இந்த ஆண்டில், திருப்புமுனையாக அமைந்த புதிய மருத்துவக் கண்டுபிடிப்புகள், புதிய சிகிச்சை முயற்சிகள், புதிய ஆய்வுகளுடன்
ஒரு சிறு பயணம்..!!
#2018
#கொஞ்சும்_தமிழில்_கொஞ்சம்_மருத்துவம்!
👇👇👇
Prime என்ற தொழில்நுட்ப சாதனத்தின் மூலமாக,
தலைமுடியைக் காட்டிலும் மெல்லிய ஊசிகளைக் கொண்டு, மருந்துகளை செலுத்தும் முறையான "Needle free injections" இந்த புத்தாண்டுப் பரிசாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது..!
செல் ஃபோன்களை அழிப்பதற்கா ரோபோக்கள்..?
இல்லை.. சிகிச்சை அளிப்பதற்கு என்கிறது Robotic Surgery..!
சிக்கலான லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை, நுண்ணிய கண் அறுவை சிகிச்சை மற்றும் எலும்பு முறிவு சிகிச்சைக்கு என ரோபாட்டிக் சர்ஜரியின் கரங்கள் இந்த ஆண்டு நீண்டுள்ளது..
கருத்தடை மாத்திரை என்றாலே, பெண்கள் உட்கொள்ளும் 21-நாள் மாத்திரைகள் என்ற நிலைமாறி,
DMAU எனப்படும் Dimethandrolone undecanoate, ஆண்களுக்கான கருத்தடை மாத்திரையாக தற்போது உருவெடுத்துள்ளது..
பக்கவாதத்தால், கை கால்கள் செயலிழிந்த நோயாளிகளுக்கு, வரப்பிரசாதமாக அமைந்துள்ளது, கிளீவ்லன்ட் கிளினிக்கின் "Deep Brain Stimulation" என்ற மூளைக்கான தூண்டுதல் சிகிச்சை..
சர்க்கரை அளவைக் கண்டறிய, இனி க்ளுக்கோமீட்டரும், அதனுடன் கூடிய ஊசியும் தேவையில்லை..
நானோ தொழில்நுட்பம் கொண்டு உருவமைக்கப்பட்ட, ஸ்மார்ட் கான்டாக்ட் லென்ஸ்கள் மூலம் கண்ணீரின் சர்க்கரை அளவைக் கண்டறிய முடியும் என்கிறது தென் கொரிய உல்சான் மருத்துவக்கழகம்.
"சென்ற ஆண்டு இரத்தக் கொதிப்பு..
இந்த ஆண்டு இரத்தக் கொழுப்பு..!"
LDL என்ற வகையான கொலஸ்ட்ராலின் அளவை, நன்கு கட்டுப்படுத்தினால் இரத்தக் குழாய் அடைப்பை பெருமளவு தவிர்க்க முடியும் என்ற ஹார்வர்ட் ஆய்வு, அதன் இலக்கை 70-100mg% நிர்ணயித்துள்ளது..
#மஞ்சள்_மகிமை..
மஞ்சள் கிழங்கிலுள்ள Curcumin என்ற தாவரப் பொருள், கண்களின் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் என்பதால், Turmeric eye drops தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது லண்டன் யூனிவர்சிடி..!!
#மூட்டுமாற்றில்_மாற்றம்..
தண்டுவட அறுவை சிகிச்சைக்கு டைட்டானியம் implantகளுக்குப் பதிலாக, stem cells என்ற குருத்தணுக்களைக் கொண்டு, bioengineered discகுளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது பென்சில்வேனிய பல்கலைக்கழகம்..
#கேன்சருக்குப்_பிறகும்_குழந்தைப்பேறு..!!
கேன்சர் சிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் கதிர்வீச்சு மற்றும் கீமோதெரபியின் காரணமாக கருத்தரிக்க இயலாத பெண்களுக்கு, அவர்களது சினைமுட்டைகளை, பரிசோதனைக் கூடத்தில் வளரச் செய்து சாதனை படைத்துள்ளனர் அமெரிக்க மருத்துவர்கள்..
#முற்றிய_புற்றுக்கும்_சிகிச்சை
கேன்சர் கட்டிக்குள் இம்யூன் செல்களை செலுத்தி, தாறுமாறாக வளரும் செல்களைத் தடுக்கும்
ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது
ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம்.
ஏறத்தாழ 90 பில்லியன் செல்களை உடலில் செலுத்தும் இந்த முறை, ஆரம்ப கட்ட ஆய்வில் உள்ளது..
பேலியோ, கீட்டோ, அட்கின்ஸ் என எடைக் குறைப்பிற்கு பல்வேறு பரிந்துரைகள் இருக்கும்போது, "நானோ கருவியின்" மூலம்
வேகஸ் நரம்புகளுக்கு, மெல்லிய மின்னதிர்வுகளை ஏற்படுத்தி Hunger pangs என்ற வயிற்றுப் பசியை, மூளைக்குள் மறக்கச் செய்யும் முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது..
