் எனும் அரக்கனிடமிருந்து பூமியை காப்பற்ற திருமால் எடுத்த அவதாரம் என்று புராணம் கூறுகிறது. பரிணாமிவியல் கொள்கைபடி, நீர்நில வாழ்பவையாக இருந்தவை நில வாழ்பவையாக மாறியதை குறிக்கிறது.
நரசிம்ம அவதாரம் – (மிருகமாக இருந்து மனிதனாக மாறும் தன்மை)
தசவதாரத்தின் நான்காவது அவதாரம் நரசிம்மம். நரன் என்பது மனிதனைக் குறிக்கும் சொல். மனிதன் பாதியாகவும், மிருகம் பாதியாகவும் இருக்கின்ற திருமாலின் அவதாரம் இரணியனை கொல்ல எடுக்கப்பட்டதாக புராணம் கூறுகிறது. நிலவாழ்பவைகளாக இருந்த மிருகம் சிந்தனை திறன் பெற்று மனிதன் பாதி, மிருகம் பாதியாக இருந்த தொடக்க நிலையை இந்த அவதாரம் குறிக்கிறது.
வாமண அவதாரம் – (மனித தோற்றம்)
தசவதாரத்தின் ஐந்தாவது அவதாரமான வாமண அவதாரமே முழுமனிதனாக திருமால் எடுத்த அவதாரமென புராணங்கள் கூறுகின்றன. பரிணாமக் கொள்கைபடி முழு மனிதனை இந்த அவதாரம் குறிக்கிறது.
பரசுராம அவதாரம் – (மூர்கமாக வேட்டையாடும் மனிதன்)
தசவதாரத்தின் ஆறாவது அவதாரம் பரசுராம அவதாரம். மிகவும் மூர்க்க மனிதராக இந்த அவதாரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. கோடாரி ஆயுதத்தினை சிவனிடமிருந்து பெற்ற மனிதராக பரசுராமர் புராணங்களில் குறிப்பிடப்படுகிறார். மனிதனாக மாற்றம் அடைந்த பின்பு, மிருகங்களை மூர்க்கதனமாக வேட்டையாடியதை இந்த அவதாரம் குறிக்கிறது.
ராம அவதாரம் – (குழுக்களாக இணைந்து தலைவனை தேர்ந்தெடுத்தல்)
தசவதாரத்தின் ஏழாவது அவதாரமான ராம அவதாரம் இராவணனை அழிப்பதற்காக திருமாலால் எடுக்கப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. மனிதன் குழுக்களாக இணைந்து தலைவனை தேர்ந்தெடுத்து வாழ்ந்தமையை ராம அவதாரம் குறிக்கிறது.
பலராம அவதாரம் –(விவசாயம் செய்யும் மனிதன்)
தசவதாரத்தின் எட்டாவது அவதாரம் பலராமர். கிருஷ்ணனின் அண்ணனாக திருமால் அவதரித்தாக புராணம் கூறுகிறது. பலராமர் கைகளில் ஏர் கலப்பை விவசாயம் செய்யும் மனிதனை குறிக்கிறது.
கிருஷ்ண அவதாரம் –(கால்நடைகளை மேய்க்கும் மனிதன்)
தசவதாரத்தின் ஒன்பதாவது அவதாரம் கிருஷ்ணவதாரம். கிருஷ்ணன் கம்சன் எனும் அரக்கனை அழிக்க அவதரி்த்ததாக புராணங்கள் கூறுகின்றன. கிருஷ்ணன் ஆடுகளையும், மாடுகளையும் மேய்க்கும் சிறுவனாக இருந்தது கால்நடைகளை தங்களின் வேலைகளுக்கு பயன்படுத்திக் கொண்ட மனிதர்களின் பரிணாமத்தினை குறிக்கிறது.
கல்கி அவதாரம் –
தசவதாரத்தின் இறுதி அவதாரம் கல்கியவதாரமாகும். கலியுகத்தின் முடிவில் திருமால் எடுக்கும் அவதாரமாக புராணம் கூறுகிறது. ஆயுதங்களும், வாகனமும் கொண்ட அவதாரமான கல்கி தினம் தினம் சிந்தனையில் வளர்ந்து கொண்டிருக்கும் மனிதன் மகாசக்தியாக மாறுவதை குறிப்பதாகும்.
மேலைநாட்டு அறிஞர்கள் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு ஆய்வு செய்து அறிந்து கொண்ட பரிணாமவியல் கொள்கை இந்து மதத்தின் தசவதாரத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தெளிவுற எடுத்துரைக்கப்பட்டுள்ளமை வியப்பானதல்லவா?.
முகூர்த்த நாள் முக்கியத்துவம்
முகூர்த்த நாள் எமக்கு எவ்வளவு முக்கியத்துவம் என்பதனைப் பார்ப்போம்.
