தமிழர்கள் சூரியனுக்கு சங்கராந்தியன்று நன்றி தெரிவிப்பதற்கு முன்னால், விவசாயத்தைச் செழிப்பாக்கிய பலராமனை வழிபடும் வழக்கம் கொண்டிருந்தனர். போகிப்பண்டிகை பலராமனுக்கே உரியது. இதற்கான சான்று பராந்தகப் பாண்டியனின் தளவாய்புரம் செப்பேடுகளில் கிடைக்கிறது (பொயு 9ம் நூற்றாண்டு)
வட்டெழுத்துகளில் அமைந்துள்ள இச்சாசனங்கள் ஆதிசேஷனின் அவதாரமான பலராமனை ‘புஜங்கம புரஸ்ஸர போகி என்னும் பொங்கணை’ என்று குறிப்பிடுகின்றன. கலப்பையைத் தாங்கியுள்ள பலதேவன் தமிழகத்தின் முக்கியமான தெய்வமாக ஒரு காலத்தில் இருந்திருக்கிறார்
No comments:
Post a Comment