Saturday, 9 December 2017

தழிஞ்சி - தழுவுதல்……!

#தழிஞ்சி - #தழுவுதல்

தமிழ் இலக்கணத்தில் தழிஞ்சி என்பது புறப்பொருள் திணைகளுள் ஒன்றான வஞ்சித் திணையின் ஒரு துறை அல்லது உட்பிரிவு ஆகும். "தழிஞ்சு" என்பது "தழுவுதல்" என்னும் பொருள் தருவது.

இங்கே தழுவுதல் என்பது உடலைத் தழுவுதலை அன்றி மறப்பண்பு தழுவுதல், வீரம் தவறாத மானத்தைத் தழுவுதல் போன்ற பொருள்கள் கொண்டது.

மதராசுப் பல்கலைக் கழகம் வெளியிட்ட தமிழ் லெக்சிக்கன், தழிஞ்சி என்பதற்கு "போரில் ஆயுதங்களால் தாக்குண்டு கேடுற்ற தன் படையாளரை முகமன்கூறியும் பொருள்கொடுத்தும் அரசன் தழுவிக்கோடலைக் கூறும் புறத்துறை" என்றும் "ஒரு வீரன் தனக்குத் தோற்றோடுவோர்மேற் படையெடாத மறப்பண்பினைக் கூறும் புறத்துறை" என்றும் விளக்கம் கூறுகிறது.

இதனை விளக்க, தனக்குத் தோற்றுப் புறமுதுகு காட்டும் பகைவர் மேல் கூரிய வாளினை வீசாத மறப் பண்பை விரும்பிச் செல்வது என்னும் பொருள்படும் பின்வரும் பாடல் புறப்பொருள் வெண்பாமாலையில் வருகிறது.

#அழிகுநர்_புறக்கொடை_அயில்வாள்_ஓச்சாக்
#கழிதறு_கண்மை_காதலித்து_உரைத்தன்று

#கான்படு_தீயின்_கலவார்தன்_மேல்வரினும்
#தான்படை_தீண்டாத்_தறுகண்ணன் - #வான்படர்தல்
#கண்ணியபின்_அன்றிக்_கறுத்தார் #மறம்தொலைதல்
#எண்ணியபின்_போக்குமோ_எஃகு
- புறப்பொருள் வெண்பாமாலை 51.

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...