திருமணம் செய்வதற்கு ஒரு ஆணும் பெண்ணும் எப்படி அவசியமோ அதே போலத் தான் முகூர்த்த நாள் நிர்ணயிப்பதும் முகூர்த்தம் என்பது ஒன்றரை மணி நேர அளவுள்ள காலமாகும். ஒரு குழந்தையின் வளர்ச்சி ஆரோக்கியம் புகழ் ஆயுள் போன்றவற்றைப் பார்க்க எப்படி குழந்தையின் ஜனன ஜாதகம் அவசியமோ அதே போல முகூர்த்த நாள் மற்றும் நேரம் நிர்ணயம் அவசியமாகிறது. கணவன் மனைவி பந்தம் சமுதாயத்தில்அவர்கள் வாழ்க்கை சிறத்தல் இருவருக்கும் உள்ள அன்னியோன்யம் குழந்தைப்பேறு முதலிய பல நிகழ்வுகள் நல்லபடியாக அமைவதற்கு முகூர்த்த நாள் மற்றும் நேர நிர்ணயம் அவசியமாகிறது .
மணமக்களின் ஜாதகங்களில் ஒரு சில குறைகள் இருந்தாலும் இந்த முகூர்த்த நேர லக்னம் நன்கு அமையுமானால் அந்தக் குறைகள் தெரியாமல் போகிறது.
"நாள் செய்வதை நல்லோரும் செய்யார்"
நல்ல நாள் பார்த்து எந்தவொரு வேலையையும் செய்தோம் என்றால் அந்த வேலையை சிறந்த முறையில் நவக்கிரகங்கள் நமக்கு அமைத்துக் கொடுத்துவிடும். மணமக்கள் இருவர் ஜாதகங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து இவர்களுக்கு திருமணம் செய்விக்கலாம் என்று ஜோதிடர்கள் தெரிவித்த பின்பு இருவர் வீட்டில் உள்ள அனைவரும் சம்மதம் தெரிவித்த பின்னர் திருமண முகூர்த்த நாளை தேர்வு செய்ய முற்படவேண்டும். திருமணம் ஒருவருக்கு செய்ய முயலும் போது முதலில் அவரது நட்சத்திரத்தின்படி குருபலம் உள்ளதா என்று அறிய வேண்டும்.
குருபகவான் அவரவர் ஜென்ம ராசிக்கு2, 5,7, 9, 11 ம் இடங்களில் பிரவேசம் செய்யும் போது குரு பலம் இருப்பதாக கருதப்படுகிறது. குருபகவான் 2 ல் இருக்கும் போது திருமணம் செய்வித்தால் அந்த தம்பதியருக்கு தனசம்பத்துகள் கிடைக்கும். 5 ல் குரு இருக்கும் போது திருமணம் நடந்தால் சொற்படி நடக்கும் சத்புத்திரர்கள் பிறப்பார்கள். 7ல் குரு இருந்தால் பெண்கள் என்றும் தீர்க்கசுமங்கலியாக இருப்பார்கள். 9ல் இருக்கும்போது கணவருக்கு சகல செல்வாக்கும் 11ல் குரு தங்கும் போது திருமணம் செய்தால் மனைவி அல்லது கணவன் மூலம் செல்வங்கள் பல வந்து சேரும்.
குருபலம் ஆண் பெண் இருவருக்கும் இருப்பின் மிக்க நலம். இதில் பெண்ணிற்கு மட்டுமாவது இருப்பது இன்றியமையாதது. குருபலம் போலவே சூரிய பலமும் சிறிது முக்கியமாக கருதப்படுகிறது. சூரிய பலம் என்பது ஒருவரின் ஜென்ம ராசிக்கு சூரியன் 3, 6, 10, 11 ம் இடங்களில் பிரவேசம் செய்வதே ஆகும். சூரிய பலம் பெண்ணை விட ஆணுக்கு மிக முக்கியமாக கருதப்படுகிறது. திருமணக்காலங்கள் மணமக்களுக்கு யோகாதிபதிகளின் தசாபுக்திகளாக அமைந்தால் அந்தத் திருமணம் சீரும் சிறப்புமாக அமையும்.
மணமக்கள் இருவருக்கும் குருபலம் இல்லாத சமயத்தில் இவர்களுக்கு சுக்ரன், அல்லது 2, 7, 11 ம் அதிபதிகளின் தசாபுக்திகள் நடந்தாலும் திருமணம் செய்விக்கலாம். மணமக்களுக்கு அஷ்டம சனி காலத்திலும் விரய சனி நேரத்திலும் திருமணத்தை தள்ளிப்போடுவது சிறப்பை தரும். குருபலம் சூரியபலம் நல்ல திசாபுக்தி மற்றும் சனிபகவானின் தாக்கம் இல்லாத காலங்களை தேர்ந்தெடுத்த பின்னர் ஒரு நல்ல நாளை கீழ்கண்டவாறு தேர்வு செய்யலாம்.
சித்திரை வைகாசிஆனி ஆவணி மற்றும் தை மாதங்ளை தேர்வு செய்து இவைகளில் மலமாதம் இல்லாத மாதத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
2. வளர்பிறையின் துவிதியை, திரிதியை, பஞ்சமி, சப்தமி மற்றும் திரயோதசி உள்ள நாட்கள்.
3. இருவர் நட்சத்திரத்திற்கும் தாராபலம் ஏற்றார்போல் உள்ள நாட்கள்.
