#மார்கழி நாள்-1.
🌸 திருத்தணிகை முருகன் எம்பாவை🌸
☃மார்கழி மாதம் என்றால் நினைவில் வருவது ஆண்டாள் பாடிய திருப்பாவை ஆனால் நம் தமிழ் கடவுள் முருகனுக்கும் பாவை பாடப்பட்டுள்ளது. இதனை *வ சு செங்கல்வராய பிள்ளை* பாடியுள்ளார் இது திருத்தணிகை முருகன் மீது பாடப்பட்ட தற்கால பாவை.
🌸மாலாலுங் காணரிய மன்னே! மறைமுதலே!நூலாலும் நோக்கரிய நுண்ணியனே! புண்ணியனே!வேலா! விசாகா! விமலா! விளங்குதண்டைக்காலா! கடம்பா! கருதுமடி யார்களநுகூலா! குமரா! குழகா! கிரிகுமரிபாலா! எனத்தணிகைப் பண்ணவனை யாம்வாழ்த்தமாலாநீ தூக்க மயக்கங் கொளாதெழுந்துபாலார் தடநீர்ப் படியேலோ ரெம்பாவாய்!🌸🌸
பொருள்: திருமாலும் காண்பதற்கு சிரமப்படும் மன்னவனே, நான்மறைகளின் முதற்பொருளே, நூலின் இழையை விட காண்பதற்கு சிறிய பொருள்களில் உறைபவனே, புண்ணியம் செய்பவற்கு கிட்டுபவனே, வேலவனே, விசாகத்தில் விழா கொள்பவனே, தூயவனே, உயர் ரத்தினங்கள் கொண்ட தண்டைகளை கால்களில் உடையவனே,
கடம்ப மரமாக நின்ற சூரனை கொன்றவனே, உன்னை எண்ணும் அடியார்க்கு ஏற்ப அருள்பவனே, குமரனே, குழை அணிந்தவனே,
மலைமகள் மைந்தனே, இவ்வாறு தணிகை மலை வாழும் முருகனை, நான் வாழ்த்த, மயக்கம் கொண்ட தூக்கத்தில் இருந்து எழுந்து, நீர் நிறை பொய்கையில் நீராட வாராய் பெண்ணே!!!என்று தோழி மற்றொருத்தியை அழைக்கிறாள்.
No comments:
Post a Comment