#உமாமகேசன்
அறுபத்து நான்கு மற்றும் இருபத்துநான்கு சிவத்திருமேனிகளில் ஒன்றாகும். முதற்பெரும் தம்பதியரான உமையும் சிவனும் அருகருகே அமர்ந்தருளும் திருக்கோலமே உமாமகேசத் திருக்கோலம் ஆகும்.
#உருவவியல்
மகேசன், சுகாசனத்தில் அமர்ந்து,வெண்ணீறு பூசிய மேனியும், மான் மழு, அஞ்சேல், அபயம் தாங்கிய நான்கு கரங்களும் கொண்டு, அ்ருகே
குவளை மலரேந்திய கரத்தினளாகக் காட்சிதரும் உமையவளை அணைத்தபடி அருட்காட்சி அளிப்பான்.
சில வடிவங்களில், ஈசனின் திருமடியில் அம்மை அமர்ந்திருப்பாள். கயிலையில் அம்மையும் அப்பனும் அளிக்கும் அருட்காட்சியே இந்தக்கோலம் எனப்படுவதுண்டு.
No comments:
Post a Comment