4. அன்றைக்கு சந்திரன் ஐன்ம ராசிக்கு 1, 3, 6, 7, 10, 11 ராசிகளில் இருப்பது.
5. இரு கண்ணுள்ள நாட்களான புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகள் சிறந்தது. ஒரு கண்ணுள்ள நாட்களான ஞாயிறு மற்றும் திங்கள் பாதி சிறந்தது. குருட்டு நாட்களான செவ்வாய் சனியை தவிர்ப்பது உத்தமம்.
6. அக்னி ராசிகளான சிம்மம் மற்றும் மேஷம் முகூர்த்த லக்னமாக இல்லாது இருப்பது.
7. முகூர்த்த லக்னத்திற்க்கு 7, 8 இடங்கள் திதி சூன்ய ராசிகளாக அமையாமல் இருப்பது.
8. முகூர்த்த லக்னத்திற்க்கு ஏழாமிடம் சுத்தமாக இருப்பின் நல்ல கணவன் மனைவி அமையும். எட்டாம் இடம் சுத்தமாயின் நீடித்த திருமணபந்தம். 12ம் இடம் சந்தோஷத்தை குறிக்கின்றது. ஆக 2-7-8ம் இடங்கள் சுத்தமாக இருக்க வேண்டும் மற்றும் எட்டாம் இடத்தை குரு அல்லது சுக்ரன் பார்க்கலமே தவிர இந்த இடங்களில்இவர்கள் யாரும் இருக்கக்கூடாது.
9. உப ஸ்தானங்களான 3, 6, 11 ல் தீய கிரகங்கள் இருப்பது வாழ்க்கையின் வெற்றி மற்றும் ஆதாயங்களை குறிக்கும்.
10. திருமணநாள் மணமக்களின் ஜென்ம நட்சத்திரமாகவோ, ஜென்ம கிழமையாகவோஅமையாமல் இருப்பது மிக நல்லது.
11. நவக்கிரகங்களில் அதிக சுபத்தன்மை பொருந்திய குருவும் சுக்ரனும் மூடம் என்கின்றஅஸ்தங்க தோஷம் அடைந்திருக்க கூடவே கூடாது.
12. ராகு காலம் மற்றும் ஏமகண்டம் போன்ற விஷ நேரங்களை ஒதுக்க வேண்டும். குளிகைகாலத்தைக் கூட தவிர்ப்பது சிறந்தது. காரணம் குளிகை காலத்தில் செய்யும் காரியங்கள்திரும்பவும் செய்ய நேரிடலாம்.
13. மொத்தம் உள்ள பதினோறு கரணங்களில் அசுப கரணங்களை ஒதுக்கவேண்டும். சித்தயோகத்தை மாங்கல்ய தாரணத்திற்கும் அமிர்தயோகத்தை சாந்தி
முகூர்த்தத்திற்க்கும் தேர்வு செய்தல் வேண்டும்.
14. “பஞ்சகம்” என்ற முறையில் நல்ல நாளை தேர்வு செய்ய வேண்டும். பஞ்சகமுறையில் பார்த்தால் வருடத்திற்க்கு மிக குறைந்த முகூர்த்த நாட்களே வரும்.எனவே இதற்கு பரிகாரமாக இரத்தினம், சந்தனம், எலுமிச்சை, தீபம் மற்றும் தானியம் முதலியவைகளை துணிமணிகளுடன் சேர்த்து தானம் செய்யவேண்டும்.
15. பெண்ணிற்கு மாதவிலக்குக்கு உரிய நாட்களாக அமையாமல் இருப்பது அவசியம்.ஏனென்றால் இதில் புனிதமான அக்னியை வார்த்து இறைவனை அதில் வரவழைத்து வணங்குகிறோம்.
16. திருமணம் செய்ய இருக்கும் நாளுக்கு 15 தினங்கள் முன்பு அவரவர் குல தெய்வத்திற்கு ஆராதனைகள் செய்து பிறகு முன்னோர்களை தியானித்துஅனுமதி பெறவேண்டும்.அப்படி அமையும் திருமண உறவு என்றும் நிலைத்திருப்பதுடன், ஒருவரையொருவர் விட்டுத் தராமல் அன்புடன் இல்லற இன்பம் பெறுவார்கள் என்பது உண்மை.
Wednesday, 21 November 2018
#விஷ்ணுவின் #10_அவதாரங்கள்_உணர்த்தும் #மனிதனின்_வாழ்க்கை
.
1.#மச்ச_அவதாரம் 🌳
தாயின் வயிற்றிலிருநது ரத்தமோடு ரத்தமாய் நீந்தி வந்து பிறந்தது மீன்.
2.#கூர்ம_அவதாரம் 🌳
மூன்றாம் மாதம் கவிழந்து தலை தூக்கி பார்ப்பது ஆமை.
3.#வராக_அவதாரம் 🌳
ஆறாம் மாதம் முட்டி போட்டு நான்கு கால்களில் நிற்பது பன்றி.
4.#நரசிம்ம_அவதாரம் 🌳
எட்டாம் மாதம் உட்கார்ந்து கையில் கிடைத்ததை கிழிப்பது நரசிம்மம் .
