1. நம்பியாரூரார்,
2. நங்கை பரவையார்,
3. திருநாவுக்கரசர்,
4. திருஞான சம்பந்தர்,
5. பெரிய பெருமாள்(இது தான் நீங்க தேடுற இராஜராஜர் சிலை),
6. பெரிய பெருமாள் நம்பிராட்டியார் உலகமாதேவி சிலை
7. சந்திரசேகர தேவர்,
8. ஷேத்ரபாலர்,
9. ஆடுகின்ற பைரவ மூர்த்தி,
10. சிறுத்தொண்ட நம்பி,
11. திருவெண்காட்டு நங்கை,
12. சீராளதேவர்,
13. ஆடவல்லான்,
14. ஆடவல்லான் நம்பிராட்டியார் உமா பரமேஸ்வரி,
15. மிலாடுடையார்,
16. ரிஷபவாகனதேவர்,
17. ரிஷபவாகனதேவர் நம்பிராட்டியார்
18. ரிஷபம்,
19. கணபதி
20. இலிங்கபுராண தேவர்
21. சிவபெருமானின் கல்யாண சுந்தரர் திருமேனி,
22. தஞ்சை அழகர்,
23. தஞ்சை அழகர் நம்பிராட்டியார்,
24. கணபதி(நின்ற நிலை),
25. பதஞ்சலித் தேவர்
26. ஆடவல்லார் நம்பிராட்டியார் உமா பரமேஸ்வரி,
27. தஷிணமேருவிடங்கர் நம்பிராட்டியார் உமா பரமேஸ்வரி,
28. தஞ்சைவிடங்கர் நம்பிராட்டியார் உமா பரமேஸ்வரி,
29. பொன்மாளிகை துஞ்சியதேவர்(சுந்தர சோழர் சிலை),
30. குந்தவை தம் அம்மையாக எழுந்தருள்வித்த திருமேனி( வானவன் மாதேவி சிலை)
31. பிச்சத்தேவர் திருமேனி,
32. சண்டேச பிரதாச தேவர்,
33. பஞ்சதேக மூர்த்தி,
34. தஷிணாமூர்த்தி,
35. சண்டேசர்
36. பிருங்கீசர்,
37. சூர்ய தேவர்,
38. கிராதார்ச்சுன தேவர் சிலை
39. காளபிடாரி திருமேனி,
40. உமாஸகிதர்,
41. உமா பரமேஸ்வரி,
42. கணபதி,
43. சுப்பிரமண்யர்,
44. வில்லானைக்கு குருக்களாக எழுந்தருள்வித்த திருமேனி,
45. துர்க்கா பரமேஸ்வரி.
இவை அனைத்தும் இராஜராஜ சோழரும், அவர்தம் தமக்கை குந்தவை தேவியாரும், அவர்தம் மனைவிகளும், பெருந்தரம், சிறுந்தரம், ஸ்ரீகாரியம் போன்ற பல்வேறு அதிகாரிகளும் எடுப்பித்த திருமேனிகள்.
இது எல்லாத்துக்கும் கல்வெட்டு ஆதாரங்கள் சிலைகளோட அளவுகளோடு துல்லியமாக இருக்கு இதில் ஒன்று கூட அங்கு இல்லை.
சிலைகளுக்கு உள்ள பொன் ஆபரணங்கள், விலை மதிப்பில்லா வைர வைடூரியம் போன்ற பல்வகை ரத்தினங்கள் பதிக்கப்பட்ட நகைகள் கிடைத்தற்கரிய ஆயிரக்கணக்கான நல்முத்துக்கள்னு லிஸ்ட் எடுத்தீங்கன்னா மயக்கம் போட்டு விழ போவது உறுதி இவ்வளவு ஏன் பெரிய விமானம் முழுதுமே பொன்னால் வேய்ந்திருக்கிறார் இராஜராஜர்.
மன்னர் கைப்பட்ட கண்பட்ட சிலைகளுக்கும் நகைகளுக்கும் விலை நிர்ணயம் யாராலும் செய்ய முடியாது 100 கோடி 200 கோடினு வாய்க்கு வந்த படி அளந்து விடாமல் காணாமல் போன சிலைகளை மீட்க வேண்டும்
தஞ்சை பெரிய கோவில் சிலை காணாமல் போன தமிழகத்தின் கேடு கெட்ட கேவலமான திராவிட அரசாட்சி.
இந்தியாவில் (குறிப்பாகத் தமிழகத்தில் இருந்து) திருடி விற்கப்படும் பழமையான சிற்பங்களின் உலக கறுப்பு சந்தை மதிப்பு 5 பில்லியன் டாலர் அதாவது கிட்டதட்ட ரூ.33000 கோடி.
https://t.co/EKwfWwjvGP
இந்தக் கோவில் மத்திய தொல்லியல் பாதுகாப்புத் துறையின் கீழ் வருகிறது. இதற்கும் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தமிழ்நாடு தொல்லியல் துறை என்று உங்கள் வலைப்பூவிற்கு பெயர் வைத்திருக்கிறீர்களே, இந்த இணைய தளத்தை தமிழக அரசா நடத்துகிறது?
ReplyDelete