ஆஸ்துமா மற்றும் அலர்ஜி என்றால் காரணிகளை மட்டுமே தவிர்த்து வந்த நிலையில், IgE antibodiesகளைக் கட்டுப்படுத்தும் சிகிச்சை முறையை நியூசிலாந்து பல்கலைக்கழகம் மேற்கொண்டு, அதில் வெற்றியும் கண்டுள்ளது..
#மீண்டும்_தயிர்..!
Probiotic era இனி முற்றுப் பெறலாம்..
வயிற்றுப்போக்கு, இரைப்பை அழற்சி, நாட்பட்ட பெருங்குடல் அழற்சி, கல்லீரல் நோய்கள் என பலவற்றிலும் பயன்படுத்தப்படும், Probiotics உண்மையிலேயே அவ்வளவு பயனளிக்கின்றதா என்பது கேள்விக்குறியே..!!
#ஒற்றைத்_தலைவலி..
"இட்ஸ் கான்..
போயே போயிந்தி.."
மாதம் ஒருமுறை ஊசி மூலமாக அளிக்கப்படும், "எய்மோவிக்" ஒற்றைத் தலைவலியை உண்டாக்கும் Calcitonin related peptide அளவைக் கட்டுப்படுத்தி, அதன் தீவிரத்தை பெருமளவு குறைக்க உதவுகிறது என்கிறது அமெரிக்க FDA..
#நமக்கே_நமக்கு
கூகுள் வழங்கும் மருத்துவ ஆலோசனைகளையும், வாட்சப் மற்றும் ஃபேஸ்புக்கில் உலவும் மருத்துவப் பதிவுகளையும் அப்படியே நம்பும் நம் அனைவருக்கும், Medical Literature Cleansing Movement என்ற அளவுகோலை ஏற்படுத்தி, அதனைப் பயன்படுத்த அழைக்கிறது
யேல் பல்கலைக்கழகம்.
"உங்கள் இருதயத்தின் ஒவ்வொரு துடிப்பையும், நாங்கள் மனதில் வைத்துக் கொள்கிறோம்.."
என்று கூறும் தொழில்நுட்ப கடிகாரங்கள், இந்த ஆண்டின் ஃபேஷனாக உருவெடுத்துள்ளன..
மணிக்கட்டின் இரத்த நாளங்களைக் கொண்டு, இருதய துடிப்பின் எண்ணிக்கை, வேகம், ரிதம் மற்றும் ஈசிஜி வேவ் ஆகியவற்றை கணிப்பதோடு, ஆக்சிஜன் அளவு, எரிந்த கலோரிகள், தேவைப்படும்போது அலாரம் என AI கூடிய கைக்கடிகாரங்கள் இப்போதைய ட்ரெண்டிங்..
"மூக்கும் முழியுமாக"
இருக்க மட்டுமே இதுவரை முகசீரமைப்பு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில்,
முதன்முதலாக,, முக மாற்று அறுவை சிகிச்சை (Face Transplant), ஃபிரான்ஸ் நாட்டின் ஜெரோம் என்பவருக்கு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது..
தாயும் மகளும் ஒரே கருவறையில் பிறந்த அதிசய நிகழ்வான, கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலமாக, மீனாட்சி என்ற பெண்ணுக்குப் பிறந்த இந்தியாவின்..
ஆசியாவின்.. முதல் பெண் குழந்தையை இந்த ஆண்டு நாம் கொண்டாடிய போதே..
"செத்தும் கொடுத்தான் சீதக்காதி.." என மூளைச் சாவினால் இறந்த பெண்ணின் கர்ப்பப்பையைப் பயன்படுத்தி, மாற்று அறுவை சிகிச்சை மூலமாக குழந்தையை பிரசவித்துள்ளது பிரேசில் மருத்துவப் பல்கலைக்கழகம்..!!
-
2019 ஆம் ஆண்டை இன்னும் ஆரோக்கியமான ஆண்டாக மாற்றிட..
- காய்கறிகள், பழங்கள், தானியங்கள், குறைந்த கொழுப்பு இறைச்சியை உட்கொள்வோம்..
- தினமும் 30 நிமிட வேக நடை, வாரத்தில் இருமுறையாவது தசைகளுக்கான பிரத்தியேக பயிற்சியை மேற்கொள்வோம்..
- தண்ணீருக்கு மாற்று எதுவுமே இல்லை என்பதால், சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களுக்குப் பதிலாக தண்ணீரைப் பருகுவோம்..
- ஏழு மணிநேர உறக்கம் அவசியம் என்ற அளவுகோலை உருவாக்குவோம்..
- மது மற்றும் புகைப்பிடித்தலை இன்றே, இப்போதே நிறுத்திடுவோம்..
- சர்க்கரை நோய், இருதய நோய், புற்றுநோய் ஆகியவற்றை வருமுன் காத்திட, பரிந்துரைக்கப்படும் பரிசோதனைகளை தக்க இடைவெளிகளில் மேற்கொள்வோம்..
அனைவருக்கும்..
#இனிய_புத்தாண்டு_நல்வாழ்த்துகள்.
#2019
No comments:
Post a Comment