5.#வாமண_அவதாரம் 🌳
ஒரு வயதில் அடிமேல் அடி வைத்து நடப்பது வாமணன்.
6.#பரசுராம_அவதாரம் 🌳
வளர்ந்த பின் தாய் தந்தையருக்கு கடமையாற்றுவது.
7.#ராம_அவதாரம் 🌳
திருமணம் ஆகி ஒருவனுக்கு ஒருத்தி என கற்பு நிலையில் குடும்ப கடமையாற்றுவது.
8.#பலராம_அவதாரம் 🌳
இல்லறவாசியாய் உடன் பிறந்தோர், சுற்றத்தார், ஊர், உலகோர்க்கு கடமையாற்றுவது.
9.#கிருஷ்ண_அவதாரம் 🌳
முதுமையில் பற்றற்று இறை உணர்ந்து
அடுத்த சந்ததிக்கு உபதேசித்து வழிகாட்டுவது.
10.#கல்கி_அவதாரம் 🌳
இறைநிலையில் ஒன்றி கலந்து எல்லாவற்றிலும் தன்னையும், தன்னுள் எல்லாவற்றையும் காணும் அறிவின் முழுமையாம் முக்தி பெறுவது.
#ஓம்_நமோ_நாராயணா
9 grahas
These Nine celestial bodies are :
Surya(Sun)
Chandra(Moon)
Mangal(Mars)
Budh(Mercury)
Brihaspati(Jupiter)
Shukra(Venus)
Saturn(Shani)
Rahu(ascending Moon)
Ketu(descending Moon)
Sun was the principal deity (picture) the Centre of Universe with the #Grahas around him.
நவ பாஷாண (9 வகை விஷம் ) பழனி முருகன் உருவாக்கிய சித்தர் போகர்....
#SiddharBogar is described in Tamil texts as the creator of #PalaniMurugan (Kartikeya) with #Navpashnam, 9 poisonous herbs. His book #Bogar7000 speaks of his journey to China to teach Enlightenment.
His #NirvikalpaSamadhi is below the sanctum of #PalaniMurugan.
Tuesday, 20 November 2018
தமிழ்ச் சித்தர்கள் வகுத்த உயிரெழுத்து ஓகம்.
'தமிழ்' மெய்யியல் மட்டுமல்ல அறிவியலும் ஆகும்!
தமிழ் உயிரெழுத்துக்கள் (நெடில்) ஏழு . இந்த உயிர் எழுத்துக்கள் உடலில் எங்கிருந்து தோன்றி இயங்குகிறது என்பதை சித்தர்கள் கணித்துள்ளனர். ஆ முதல் ஒள வரை உள்ள ஓசைகள் உடலின் முக்கிய ஏழு நரம்பு மண்டலங்களை இயக்க வல்லது . இந்த ஏழு நரம்பு மண்டலங்களை சக்கரங்கள் என்றும் கூறுவர் . இவ்வோசைகளை நாம் ஒலிக்கும் போது இந்த சக்கிரங்கள் சுழல்கிறது. உயிர் ஒலியாகப்பட்டது காற்றின் மூலமாக இந்த சக்கரங்களை இயக்குகிறது. இவைகள் இசையாகவும் பரிமானம் பெறுகிறது . ஏழிசையும் இங்கிருந்தே பிறக்கிறது
தாளமும் பண்ணும் சேர்ந்தது தான் இசை. இந்த இசை இயற்கையில் உள்ளது . நம் உடலிலும் உள்ளது . நம் உடலில் எங்கிருந்து இது பிறக்கிறது என்பதை அறிந்த சித்தர்கள் , அந்த இயற்கை இசையின் ஊடாக தமிழ் உயிர் எழுத்துக்களை உலகிற்கு அறிமுகப்படுத்தினர் . ஆதலினாலே தமிழே உலகின் முதல் மொழியாகவும் ஆயிற்று.
சரி இந்த உயிரெழுத்து ஓகம் என்பது என்ன ?
ஓகம் என்றால் தமிழில் கூடுதல் என்று பொருள் . இந்த சொல் தான் மருவி வேற்றுமொழிகளில் யோகா/யோகம் என அழைக்கப்படுகின்றது.. உயிரும் மெய்யும் கூடும் கலைக்கே ஓகம் என்று பொருள். உடலும் மெய்யும் சேர்ந்தே இருந்தாலும் உயிரை தனியே நாம் உணர முடியாது.
உயிருக்கும் உடலுக்கும் இருக்கும் தொடர்பை இந்த உயிரெழுத்து ஓகக் கலையின் மூலமாக நாம் அறியலாம் .அவ்வாறு நாம் அறியும் போது உயிரையும் உடலையும் பாதுகாக்கும் உத்தியை நாம் தெரிந்து கொள்ளலாம் . அதற்காகத் தான் இந்த ஓகத்தை சித்தர்கள் வகுத்தனர் . தினமும் காலை மாலையில் நாம் இந்த ஒகத்தை. செய்து பழகி வந்தால் , நம் உடலும் உயிரும் புத்துணர்வு பெறுவதை அறியலாம் . இதை செய்வது வெகு எளிமை .
