Monday 24 September 2018

இந்து மதம் கூறும் மொழியின் நான்கு நிலைகள்

வார்த்தைகளின் ஒலி அமைப்பிற்கு சக்தி உண்டு என்று அறிந்த நம் முன்னோர்
மந்திரங்களையும், மறைகளையும் ஓத செய்தது  'சொல் ஒலி ஆக்க சக்தி' வழி நலம் பெறவே
இன்றய அறிவியலின் புரிதல் அதை அறிய தொடக்கி இருக்கிறது -- பாருங்கள் - கீழே உள்ள லிங்க் ல்.
ஒலியின் நான்கு நிலைகள் 
பரா
பச்யந்தி
மத்யமா
வைகரி
இவை ஒவ்வொன்றையும் பற்றிய ஆழ்ந்த வர்ணணைகள் எல்லாம் இந்து தர்மத்தின் சாஸ்திர ச்லோகங்களில் உண்டு.
அன்னை பராசக்தியே இவை அனைத்தின் ரூபமாகவும் இருக்கிறாள் என்று லலிதா ஸஹஸ்ரநாமம் சொல்கிறது
சீர்காழியில் ஞானசம்பந்த பெருமான் முதன் முதலில் ஐயனால் அருளப்பட்ட தங்க தாளங்களை தட்டி "மடையில் வாளை" எனும் பாடும் முன் அப் பொற்தாளங்களுக்கு ஓசை கொடுத்த எம்தாய் "ஓசை கொடுத்த நாயகியாக"சீர்காழி அருகே திருக்கோலக்காவில் வீற்று இன்றும் பேச்சு வராத குழந்தைகளுக்கு ஓசையை அருளி வருகிறாள்
இதைக் கொஞ்சம் விரிவாகப் பார்த்தால், வைகரி என்பது ஓர் எண்ணம் வார்த்தைகளாக வெளிப்படும் நிலை, மத்யமா அதற்கு முன் அது மனதில் உள்ள நிலை, பச்யந்தி என்பது அதற்கும் முன் மனதில் தோன்றும் நிலை. இவை எல்லாவற்றுக்கும் முந்தைய ஆதார நிலை பரா என்பது. தமிழிலும் இது உண்டு...
தொல்காப்பியர் கூறுகிறார்
“எல்லா எழுத்தும் வெளிப்படக்கிளந்து
சொல்லிய பள்ளி யெழுதரு வளியிற்
பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து
அகத்தெழு வளியிசை யறப நாடி
அளவிற் கோட லந்தணர் மறைத்தே”
இந்த நான்கு நிலைகளும் அந்தணர் மறையிலிருந்து அறியப்படவேண்டியவை என்கிறார்.
Letters=static=SIVAM
Sound=dynamic=SAKTHI.
Our divine mother "Osai koduththa Nayaki".
Her abode is "Thirukolakka" near Sirkazhi.
Still she blesses the stamaring childs and give fluent speach whose mothers prays before her.
இந்த லிங்க்கில் உள்ள வீடியோவை காணவும்.

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...