கர்நாடகாவில் மாண்டியாவிற்கு அருகிலுள்ள ஆதகூர் என்ற ஊரில் உள்ள இந்தக் கல்வெட்டு ஒரு காட்டுப்பன்றியுடனான போரில் உயிரிழந்த நாயின் நினைவாக எழுப்பட்ட நடுகல் ஆகும். கன்னடத்தில் அமைந்துள்ள இது தரும் செய்தி சோழர்களுக்கும் ராஷ்ட்ரகூடர்களுக்கும் நடந்த தக்கோலப் போரைப் பற்றியது
இந்த நாயின் பெயர் காளி. கங்க மன்னன் இரண்டாம் பூதுகனின் செல்லப்பிராணி. பூதுகன் பராந்தகரின் புதல்வர் ராஜாதித்தரை யானைமேலிருந்து கொன்றதையும் அதனால் ராஷ்ட்ரகூடர்களுக்கு வெற்றி கிடைத்ததைக் கண்டு மகிழ்ந்த மன்னன் மூன்றாம் கிருஷ்ணன் பூதுகனுக்கு வனவாசி உட்பட பல பகுதிகளைப் பரிசாக அளித்ததை+
இந்தக் கல்வெட்டு விவரிக்கிறது. பூதுகனுக்கு உதவிசெய்த தளபதியான மானரேல இந்த நாயை அவனிடமிருந்து கேட்டுப்பெற்றான். ஆனால் காட்டுப்பன்றியோடு சண்டையிட்டு அது உயிரிழக்க நேரிட்டது. அதற்கு நடுகல் நட்டு மானியங்களும் அளித்திருக்கிறார் அந்தத் தளபதி.
No comments:
Post a Comment