Wednesday, 4 April 2018

பழநி கோவில் சிலை மோசடி வழக்கு : சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற எதிர்ப்பு


பழநி: 'பழநி முருகன் கோவிலில், ஐம்பொன் சிலை செய்ததில், தங்கம் மோசடி செய்தது குறித்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றக் கூடாது; ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தொடர்ந்து விசாரிக்க வேண்டும்' என, பக்தர்கள் வலியுறுத்திஉள்ளனர்.கடந்த, 2004ம் ஆண்டு, பழநி முருகன் கோவிலுக்கு, 200 கிலோ எடையில், ஐம்பொன் சிலை செய்ததில் மோசடி செய்ததாக, நிர்வாக அதிகாரியாக இருந்த, கே.கே.ராஜா, ஸ்தபதி முத்தையா ஆகியோரை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் கைது செய்தார்.இது தொடர்பாக, பழநியில் பொன் மாணிக்கவேல், டி.எஸ்.பி., கருணாகரன், இன்ஸ்பெக்டர் கார்த்தி குழுவினர் விசாரணை நடத்தினர். இதில், ஐம்பொன் சிலை தொடர்பான பல்வேறு முக்கிய விபரங்கள் சிக்கியுள்ளதாக தெரிகிறது.காப்பாற்ற முயற்சியா?மோசடி, ஏமாற்று தொடர்பான வழக்கு என்பதால், சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் இருந்து, சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, சில முக்கிய புள்ளிகளை காப்பாற்றவும், ஐம்பொன் சிலை வழக்கை இருட்டடிப்பு செய்வதற்காகவும் எடுக்கப்பட்டதாக, பக்தர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.இவ்வழக்கை விசாரித்த பொன் மாணிக்கவேல், 'காரணமானவர்களுக்கு தண்டனை வாங்கி தராமல் ஓயமாட்டேன்' என கூறி இருந்தார்.அமைச்சரின் உறவினர்இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, கே.கே. ராஜா, அமைச்சர் ஒருவரின் உறவினர். சில முன்னாள், இந்நாள் அறநிலையத் துறை அதிகாரிகள், முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு உள்ளதால், இவ்வழக்கை, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி, விசாரணையில் தொய்வு ஏற்படுத்தி, முக்கிய புள்ளிகளை காப்பாற்ற ஏற்பாடு நடப்பதாக புகார் கிளம்பியுள்ளது.பழநி ஞான தண்டாயுதபாணி சுவாமி பக்தர்கள் பேரவை செந்தில் குமார் கூறியதாவது:சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்றப்பட்ட ஆடிட்டர் ரமேஷ், கோவை சசி உள்ளிட்டோர் கொலை வழக்குகள், நீண்டகாலமாக நிலுவையில் உள்ளன. ஐம்பொன் சிலை செய்வதில், நவபாஷாண சிலையை கடத்தும் முயற்சியும் உள்ளதால், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, ஐ.ஜி., தான் விசாரிக்க வேண்டும். இல்லையெனில், இந்து இயக்கங்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம். விரைவில் நீதிமன்றத்தையும் அணுகுவோம்.இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...