#திரிபுராந்தகர்
தாரகாட்சன் ,
கமலாட்சன் , வித்யுன்மாலி என்னும் மூன்று அசுர சகோதரர்களை (திரிபுரர்) அழிப்பதற்காக எடுத்த கோலம்.
பரிபாடலில்
இறைவன் முப்புரம் எரித்த விரிசடைக் கடவுள் எனவும்,
புறநானூற்றில்
திரிபுரம் எரித்தவரும் நஞ்சுண்டவரும் சந்திரனைச் சூடியவருமான சிவன் என்றும் கூறப்படுகிறது.
கலித்தொகையிலும்
சிலப்பதிகாரத்திலும்
திரிபுரமெரித்த வரலாறு உள்ளது.
தேவாரப் திருப்பதிகங்கள் திரிபுரம் எரித்த செயல், அதற்கான காரணம், வில் ,நாண் , தேர் , தேவர்களுக்கும் அடியவர்களுக்கும் அருளியது பற்றிக் கூறுகின்றது.
இக்கடவுள் கடைச்சங்கத்தில் திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள் என்ற பெயரில் புலவராய் இருந்து தமிழ் ஆய்ந்ததாக இறையனார் களவியல் உரை கூறுகிறது.
பல்லவ பாண்டிய மன்னர்களின்
செப்பேடுகளும் கல்வெட்டுக்களும் (கி.பி.7 - 9) இச் செய்தியைக் கூறுகின்றன. மன்னர்கள் போரில் வெற்றி பெறுவதற்கும், வெற்றிபெற ஊக்கமளித்ததற்கும் காரணமாக இருந்தது.
இரண்டாம் பராந்தகன் “ஆற்றலில் திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளான சிவபெருமானுக்குச் சமமானவன்” என்று சாசனச் செய்தி குறிப்பிடுகின்றது.
No comments:
Post a Comment