Wednesday, 29 November 2017

கழுவேற்றம்

#கழுமரம்

கழுவேற்றம் என்பது ஒரு விதமான மரணதண்டனை முறையாகும். இதற்கு பயன்படுத்தப்படும் மரம் கழுமரம் என்பர் . மிகக் கொடிய பாதகச் செயலைச் செய்பவர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்படும் .  "கழுவில் ஏற்றுதல்" என்னும் கொடிய வழக்கம் பண்டைய காலத்தில் பல இனங்களில் இருந்து வந்துள்ளது.

பொதுவாக கழு சாதாரணமாக மரத்தால் மேல்முனை ஊசிபோல கூர்மையாக இருக்குமாறு செய்து செங்குத்தாக நடப்பட்டிருக்கும்.  தண்டணைக்குறியவரை இதன் மேல் அமர வைத்துவிடுவார்கள். கழுமரத்தின் ஊசிமுனை சிறிது சிறிதாக உடலைத் துளைத்து தலைவழியே வெளியேறும். இதன் காரணமாக மெல்லத் துடிதுடித்து சாவார்கள். பின்னர் இறந்த உடல் கழுகுகளுக்கு இரையாகும்.

கழுவேற்றப்பட்டு இறந்தவர்களின் உயிர் அம்மரத்திலேயே உறைவதாக நம்பி அதனை அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வணங்கினர். கழுமரத்தில் முனி, கருப்பண்ணன் உள்ளிட்ட தெய்வங்கள் உறைவதாகவும் நம்பப்பட்டு அதற்கு ஆடு, கோழி உள்ளிட்டவை பலியிடப்படுகின்றன.

வரலாற்றில் கழுமரம் குறித்து நெடிய செய்திகளும் கோவில் சிற்பங்களும் ஓவியங்களிலும் உள்ளன. பாண்டிய மன்னன் கூன்பாண்டியன் எண்ணாயிரம் சமணர்களை கழுவேற்றினான் என்பது வரலாற்று நிகழ்வாகும்.

இதுபோல கொங்குநாட்டில் ஈரோடு நகர்  காளிங்கராயன் கால்வாய்க்கு அருகில் உள்ள அய்யனாரப்பன் கோவிலில் பனை மரத்தால் ஆன "கழுமரம்" உள்ளது . இக்கழுமரத்தை இங்குள்ள மக்கள்  "காத்தவராயன்" என்ற பெயரில் மக்கள் வழிபடுகின்றனர்.

1 comment:

  1. where are the below two photos to be found?

    ReplyDelete

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...