பரக்கிரமபாண்டியனின் ஆட்சி ஆண்டில் வெளியிட்ட (கி.பி.1319)காசு
பாண்டியரின் சில கல்வெட்டுகளில் வாளால் வழி திறந்தான் பணம்,வாளால் வழி திறந்தான் குளிகை என்னும் காசுகள் குறிப்பிடப்படுகின்றன. அந்த காசு இதுவாக இருக்கலாம் என்று நாணய ஆய்வாளர் திரு.ஆறுமுக சீத்தாராமன் அவர்களின் கருத்து.மிக அரிதாகவே இக் காசுகள் கிடைத்துள்ளன.
முதல் படம்.குத்துவாள் ஒன்றும், இரண்டு பக்கங்களிலும் சூரியனும், சந்திரனும் உள்ளது.(இப் படத்தில் அவை தெளிவாக தெரியவில்லை ) ழ என்ற தமிழ்
எழுத்து காணப்படுகிறது.
இரண்டாம் படத்தில்; நிற்கும் மனித உருவம் மற்றும் ப என்ற எழுத்தும் உள்ளது.(கால பழமையின் காரணமாக இரண்டாம் படத்தில் காசு தேய்ந்த நிலையில் உள்ளது.) வாளால் வழிதிறந்தான் காசு ஆய்வுக்குரியது என நாணய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்..
படங்கள் என் சேகரிப்பில் இருந்து.......
மயில்சுப்பிரமணியன்...
No comments:
Post a Comment