பாதாளச் சாக்கடை மீது தமிழ் எழுத்துகளால் பொறிக்கப்பட்ட சலவைக்கல்! - அதிர்ச்சியில் கோவை
#Coimbatore
கோவையில், பாதாளச் சாக்கடையை மூட தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட சலவைக்கல் பயன்படுத்திய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது.
தமிழ் வாழ்க, தமிழை வாழ வைப்போம் என அரசு அலுவலகங்களில் மட்டுமே, போர்டுகளை வைக்கும் அரசு, உண்மையில் தமிழை வாழ வைப்பதில்லை. கடந்த சில நாள்களுக்கு முன்பு, புதுக்கோட்டை ரயில் நிலையத்தில், தமிழ் எழுத்துகளே இல்லாமல் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து எதிர்ப்புகள் எழவே, தமிழில் புதுக்கோட்டை என்று எழுதி வைக்கப்பட்டது.
இந்நிலையில், கோவை கணபதி பகுதியில் பாதாளச் சாக்கடை ஒன்றை மூட, தமிழ் எழுத்துகளால் பொறிக்கப்பட்ட சலவைக்கல் ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில், முருகக் கவுளின் பெருமைகள்குறித்து அருணகிரி நாதர் எழுதிய பாடல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம், கோவை தமிழ் ஆர்வலர்களைக் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணபதி அருகே உள்ள கோயிலிலிருந்து இந்தக் கல் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தமிழ் ஆர்வலர்கள் கூறுகையில், "பழமை, புதுமை என்தெல்லாம் இரண்டாவதுபட்சம்தான். முதலில் தமிழுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுக்க வேண்டும்" என்றனர்.
ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க நிதி உதவி அளித்தது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், அதற்கு முன்பு சொந்த மண்ணில் தமிழைக் காக்கவேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது
No comments:
Post a Comment