கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்பவருக்கு 'டிப்ஸ்' வழங்க வேண்டாம்: இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு
சென்னை: வீடுகளில் சமையல் காஸ் விநியோகம் செய்பவரிடம் கூடுதல் தொகை வழங்க வேண்டாம் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இண்டேன் காஸ் சிலிண்டர், தரம் மற்றும் எடை பரிசோதனை உறுதி செய்யப்பட்ட பின்பே, பொதுமக்களுக்கு முகவர்களால் விநியோகம் செய்யப்படுகிறது. காஸ் விநியோகம் செய்யும் போது, முகவர்களால் வழங்கப் படும்ரசீதில் சில்லறை விற்பனை விலைதெளிவாக அச்சிடப்பட்டிருக்கும்.
வாடிக்கையாளர்கள் சிலிண்டரைப் பெற்றுக் கொண்டபின் ரசீதில்அத்தாட்சி அளிக்கவேண்டும்.மேலும், சில்லறை விற்பனை விலைஎன்பது, வாடிக்கையாளரின் சமையல் அறை வரை சிலிண்டரைடெலிவரி செய்வதற்கான தொகை யாகும்
வாடிக்கையாளர்கள் ரசீதில் உள்ள விலைக்குமேல் டெலிவரி செய்பவரிடம் மேற்கொண்டு தொகை எதுவும் கொடுக்கவேண்டாம். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் 'டிப்ஸ்' வழங்குவதை என்றுமே ஆதரிப்பதில்லை.
எனவே ரசீதில் உள்ள சில்லறை விலைக்குமேல் தொகை கோரப்பட்டால், வாடிக்கையாளர் 0422-2247396 என்ற எண்ணில் இண்டேன் சேவை மையத்தை காலை 9.30 முதல் மாலை 5.15 வரை தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, விபத்து மற்றும் கசிவு போன்ற அவசர உதவிக்கு 1906 என்ற எண் மற்றும் இதர புகார்களுக்கு 18002333555 என்ற டோல் ஃப்ரீ எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment