மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம்நீ மறைநான்கின் அடிமுடியும்நீ
மதியும்நீ ரவியும்நீ புனலும்நீ அனலும்நீ மண்டலமிரண்டேழும்நீ, பெண்ணும்நீ ஆணும்நீ, பல்லுயிர்க்குயிரும்நீ, பிறவும்நீ
ஒருவநீயே, பேதாதிபேதம்நீ பாதாதிகேசம்நீ பெற்றதாய் தந்தைநீயே, பொன்னும் பொருளும்நீ யிருளும்நீ ஒளியும்நீ
போதிக்கவந்தகுருநீ, புகழொணாக் கிரகங்க ளொன்பதும்நீயிந்த புவனங்கள் பெற்றவனும்நீ எண்ணரிய சீவகோடிகளீன்ற வப்பனே என் குரைகளார்க் குரைப்பேன்,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராசனே.
No comments:
Post a Comment