Wednesday, 20 December 2017

நடராசப் பத்து 3

#நடராசப்பத்து3

கடலென்ற புவிமீதில்
அலையென்ற வுருக்கொண்டு

கனவென்ற
வாழ்வை நம்பி,

காற்றென்ற மூவாசை
மாருதச் சுழலிலே
கட்டுண்டு நித்தம் நித்தம்

உடலென்ற கும்பிக்கு
உணவென்றயிரைதேடி

ஓயாமலிரவு பகலும்
உண்டுண்டுறங்குவதைக்
கண்டதேயல்லாது
ஒருபயனடைந்திலேனே !

தடமென்ற மிடி கரையில்
பந்தபாசங்களெனும்
தாபரம் பின்னலிட்டு

தாயென்று சேயென்று
நீயென்று நானென்று
தமியேனையிவ் வண்ணமாய்

இடையென்று கடைநின்று ஏனென்று
கேளாதிருப்பதுன் அழகாகுமோ

ஈசனே சிவகாமி நேசனே எனை
ஈன்ற தில்லைவாழ் நடராசனே .

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...