இந்த படத்தில் உள்ளது போல , மேலிருந்து கீழாக நாம் உயிரோசையை எழுப்ப வேண்டும் . முதலில் 'ஆ' என்ற ஓசையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் இழுத்து ஒலிக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக ஆ என்பதை ஆ ..ஆ.. ஆ ..ஆ ..ஆ ..ஆ ..ஆ.... என்று சுமார் 20 - 30 நொடிகள் வரை நாம் இழுக்கலாம் . அப்போது நம் மண்டையின் மேல் நடுப்பகுதி இயங்குவதை நாம் அறியலாம். இந்த இடத்தில் தான் அகரத்தின் ஓசை செயல்படுகிறது. இதுவே உடலின் முதல் பகுதியுமாகும்.
பின்பு 'ஈ' என்ற ஓசையை எவ்வளவு நீடித்து ஒலிக்க முடியுமோ அவ்வளவு நீளம் ஒலிக்க வேண்டும் . இது நம் மூக்கு , நெற்றிப் பகுதியில் உள்ள தசைகளை , நரம்புகளை இயக்குவதை அறியலாம் . அடுத்து 'ஊ ' என்ற ஒலி. இது நம் தொண்டை பகுதியை இயக்கும். இவ்வாறு இந்த உயிர் எழுத்துக்களின் ஏழு ஓசைகளை. பின்பு 'ஈ' என்ற ஓசையை எவ்வளவு நீடித்து ஒலிக்க முடியுமோ அவ்வளவு நீளம் ஒலிக்க வேண்டும் . இது நம் மூக்கு , நெற்றிப் பகுதியில் உள்ள தசைகளை , நரம்புகளை இயக்குவதை அறியலாம் . அடுத்து 'ஊ ' என்ற ஒலி. இது நம் தொண்டை பகுதியை இயக்கும். இவ்வாறு இந்த உயிர் எழுத்துக்களின் ஏழு ஓசைகளை முடிந்தவுடன் இந்த உயிர் வளர்க்கலையை பயின்று வந்தால் , நம் உடலும் உயிரும் புத்துணர்வு பெரும் . நம் உடலில் உள்ள உயிர் ஆற்றல் சிறப்பாக செயல்படத் தொடங்கும். எப்போதும் நாம் புத்துணர்வுடன் இருப்பதை உணரலாம். இதை உலகிற்கு கொடுத்த சித்தர்களுக்கும் நாம் நன்றி பகிர்வோம் .
Monday, 19 November 2018
Most important Gods!
Many of us would have seen Brahma in temples.
But how many of you have seen the other two? (Most important Gods!)
More than 1000 yrs old temple at Melakadambur!
Saturday, 17 November 2018
இந்து மதம்
பிள்ளையார் இருக்கும் வரைதான் அரசமரமும்.. அம்மன் இருக்கும் வரைதான் வேப்பமரமும்..
இருக்கும் !இயற்கை தான் இந்து மதம்...
இயற்கையை காக்க தான் இந்துமதம்.
Friday, 16 November 2018
டச்சுப் படையினரை அலறவிட்ட முருகன் சிலை. 350 ஆண்டுகளுக்கு முன்பு அரங்கேறிய மர்மம்
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்று திருச்செந்தூர். இந்த கோவில் உள்ள மூலவரின் சிலையை கிட்டதட்ட 350 ஆண்டுகளுக்கு முன்பு டச்சுப் படையினர் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கடல் கடந்து சென்ற அந்த சிலை, சில காலத்திற்கு பிறகு மீண்டு கோவிலை வந்தடைந்துள்ளது. இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது தெரியுமா? சிலையை கொள்ளையடித்த டச்சுப் படையினருக்கு நேர்ந்த கதி என்ன தெரியுமா? வாருங்கள் விரிவாக பார்ப்போம்.
1648 ஆம் ஆண்டு கடல் மார்கமாக வந்த டச்சுப் படையினர் திருச்செந்தூர் முருகன் கோவிலை கைப்பற்றினர். அந்த சமயத்தில் அப்பகுதியை ஆண்டு வந்த திருமலை நாயக்கர் ஒரு சிறந்த முருக பக்தர். டச்சுப் படையினர் கோவிலை கைப்பற்றிய செய்தி கேட்டு வெகுண்டெழுந்த திருமலை நாயக்கர், பெரும் படையை திரட்டிக்கொண்டு சென்று டச்சுப் படைகளை எதிர்த்தார். அனால் அம்முயற்சியில் அவர் வெற்றி பெறவில்லை.
திருக்கோவிலில் இருந்த நகைகளை கைப் பற்றியதோடு நில்லாமல், சண்முகர் – நடராஜர் ஆகிய இரு உற்சவ மூர்த்திகளையும் தங்க விக்கிரகங்கள் எனக் கருதி எடுத்துக் கொண்ட டச்சுப் படையினர், மீண்டும் கடல் வழியே தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். மேலும், செல்லும் வழியிலேயே உற்சவ மூர்த்திகளை உருக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.
