Saturday 22 September 2018

அசல் உத்தர் போர்…… பாகிஸ்தான் பீரங்கிகளின் சுடுகாடு பற்றி தெரியுமா?

அசல் உத்தர் போர்
பாக் டாங்குகளின் சுடுகாடு பற்றி தெரியுமா?
அசல் உட்டர் போர்
1965 போரின் உச்ச நேரம். 1965 போரில் இந்தியப் படைகளின் வெற்றிக்கும், மொத்த போரின் போக்கையும் மாற்றிய இந்திய இராணுவ வரலாற்றின் மாபெரும் கவச வாகன யுத்தம் பற்றி தெரியுமா?

பாகிஸ்தான் தளபதி ஆயுப் கான் இந்தியாவில் உள்ள அம்ரிஸ்டரை கைப்பற்றி இந்திய படைகளுக்கு வரும் சப்ளையை தடை செய்து இந்தியப் படைகளுக்கு படுதோல்வி ஏற்படுத்திட ஒரு தந்திரத்தை கையாண்டார் அல்லது அப்படி நினைத்துக் கொண்டு ஒரு திட்டத்தை வகுத்தார். அப்போது அவர் தாக்க நினைத்த இந்தியப் படை

காஷ்மீரில் நிலை கொண்டிருந்தது.
அந்த தாக்கும் திட்டம் பாகிஸ்தானின் முதல் தாக்கும் டிவிசனான ” பாகிஸ்தானின் பெருமை” ( ‘Pride Of Pakistan’) என்று அழைக்கப்பட்ட படைக்கு தெரிவிக்கப்பட்டு ,அவர்களை களமிறக்கியது.நன்றாக நிலைவில் கொள்ளுங்கள் இதன் குறிக்கோள் எதிர்பாராத நேரத்தில்    இந்தியப் படைகளை தாக்கி ,அந்த அதிர்ச்சியிலேயே இந்தியப் படைகளுக்கு சேதம் ஏற்படுத்தி சப்ளையை நிறுத்த வேண்டும் என்பதே.ஆனால் பாகிஸ்தானின் இந்த தாக்குதல் திட்டத்தை மிகக் கேவலமாக இந்திய இராணுவம் முறியடித்து, பாக் படைகளுக்கு கடும் சேதத்தை விதைத்தது இந்தியப் படைகள்.

அப்போது அமெரிக்காவின் உதவியுடன் உலகத்தின் மிகச் சிறந்த கவச வாகனமான பேட்டன் டேங்குகளை பாகிஸ்தான் கொண்டிருந்தது. ஆனால் இந்தியாவோ சீனப் போரில் கண்ட சோகமான முடிவுகளில் இருந்து தன்னை மீட்டு இராணுவத்தின் மீது கவனம் செலுத்திக் கொண்டிருந்தது. இராணுவ சீரமைப்பு நடைபெற்று   கொண்டிருந்த காலம்.அன்று 8 டிசம்பர் 1965, பஞ்சாபில் உள்ள காம் கெரன் பகுதியை தாக்க பாகிஸ்தானின் 220 பேட்டன் டாங்குகள் புழுதியை கிளப்பி வந்துகொண்டிருந்தது.( 1 ஆர்மர்டு டிவிசன் மற்றும் 11வது இன்பான்ட்ரி டிவிசன்) காம் கெரன் பகுதியை பாக் படைகள் இந்திய எல்லையை ஊடுருவி வந்துகொண்டிருந்தனர்.

மறுபுறத்தில் இதை எதிர்க்க காத்திருந்த இந்தியப் படைகளுக்கு Lt. General ஹர்பக்ஸ் சிங் தலைமை தாங்கியிருந்தார். இந்தியாவை தாக்க வந்த பாக் வீரர்கள் பலத்திலும்,டாங்க் பலத்திலும் இந்தியாவை விட அதிக படைபலம் பெற்றிருந்தது.
முடிவு Lt. Singh கையில், ஒன்று பாக் படைகளை எதிர்த்து போரிட  வேண்டும் அல்லது படைகளை திரும்ப பெற வேண்டும். யோசித்தார். அந்த நேரத்தில் மேஜர் ஜெனரல குர்பக்ஸ் சிங் படைகளை பின்வாங்கி (4வது மலைதள பிரிவு) அசல் உத்தர் என்ற இடத்தில் குதிரை லாடம் அதாவது யூ வடிவத்தில் படைகளை நிறுத்த ஆணையிட்டார்.

