Friday 24 August 2018

யார் பிராமணன்? சில மூடர்களுக்கு...


1) வியாசர்

தாழ்ந்த குலத்தில் பிறந்து தகுந்த கல்வி கற்று பிராமணன் ஆனவர். 
இந்துக்களின் மகா புராணங்கள் என்று அழைக்கப்பெறும் பதினெண் புராணங்களையும் எழுதியவர். இதிகாசமான மகா பாரதத்தினை  எழுதியவர். இவர் வேதங்களை தொகுத்து வழங்கியதால் வேத வியாசர் என்றும் அழைக்கப்பெறுகிறார்.

2)வசிஷ்ட்டர்

நாடோடி குலத்தில் பிறந்து விஸ்வாமித்திரரால் அதரிக்கப்பட்டு கல்வி கேள்வியில் தேர்ச்சி பெற்றதால் பிராமணனாகி ஸ்ரீ ராம பிரானுக்கு குருவாகவும் இசுவாகு குலத்திற்கு குலகுருவாகவும் திகழ்ந்தவர். மேலும் மகாதேவர் விட்டுச்சென்ற வாயுபுத்திரர்களின் தலைவராகவும் பதவி உயர்வு பெற்றவர்.

பிரம்ம ரிஷி  ஏழு புகழ்பெற்ற சப்தரிசிகளுள் ஒருவர்.  வேத காலத்தில் வாழ்ந்ததாகக் கூறப்படும் மாமுனிவர்களுள் இவரும் ஒருவர். வேதங்களின் பல மந்திரங்களை இவர் உருவாக்கியுள்ளார். இவர் பேரைக்கொண்ட பல சுலோகங்கள் இருக்கு வேதத்தின் ஏழாம் மண்டலத்தில் உள்ளது. இருக்கு வேதத்தில் இந்த ஏழாவது மண்டலத்தில் இருக்கு 7.33 இல், பத்து அரசர்களின் மாபெரும்போர் என்னும் நிகச்சியில் இவருடைய குடும்பத்தாரும் இவரும் ஆற்றிய பணியைப் போற்றப்படுகின்றது. மாந்தகுலத்தைச் சேர்ந்த ஒருவரைப் புகழும் ஒரே சுலோகம் இதுவே என்பர்.

இவர் பெயரால் வழங்கும் நூல் வசிட்ட சம்கிதை (Vasishta Samhita).

3)விசுவாமித்திரர்.

க்ஷத்ரிய குலத்தில் பிறந்து கல்வி கற்பிக்கும் நோக்குடன் பிராமணன் ஆனவர்.

பண்டைய இந்தியாவின் மிகப்பெரும் முனிவராகக் கருதப்படுபவர். குசநாபரின் மகன். கௌசிகன் என்ற பெயருடைய மன்னன். வசிட்டரோடு  ஏற்பட்ட போட்டியின் காரணமாக, கடுமையான தவங்களைச் செய்து பிரம்ம ரிஷியானவர். காயத்ரி மந்தரம் உட்பட பழமையான ரிக் வேதத்தின் பல பகுதிகளை எழுதியவர்.

மேலும் விஷ்ணு வான பரசுராமர் விட்டுச்சென்ற குலமான மலயபுத்திரர் களுக்கு தலைவராகவும் பதவி உயர்வு பெற்றவர்.

#இங்கே பிராமணர் என்பது சாதி அல்ல. மூடர்களே உணருங்கள்.   கல்வி கேள்வியில் தேர்ச்சி பெற்று ஆசானாக உருவாகுபவனே அக்காலத்தில் பிராமணன்.   காலப்போக்கில் குருகுல கல்வி மறைந்த போது முன்னர் பிராமனநாக இருந்தவர்கள் தங்களின் மகன்களுக்கு போதித்து அவர்களை குருவாக உருவாக்கினார், அவர்களே தொடர்ந்து வழி வழியாக பிராமணர் களாகிப் போனார்கள்.

ஆனால் இப்போதும் வேதங்களை முறைப்படி பயின்று அதனை கடைபிடிப்பவர் எக்குலமானாலும் அவர்கள் பிராமண அந்தஸ்த்து பெறுவார்கள் என்பதே வழக்கம்.

மத துவேஷம் ஏற்படுத்தவே இவையெல்லாம் திக முக குழுக்களால் வேண்டுமென்றே மறைக்கப்பட்டு மழுங்கடிக்கப் பட்டது.

கல்வி கற்ற ஆசிரியர்களே பிராமணன்.
அதுதான் இந்து மதத்தின் அடிப்படை என்பதை
உணருங்கள். 
ராசா துரியன்

1 comment:

  1. மிகவும் அருமை .........ஆனால் தற்கால பிராமணர்கள் வருவாய் மிகவும் அதிகம் அதற்க்கு காரணம் நமது அறியாமையே ......கல்யாணம் சடங்கு போன்ற சுபநிகழ்ச்சிகள் அனைத்திற்கும் அவர்களை வைத்துதான் நிகழ்சிகள் நிகழ்கிறது .இந்தநிலை மாறவேண்டும்

    ReplyDelete

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...