அச்சமயம் கடல் நீரில் திடீரென்று பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. காற்றும் பெரும் வேகம் கொண்டு சூறாவளி என மாற, கப்பல் கடுமையாக ஆட்டம் காணத் துவங்கியது. டச்சுப் படையினர் மிகவும் கலங்கி ஏக மனதாக முடிவெடுத்து, தாங்கள் கைப்பற்றிய உற்சவ மூர்த்திகளை கடலில் சேர்த்துவிட்டனர்.
அந்த கணமே கடல் நீரின் கொந்தளிப்பு தணிந்து, காற்றின் வேகமும் சீர் அடைந்தது கண்டு டச்சுப் படையினர் பெரு வியப்புற்றனர். இந்த வரலாற்று நிகழ்வு டச்சு நாட்டின் ராணுவ குறிப்புகளிலும் பதிவு செய்யப் பட்டுள்ளது. இச்சம்பவம் நடந்து ஐந்து ஆண்டுகளுக்கு பின், உற்சவ மூர்த்திகளை மீண்டும் செய்விக்கும் பணி தொடங்கப் பெற்றது.
அதே சமயம், வடமலையப்பர் எனும் பக்தரின் கனவில் ஆறுமுகக் கடவுள் தோன்றி, உற்சவ மூர்த்திகள் கடலில் இருக்கும் இடத்தை காண்பித்து, அடையாளமாக ஒரு எலுமிச்சை கனியும் கருடப்பறவையும் தோன்றும் என்று அறிவித்து அருளினார். திருவருள் திறத்தை வியந்து போற்றிய வடமலையப்பர் கடலில் மூர்த்திகளை தேடும் பணியைத் துவங்கினார்.
குறிப்பிட்ட இடத்தில் எலுமிச்சைக்கனி மிதந்து வருவதையும் அதை கருடப் பறவையும் வானில் வட்டமிடுவதையும் கண்டு கடலுக்கு அடியில் நீந்திச் சென்று உற்சவ மூர்த்திகளை வெளிக் கொணர்ந்தனர்.
Thursday, 15 November 2018
நட்சத்திர அதிசயங்கள்: #கானோபஸ் எனப்படும் #அகத்தியர் #நட்சத்திரம்.
அகஸ்திய நட்சத்திரம் பூமியை நெருங்கி வரும் போதெல்லாம் கடல் நீர் சற்று வற்றுகிறது என அறிவியல் கூறுகிறது. அது உதிக்கும் போது அகத்திப் பூ மலர்கிறது. எண்ணற்ற அதிசயங்களைக் கொண்ட அகஸ்திய நட்சத்திரத்தைப் பார்ப்போம்!
கானோபஸ் என மேலை நாட்டினரால் அழைக்கப்படும் அகத்திய நட்சத்திரம் அபூர்வ ஆற்றல்களைக் கொண்டு வானில் ஜொலிக்கும் ஒன்று. இது 700 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது. கற்பனைக்கு அப்பாற்பட்ட தூரம் இது!இதன் மாக்னிட்யூட் 0.86,அகத்தியர் உள்ள ஆர்கோ நட்சத்திரத் தொகுதியில் மொத்தம் 21 நட்சத்திரங்கள் உள்ளன. ஆனால் இந்தத் தொகுதி கற்பனைக்கு எட்டாத தூரத்தில் இருந்தாலும் கூட அகத்தியர் மட்டும் தனித்து சூரியனைப் போல 13600 மடங்கு பிரகாசத்துடன் ஜொலிக்கிறார்.எல்லையற்ற தூரத்தின் காரணமாக இவரது பிரகாசத்தை நம்மால் உணர முடியவில்லை!இவருக்கு அருகில் உள்ள டோராடஸ் நட்சத்திரமே இவரது மனைவியான லோபாமுத்ரை என்பர் அறிஞர்.
27 நட்சத்திரங்கள் என்ற வரிசையில் சேராவிட்டாலும் கூட தன் தவத்தின் வலிமையால் தனியொரு இடத்தைப் பிடித்தவர் அகத்தியர்!சூரியன் சிம்ம ராசியிலிருந்து மறையும் போது கும்ப ராசி உதயமாகிறது. கும்ப ராசி உதிக்கும் அதே சமயம் அகத்திய நட்சத்திரமும் உதிக்கும். இவருக்கு கும்ப முனி என்ற பெயர் பொருத்தம் தானே!
