வன்முறையைக் கையாண்டு மதம்மாற்றித் தழுவச் செய்வது ஒருவகை என்றால் கஷ்டத்தில் இருப்பவனுக்கு அதை நிவர்த்திச் செய்து அவனாகவே மாற்று மதத்தை நோக்கி நகரச் செய்வது மற்றொருவகை..
மக்களை ஆள்பவனைச் சுத்தி எப்பொழுதும் அரசியல் வலை சுற்றிப் பின்னப்பட்டிருக்கும். எதிரிகளோ இல்லை தன்னைத் தற்காத்துக் கொள்ள அவனாகவோ பின்னி வைத்திருக்கும் வலையில் அடுக்குகள் பல மர்மங்களைக் கொண்டிருக்கும் அதை அறிந்தவன் பல நேரங்களில் அதன் சூழ்ச்சியிலே வீழ்ந்து மடிவான்.
இன்றளவு பேசப்படும் ஹொய்சாள கட்டிடகலைக்குச் சான்றாக இருக்கும் பேலூர்,ஹளபேட்டில் இருக்கும் நான்கு சிற்பங்களின் ரகசியமும் அந்த ரகசியத்தைச் செதுக்க வேண்டிய காரணத்தைச் சொல்வது தான் பஞ்ச நாராயண கோட்டம்.
ஹொய்சாள மன்னனா விஷ்ணுவர்த்தனன் வைணவ பெண்ணான லக்ஷ்மிபிரபாவை விரும்பி மணம் முடித்தாலும் தான் இருக்கும் சமண மதத்தைச் சேர்ந்த ஷாந்தலாவையும் மணம் புரிய கொடுத்த நெருக்கடியால் அவளையும் மணந்து பட்டமஹிஷியாக்கிவிடுகிறார்.
ஷாந்திலாவிற்குப் பிறந்த மகளான வசந்திகாவை பிரம்மராட்சஷி பிடித்துக் கொண்டதை இராமானுஜர் வெளியேற்றியதால் சமணத்தில் இருந்து வைணவத்திற்கு மாறிய மன்னன் பிட்டிதேவன் என்ற பெயரை விஷ்ணுவர்த்தனன் என்று மாறியதுடன் மகள் வசந்திகாவிற்கும் வகுந்தளா என்ற பெயரை சூட்டி இருவரும் வைணவத்தை ஏற்கின்றனர்.
தான் வைணவத்திற்கு மாறியதற்குச் சாட்சியாக ஹொய்சாளத்தில் நாராயணனுக்கு ஐந்து இடத்தில் கோவில்களை எழுப்புகின்றார் மன்னன் அது தான் பஞ்ச நாராயண கோட்டம்.
தன் அழகில் கர்வம் கொண்ட ஷாந்தலா, மன்னன் லக்ஷ்மிபிரபாவின் வேண்டுகோளும் சமணதுறவிகளின் நெருக்கடியாலும் தான் விஷ்ணுவர்த்தனன் தன்னை மணந்தான் என்பதில் வெறுத்துப் போனவள் மொத்த வெறுப்பையும் தோழி லக்ஷ்மிபிரபாவிடம் காட்டுகிறாள்.அவளை சிறையில் அடைத்தது மட்டுமில்லாமல் அவள் பெற்ற மகனை நபும்சகியாக மாற்றியதும்,சமணத்தைத் துறந்து வைணவத்தை ஏற்ற அரசனுக்கு எதிராகத் திட்டங்களைத் தீட்டுவதுடன் உச்சகட்டமாகத் தன் மகள் வகுளாவையே விஷம் வைத்து கொல்வது என்று ஷாந்தலாவின் சூழ்ச்சிகள் நீண்டு கொண்டே செல்கிறது.
விஷ்ணுவர்த்தனனை விரும்புவதைத் தவிர வேறு எதைப் பற்றிய கவலைப்படாத லக்ஷ்மிபிரபாவிற்கு சங்கடங்கள் வந்தாலும் அவள் ஆசைப்பட்ட மாதிரியே அனைத்தும் நடந்தேறுகிறது.
சைவத்தைக் கொண்டாடும் சோழனால் வெளியேறிய இராமானுஜர் ஹொய்சாளா நாட்டில் அடைக்கலமாகி அங்கே வைணவத்தைத் தழைத்தோங்க செய்து காலத்தால் என்றும் நிலைத்திற்கும் கட்டிடத்தை எழுப்ப தூண்டுகோலாகிறார்.
அரசியல் விளையாட்டில் பெண்களின் மீதான வன்முறையே அவர்களின் அழிவிற்கு முழுமுதலாகி அதுவே நிலைப்பெற்று முற்றுப்பெறுகிறது.
ஷாந்தலாவின் எண்ணங்கள் அவளை மட்டும் பாதிப்புக்குட்படுத்தாமல் ஒரு சாம்ராஜ்ஜியத்தையே வீழ்த்திவிடுகிறது.
No comments:
Post a Comment