  உண்மையில்   இந்த குதிரை லாடம் யுக்தி பிரைகேடியர் தியாகராஜ் அவர்களின் மூளையில் உதித்த யோசனை.ஆகட்டும் பார்த்துவிடலாம் என களத்தில் இறங்கினார்கள். பாக் படைகள் இந்தியாவிற்குள் ஊடுருவி இந்தியக் கிராமங்கள் வழியாக வந்து கொண்டிருந்தது. Lt.சிங் அவர்கள் படைகளை அசல் உட்டர்   என்ற கிராமத்தில் “யூ” வடிவத்தில் (U-shaped அதாவது ஒரு இடத்தை முற்றிலும் சுற்றி வளைக்காமல் அரை பிறை வடிவத்தில் நிற்பது) தனது படைகளை நிலை நிறுத்தினார். இதன் மூலம் பாக் படைகளை மூன்று பகுதிகளிலிருந்தும் தாக்கலாம்.
மேலும் ஒரு முக்கிய இராஜதந்திர முடிவையும் செய்தார்.

அந்த கிராமத்தை சுற்றிலும் கரும்பு வயல்கள் ஏராளம்.லெட்.சிங் அவர்கள் தண்ணீர் வரவழைத்து அந்த கரும்பு வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சி அந்த பகுதியை சேறாக மாற்றினார்.நமது வீரர்களை அந்த கரும்பு வயல்களுக்குள் நிற்க வைத்தார்.அதாவது அந்த கரும்பு வயல்களுக்குள் தான் நமது வீரர்களும்,
வெளியே டாங்குகளும் யூ வடிவத்தில் நிறுத்தப்பட்டிருந்தனர்.நீண்ட கரும்பு பயிற்களுக்குள் நமது வீரர்கள் மறைந்து கொண்டனர்.

பாக் படை பரிவாரங்கள் அசல் உட்டர் கிராமத்தை நெருங்கின.பாக்கின் முதல் டிவிசன் , இந்தியப் படைகள் கண்ணில் படவில்லை பின் வாங்கிவிட்டனர் என நினைத்து  இந்தியப் படைகள் விரித்த வலையில் விழுந்தனர்.மூன்று பக்கம் இந்தியப் படைகள் இந்திய படைகள் மறைந்திருந்தது அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.பாக் படைகள் சரியாக அந்த நான்காம் ( திசைகள் நான்கு என்பதை மனதில் கொள்ளுங்கள்) உள்ளே இறங்கின.

கடினமான எடை கொண்ட பாக்கின் பேட்டன் .டாங்குகளால் கரும்பு வயல்களில் சேற்றில் சிக்கி அவர்களால் நகரமுடியவில்லை. இந்தியப் படைகள் தாக்குதலை தொடுத்தனர்.மரண அடி. குறைந்த படைகளை வைத்தே பாக்கின் 200க்கும் மேற்பட்ட டாங்குகள் சிதறடிக்க தொடங்கியது இந்தியப் படைகள். பாக் படைகளின் மிக   அருகிலேயே கரும்பு வயல்களின் உதவியுடன் மறைந்திருந்தே இந்திய வீரர்கள் கடும் தாக்குதல் நடத்தினர். 220 பாக் டாங்குகளில் 170 டாங்குகள் அழிக்கப்பட்டன. பல டாங்குகளை கைவிட்டு பாக் வீரர்கள் ஓடினர்.11 டாங்குகள் கைப்பற்றப்பட்டன. இந்திய டாங்குகள் சேதம் அடைந்தன.10 டேங்குகள் இழப்பு.

பாக் கமாண்டர் மேஜர் ஜெனரல் நாசிர் அகமது கான் கொல்லப்பட்டார். பாக்கின் முதல் கவச வாகன பிரிவின் ஆர்டில்லரி பிரிவின் 16வது பீல்டு ரெஜிமென்டில் லூட்டினன்டாக இருந்த பர்வேஸ் முசரப் இந்த போரை பார்த்துக் கொண்டிருந்தார்.தனது படைகள் கேவலமாக தோற்கடிக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருந்தார் .

இதே போரில் தான் அப்துல் ஹமீது அவர்கள் பரம் வீர் சக்ரா வென்றார்.
இந்தியப் படைகள் பெரும் வெற்றியை அடைந்தன. லெட் .சிங் அவர்களின் தந்திரம் மாபெரும் வெற்றியை தந்தது.அந்த இடத்திற்கு பேட்டன் டாங்குகளின் சுடுகாடு அல்லது பேட்டன் நகர் என பெயரிடப்பட்டது.

லெட்.சிங் அவர்களின் இந்த தந்திரம் பல நாடுகளால் அவர்களது இராணுவப் படைகளுக்கு இன்றும் கற்பிக்கப்படுகிறது.
இந்த போர் இரண்டாம் உலக போரில் நடைபெற்ற குர்ஸ்க் போருடன் ஒப்பிடப்படுகிறது.

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...