Monday 16 December 2019

வானத்தைத் தொடுமளவு உயரத்துக்கு ராமர் கோவில் கட்டப்படும்! அமித்ஷா சூளுரை

ஜார்கண்ட் மாநில பிரச்சாரத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அயோத்தியில் வானத்தை தொடும் அளவுக்கு ராமர் கோயில் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.


ஜார்கண்ட் மாநிலத்தில் ஐந்து கட்டமாக சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றுவருகின்றன. எனவே, ஜார்கண்ட்டில் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.


இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமித்ஷா, ‘ராம் ஜென்பூமி வழக்கை ஏன் உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்று கபில்சிபல் கேட்டார். எதற்காக இந்த வழக்கின் மீது உங்களுக்கு வயிற்றெரிச்சல்? அயோத்தி வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படவேண்டும் என்பது உலக முழுவதுமுள்ள இந்தியர்களின் 100 ஆண்டு கால கோரிக்கை.


உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்தவுடன் இதனைச் சொல்ல விரும்பினேன். வானத்தை தொடுமளவு உயரத்துக்கு மிகப் பிரம்மாண்டமான ராமர் கோயில் 4 ஆண்டுகளுக்குள் கட்டப்படும்’ என்று தெரிவித்தார்.


No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...