உலகெலாம் தொழ வந்து எழு கதிர்ப்பரிதி ஒன்று நூறாயிர கோடி
அலகெலாம் பொதிந்த திருவுடம்பு அச்சோ அங்ஙனே அழகிதோ அரணம்
பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம் பருவரை ஞாங்கர்வெண்திங்கள்
இலைகுலாம் பதணத்து இஞ்சிசூழ் தஞ்சை இராசராசேச்சரத்து இவர்க்கே.
- கருவூர்த்தேவர், திருவிசைப்பா, 9ம் திருமுறை
கருவூர்த்தேவர் இராஜராஜன் காலத்தியவர் என்பதற்கான ஆதாரம் இந்தப் பாடல்தான். அவரைப் பற்றி நமக்குக் கிடைக்கும் ஒரே தகவலும் இந்தப் பாடல்தான்
No comments:
Post a Comment