சிதம்பரம் நடராஜர் கோவில் ரகசியம் என்பது இந்த உலகின் முதல் விஞ்ஞானிகள் என்று சொன்ன கருத்து மேலும் பல ஆச்சரியங்களை தன்னுள் அடக்கிவைத்திருக்கும் கோவில் தான் சிதம்பர நடராஜர் கோவில் அறிவியல் மட்டும் அல்ல மருத்துவம், கணிதம், புவியியல் போன்ற பல ஆச்சரியங்களும் தன்னுள் கொண்டுள்ளது.
தமிழர்கள் செய்த அனைத்து செயல்களும் மிக திட்டமிட்ட செயல்பாடு தெளிவான சிந்தனை.
அவற்றில் ஒரு சில
சிதம்பரம் நடராஜர் கோவில் அமைந்திருக்கும் இடம் இந்த உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World’s Magnetic Equator ) இந்த பூமி சுழலும் மைய்ய அச்சு சிதம்பரம் நடராஜரின் கட்டை விரலே.
சிதம்பரம் நடராஜர் கோயிலின் 9 நுழைவு வாயில்களும் மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது.
சிதம்பரம் நடராஜர் கோவிலின் விமானத்தின்மேல் இருக்கும் பொற்கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).
இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது. இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.
3000 பாடல்களில் நமக்கு அனைத்து விசயங்களையும் சொன்ன திருமூலர் நமது திருமந்திரத்தில்
மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே
என்று கூறுகிறார், அதாவது மனித வடிவே சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே சிவனின் நடனம்”. என்ற பொருளைக் குறிகின்றது.
சிதம்பரம் நடராஜர் கோவிலின் “பொன்னம்பலம்” சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது. இது நம் உடலின் உள்ள இதயத்தை குறிப்பதாகும். இந்த இடத்தை அடைய ஐந்து படிகள் ஏறி செல்ல வேண்டும், இந்த படிகள் “பஞ்சாட்சர படி” என்று அழைக்கப்படுகின்றது, அதாவது “சி,வா,ய,ந,ம” என்ற ஐந்து எழுத்தே அது. “கனகசபை” பிற கோவில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனகசபையை தாங்க 4 தூண்கள் உள்ளன, இது 4 வேதங்களை குறிக்கின்றது.
சிதம்பரம் நடராஜர் கோவிலின் பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள் (CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.
சிதம்பரம் நடராஜர் கோவிலின் பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது. அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும், அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் “cosmic dance” என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.
அணுவின் அசைவும் நடராஜரின் நடனமும் ஒன்றாக கருதப்படுகிறது. அதனாலேயே அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்று திருமூலர் கூறியுள்ளார்.
God’s particle, Higgs Boson என்று பலவற்றை கண்டாலும் அது நடராஜரை தொடர்புபடுத்துகிறது, திருமூலரும் அப்படியே கூறுகிறார்.
பல பில்லியன் டாலர்கள் செலவில் , செர்ன் (CERN) என்ற ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையத்தில், பிரான்ஸ்-ஸ்விட்சர்லாந்து நாடுகளுக்கு இடையே, 574 அடி ஆழத்தில் 27 கி.மி. நீளம் உள்ள சுரங்கப்பாதையில் Large Hadron Collider ஒன்று உருவாக்கப்பட்டது. நடராஜர் தாண்டவமும் அணுவின் செயல்பாடும் சம்பந்தப்பட்டுள்ளது என்று நம்புவதால் அங்கே நடராஜர் சிலை வைத்துள்ளனர்.
நம் சித்தர் திருமூலர் இறைவனைப் பற்றி,
“அணுவின் அணுவினை ஆதிப்பிரானை
அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே”
கடவுளை, அணுவின் அணுவே என்று
பாடுகிறார். அதையே சிவமாகப் பார்க்கிறார். இந்த அணுவின் அணுவை இப்போது தான் விஞ்ஞானிகள் நெருங்கியிருக்கிறார்கள்.
விஞ்ஞானிகள் போஸான் என்று அழைப்பதைத் திருமூலர் ஈச(சா)ன் என்று அழைக்கிறார்.
இந்த ஹிக்க்ஸ் போஸானின் உருவம் என்ன?!! சிவனின் அளவைச் சொன்ன திருமூலர் சிவனின் உருவத்தை சொல்லாமலா இருந்திருப்பார்?
“கரந்துங் கரந்திலன் கண்ணுக்குங் தோன்றான்
பரந்த சடையான் பசும்பொன் நிறத்தான்
அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே”
இறைவனை, “அனைத்திலும் கலந்தும் கலக்காமலும் இருப்பவனே, கண்ணுக்குத் தெரியாமல் இருப்பவனே, பரந்த சடையுடையவனே , பசும் பொன்னிறத்தில் இருப்பவனே, நினைப்பவர்கெல்லாம் கிடைக்காதவனே, அனைவரையும் மயக்கும் வெண்ணிலவானவனே”
என்கிறார் திருமூலர்.
இணையதளத்தில் உலா வரும் தங்க நிறத்தில் படர்ந்த முடி போல காட்சி அளிக்கும் அந்த வடிவு தான் ஹிக்க்ஸ் போசோன் பார்ட்டிகிள் என்றால், அதைக் சிவமாகக் கண்டுவிட்டாரே திருமூலர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே.
“மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறுநா றாரயிரத்து ஒன்றே”
சிவனுடைய வடிவைச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு பசுவின் முடியை எடுத்து அதை நூறாகக் கூறிவிட்டு, பின்பு அதில் ஒன்றை எடுத்து ஆயிரமாகப் பிரித்து, பின் அதில் ஒன்றை நான்காயிரமாக பிரித்தால் அதில் ஒன்றே சிவனின் வடிவு என்று கூறுகிறார் திருமூலர்.
மேலும் பஞ்ச பூத கோவில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காளஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது.
ராசா துரியன்
காவியத் தலைவன்
No comments:
Post a Comment