***********************************************************
கடல் நீரைக் குடித்த கதை
அகத்தியர் கடல் நீரைக் குடித்த கதையை இன்றைய அறிவியல் மிகவும் பொருத்தமாக விளக்குகிறது. இதைப் புரிந்து கொள்ள சிறிது அடிப்படை வானவியல் அறிவு வேண்டும். சூரியன் மேற்கே மறைந்தவுடன் ஒரு நட்சத்திரம் கிழக்கே உதிப்பதை Acronycal rising அல்லது தினசரி உதயம் என்கிறோம். சூரியனின் அருகில் ஒரு நட்சத்திரம் வரும் போது சூரியனின் ஒளியால் அந்த நட்சத்திரத்தின் பிரகாசம் மங்கி அது கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விடுகிறது. சூரியனை விட்டுத் தொலைதூரம் சென்றவுடன் மீண்டும் பிரகாசம் பெற்று நம் கண்களுக்குத் தெரிகிறது. இப்படி ஒரு நட்சத்திரம் சூரியனின் அருகில் வந்ததால் ஒளி மங்கி நம் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து, பிறகு தள்ளிச் சென்றவுடன் ஒளி பெற்று மீண்டும் நம் கண்ணுக்கு முதலில் தெரியும் தினத்தை அல்லது அந்த நட்சத்திரத்தின் உதயத்தை Heliacal rising என்கிறோம்.இந்த முதல் உதயத்தை ஒட்டியே நம் முன்னோர்கள் அந்தந்த நட்சத்திரத்திற்கும் அதற்கான தெய்வங்களுக்கும் விழாவை ஏற்படுத்தினர்.ஒவ்வொரு நட்சத்திர உதயத்தையும் அப்போது ஏற்படுத்தப்பட்டு நடந்து வரும் விழாவையும் உற்று நோக்கினால் நமது முன்னோரின் கூரிய அறிவுத் திறனும் அவர்கள் வகுத்த நெறிமுறைகளின் அர்த்தமும் விழாவின் மகிமையும் எளிதில் புரியும்.
அகத்திய நட்சத்திரத்தின் வருடாந்திர உதயம் உஜ்ஜயினியில் புரட்டாசி மாதம் 23ம் தேதியன்று ஏற்படுகிறது (பண்டித ரகுநந்தனர் இதை புரட்டாசி 17ம் தேதி என்று குறிப்பிடுகிறார்) சூரியன் ரோஹிணியில் செல்லும் போது அகத்தியர் மறைகிறார். பின்னர் சூரியன் ஹஸ்தத்திற்கு வரும் போது பிரகாசமாகி மீண்டும் நம் கண்களுக்குத் தெரிகிறார்,அதாவது சுமார் நான்கு மாத காலம் சூரிய ஒளியால் அகத்தியர் நம் கண்களிலிருந்து மறைந்து விடுகிறார்.அகத்தியர் தோன்றியவுடன் மழைக்காலமும் சரியாக முடிகிறது.ஆகவே தான் மழைக்காலம் முடிந்தவுடன் தோன்றும் அகத்தியர் மழை நீர் சேரும் கடலைக் குடித்து விட்டார் என்று கூறப்பட்டது. வங்காளத்தில் இன்றும் கூட ஆகஸ்ட் -செப்டம்பரில் அகத்தியருக்கு இந்தப் பருவ மாறுதலை ஒட்டி விழா நடைபெறுகிறது. அகத்தியரின் வருடாந்திர உதயம் பற்றி வானவியல் நிபுணர் ஜே.பெண்ட்லி விரிவாக எழுதியுள்ளார்!
நவீன அறிவியல் ஆராய்ச்சியின் படி அதிசயிக்கத் தக்க உண்மை இப்போது வெளிப்படுகிறது. எப்போதெல்லாம் அகத்தியர் பூமியை நெருங்கி வருகிறாரோ அப்போதெல்லாம் கடல் நீர் ஆவியாகி சிறிது வற்றி விடுகிறதாம்!
அகத்தியர் பூமியை சமன் செய்த புராணக் கதை
இனி அகத்தியர் பூமியைச் சமன் செய்த கதைக்கு வருவோம்.உஜ்ஜயினி வழியாகவே பூமியின் முதல் தீர்க்க ரேகை செல்கிறது!. இந்த ரேகையை வைத்தே அனைத்துக் காலக் கணக்கீடுகளும் செய்யப்படுகின்றன. லாடிட்யூட் எனப்படும் அட்சய ரேகையின் படி அகத்தியர் இருக்கும் இடம் 80 டிகிரி தெற்கு.ஆகவே அட்சய ரேகையின் படி 10 டிகிரி வடக்கிற்கு மேல் இது தெரியாது.வடக்கே உள்ள உஜ்ஜயினி 24 டிகிரி தெற்கு என்ற நிலையில் உள்ள நகரம்.
வானவியல் நிபுணரான வராஹமிஹிரர் காலத்தில் மேஷப் புள்ளி அசுவனி நட்சத்திரத்தில் இருந்தது. அதற்கு 14400 ஆண்டுகளுக்கு முன்னர் சித்திரை நட்சத்திரத்தில் அது இருந்தது.சித்திரை நட்சத்திரத்தில் அகத்தியர் இருக்கும் போது அதன் தென் துருவ தூரம் 14 டிகிரி ஆகும்.அப்போது அது உஜ்ஜயினியில் தெரியவில்லை.ஏராளமான நட்சத்திரங்கள் உள்ள வடக்கு வானம் மட்டும் அப்போது தெரிந்தது. இதையே தேவர்கள் கூடிய திருக்கல்யாணக் கூட்டமாக புராணம் வர்ணிக்கிறது.கி.மு.7200ம் ஆண்டு வாக்கில் அகத்தியரின் தென் துருவ தூரம் 24 டிகிரி ஆனது.அப்போது அகத்திய நட்சத்திரம் உஜ்ஜயினியில் தெரிய ஆரம்பித்தது. இதையே அகத்தியர் தெற்கே வந்து சமநிலை ஏற்படுத்தினார் என புராணம் விவரிக்கிறது.
