Monday, 12 November 2018

3ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாரத நாட்டு சரித்திரம்...!

இன்றைக்கு 3ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு
இராமர்
பாண்டவர்கள்
அரிச்சந்திரன்
சிபிச்சக்கரவர்த்தி
புத்தர் அசோகர்
இராணி சம்யுக்தை
சித்தூர் ராணி பத்மினி
மனுநீதிச்சோழன்
இராஜராஜசோழன்
திருமலை நாயக்கர்
சென்னப்ப நாயக்கர்
இளங்கோவடிகள்

இவர்களைப் பற்றிய ஏதாவது ஒரு சம்பவம் சரித்திரமாவது ?

ஆனால் 1952ல் அரசாங்கம் கொடுத்துள்ள ஆரம்ப பாடசாலை பாடத்திட்டத்திற்கு இணங்க மூன்றாம் வகுப்பு பயிலும் சிறுவர்களுக்கு இவர்களைப் பற்றிய சிறு சிறு சம்பவங்கள் தொகுத்த புத்தகம் தனியாரால் வெளியிடப்பட்டிருக்கிறது. (அதாவது அரசாங்கம் கொடுத்த பாடதிட்டத்தை வைத்து தயாரிக்கப்பட்டிருக்கிறது)

முகப்பு அட்டையிலேயே பாரத நாட்டு சரித்திரம் என்றுதான் பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்திய நாட்டு சரித்திரம் என்று அல்ல. அதுமட்டுமல்லாமல் வீரசிவாஜி, கிருஷ்ணதேவராயர், அசோகர் போன்றவர்களின் படங்களோடு அட்டையை அச்சிட்டிருக்கிறார்கள்.

1967க்குப் பிறகு இப்படியான பாடதிட்டங்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டது. அதன் பலன்தான் நம்முடைய முன்னோர்கள் யார், வரலாறு என்ன என்று நம்முடைய குழந்தைகள் தெரியாமல் வளர்ந்து வருகிறார்கள்.

திராவிட கட்சிகள் என்றைக்கு ஆட்சிக்கு வந்ததோ அன்றைக்கே நம்முடைய முன்னோர்கள், நம்முடைய வரலாறு போன்றவைகள் மறைக்கப்பட்டு மூளை மழுங்கடிக்கப்பட்டு சோற்றுப் பிண்டங்களாய் வளர்ந்து வருகிறோம்.

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...