#சக்ரதானமூர்த்தி
விஷ்ணு செய்த ஆயிரம் தாமரை மலர்கள் அர்ச்சனையில் மகிழ்ந்திருந்தார் சிவபெருமான். அத்தருணத்தில் ஆயிரம் மலர்களுக்கு ஒரு மலர் குறைவதை அறிந்த விஷ்ணு தன்னுடைய கண்ணைத் தாமரை மலராகக் கொண்டு அர்ச்சித்தார். இதனால் மகிழ்ச்சியுற்ற சிவபெருமான் தான் ஜலந்திரன் என்ற அசுரனைக் கொல்லப் பயன்படுத்திய சுதரிசனம் என்ற சக்கராயுதத்தினை விஷ்ணுவிற்கு கொடுத்தார். இந்த தருணத்தினை விளக்கும் திருவுருவம் சக்ரதான மூர்த்தியாகும். சக்கரத்தினைப் பெற்றுக் கொண்டமையினால் விஷ்ணு சக்கரபாணி எனவும் அழைக்கப்படுகிறார்.
No comments:
Post a Comment