#நாளந்தா
உலகில் முதன்முதலில் தோன்றிய பல்கலைக்கழகம்.
நாளந்தா பல்கலைக்கழகம் இந்தியாவின்
பீகார் மாநிலத்தின் மையப்பகுதியில் உள்ள நாளந்தா என்ற பகுதியில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் துவங்கப்பட்டது. நாலந்தா பாட்னாவிலிருந்து தென்கிழக்கே 55 மைல் தொலைவில் உள்ளது. இது புத்த மதக்கருத்துக்களை கற்பதற்கான சிறந்த இடமாக விளங்கியது.
1197ல் பக்டியார் கில்ஜி என்ற துருக்கியரின் படையெடுப்பில் முற்றாக அழிக்கப்பட்டது.
இப்பல்கலைக்கழகம் 14 ஹெட்டர் பரப்பில் அமைந்திருந்தது. இது புகழ் பெற்று இருந்த காலத்தில் திபெத், சீனா, கிரேக்கம், பாரசீகம் போன்ற நாடுகளில் இருந்து மாணவர்களும் அறிஞர்களும் இங்கு வந்து கல்வி கற்று உள்ளார்கள் .
கௌதம புத்தர் இவ்விடத்திற்கு வந்து சென்றதாக நம்பப்படுகிறது.
இது உலகில் முதன்முதலில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும்
அக்காலத்தில் இப்பல்கலைக் கழகத்தில் 10,000 மாணவர்களும் 1541 ஆசிரியர்களும் இருந்துள்ளனர். பல்கலைக் கழகத்திற்கான வருமானத்திற்காக 100 கிராமங்கள் வழங்கப் பட்டிருந்தன.
மீண்டும் புதுப்பொலிவுடன்
தற்போது நாளந்தா பல்கலைக்கழகம் 5 பெண்கள் உட்பட 15 மாணவர்களுடனும் 11 பேராசிரியர்களுடனும் இந்த பல்கலைக்கழகம் 29 ஆகத்து 2014 திங்கட்கிழமை முதல் தனது கற்பித்தலை புதுப்பொலிவுடன் தொடங்கியுள்ளது.
No comments:
Post a Comment