இந்த விளக்கத்துடன் இன்னொரு விளக்கத்தையும் வானவியலோடு புராணத்தை இணைத்து ஆய்வு செய்யும் அறிஞர்கள் நம் முன் வைக்கின்றனர்.ஒரு காலத்தில் வடக்கே துருவ நட்சத்திரமாக விளங்கிய அபிஜித் நட்சத்திரம் அந்த அந்தஸ்தை இழந்து தெற்கே அகஸ்தியர் அந்த அந்தஸ்தைப் பெற்றார். முதலில் வடக்கே இருந்த அபிஜித்தே அகஸ்தியர் என அழைக்கப்பட்டார். பிறகு இடைவிடாத வான சுழற்சி காரணமாக தெற்கே இருந்த நட்சத்திரம் துருவ நட்சத்திரமாக அந்தஸ்தைப் பெற்றவுடன் வடக்கே இருந்த அகத்தியர் தெற்கே வந்ததாகக் கூறப்பட்டது. பதவியில் இருப்பவருக்கே அந்தஸ்து என்ற ரீதியில் இந்த வானவியல் சுழற்சியைப் பார்த்தால் எளிதில் விவரம் புரியும்.ஆதியில் அபிஜித்தைச் சேர்த்து 28 நட்சத்திரங்களை நமது வேதம் உள்ளிட்ட நூல்கள் கூறுகின்றன. தன் அந்தஸ்தை அபிஜித் இழந்தவுடன் அது நீக்கப்பட்டு 27 நட்சத்திரங்கள் என்ற எண்ணிக்கை ஆகி விட்டது. அபிஜித் நமது மானுட வாழ்க்கையில் தனது செல்வாக்கைப் பயன்படுத்த முடியாத நிலைக்குச் சென்ற போது இந்த மாறுதல் ஏற்பட்டது!
‘அக’ என்றால் மலை என்று பொருள். ‘ஸ்தி’ என்றால் அமுக்குவது என்று பொருள். பூமி என்னும் மலையை இரு துருவங்களிலும் அமுக்கியவரே அகஸ்தியர் என்பதை புராணம் விரிவாக தன் பாணியில் பாமர மக்களும் எளிதில் புரிந்து கொள்ளுமாறு விளக்குகிறது. வானவியல் கணிதத்தை மேலே கூறிய படி டிகிரியை வைத்து தூரத்தைச் சொன்னால் இந்தக் கட்டுரையைப் படிக்கும் பலருக்கும் கூட பல முறை படித்தால் மட்டுமே இது புரியக் கூடும் என்ற நிலையில் அகத்தியரின் வரலாறு எளிமைப் படுத்தப்பட்டு சிறந்த கதையாக ஆனது சரி தானே!
அகத்தியர் நட்சத்திரம் உதிக்கும் போது அகத்திப் பூ மலர்வதால் அந்தச் செடிக்கு அகத்திக் கீரை என நம் முன்னோர் பெயர் சூட்டி மகிழ்ந்தனர். பதினெட்டு சித்தர்களில் முக்கியமானவரான அகத்தியர் நந்தி தேவருடன் ஒவ்வொரு மூலிகையையும் ஆராய்ந்து அதன் மருத்துவ குணங்களைத் தொகுத்து மனித குலம் நோயின்றி வாழ வழி வகை செய்துள்ளார்.
வானத்தை உற்று நோக்கி புராணங்களைத் தெளிவு படப் படித்து அறிவியலை அலசிப் பின்னர் கம்பனைப் படித்தால் நன்கு ரசிக்க முடியும்! கம்பன் ஆரண்ய காண்டத்தில் அகத்தியன் பற்றிக் கூறும் வாக்கியங்களான “தூய கடல் நீரை உண்டு அது துரந்தான்” என்பதை வானவியல் அறிவுடன் சேர்த்துப் படித்தால் அர்த்தம் புரிந்து மகிழலாம். அகத்தியனை இத்தோடு மட்டும் கம்பன் புகழவில்லை: தமிழ் தந்த முனிவரான அவரை “நிழல்பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங்கண் தழல் புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் தந்தான்” எனவும் புகழ்கிறான்.
குருமுனி, கும்பமுனி என அழைக்கப்படும் ஆசான் அகத்தீசரின் பெருமை மிகவும் உயர்ந்தது! அளவிடமுடியாதது.
Featured post
திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1
கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...
-
Ganesha - Global God in a Globalised World Few people in India know that innumerable Ganesha temples exist from the medieval era in far fl...
-
உலக இலக்கியங்களில் தலைசிறந்த இடத்தைப் பெற்றிருப்பவைகளில் ராமாயணமும் ஒன்று. மனிதன் தனது நல்ல ஒழுக்கத்தால் தெய்வாம்சம் பெறுவது எப்படி என்பதை ...