Friday, 9 November 2018

வாசற்படி கற்களான வரலாற்று சின்னங்கள்! பாதுகாக்க முன்வருமா தொல்லியல் துறை?

வாசற்படி கற்களான வரலாற்று சின்னங்கள்! பாதுகாக்க முன்வருமா தொல்லியல் துறை?

#கோயம்புத்தூர் மாவட்டம் #பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், #கொங்கு வட்டாரத்தின் வரலாற்று தொன்மைக்கு சான்றாக எஞ்சியிருக்கும் #நடுகற்கள், விழிப்புணர்வு இல்லாமல் அழியும் அபாயத்ததில் உள்ளன!



நுாற்றுக்கணக்கான நடுகற்கள், புலிகுத்திகற்கள் பொள்ளாச்சியை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ளன! 
அவற்றின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாததால், பாதுகாக்க தவறிவிட்டனர். சில ஊர்களின் மட்டும் நடுகற்களை பல்வேறு பெயர்களில் கடவுளாக வழிபடுவதால், அவை பாதுகாக்கப்படுகின்ற

உதாரணமாக, ஆர்.பொன்னாபுரத்தில் உள்ள #நடுகல், செட்டி விநாயகர் கோவில் என மக்களால் வழிபடப்படுகிறது! 

#கள்ளிப்பாளையம் நடுநிலைப்பள்ளியில் பராமரிப்பின்றி கிடந்த #நடுகல், கடந்த சில காலமாக பள்ளி ஆசிரியர்களால் பராமரிக்கப்பட்டு, உடையப்பர், உடையம்மா என கடவுள்களாக கருதி வழிபட்டு வருகின்றனர்!


#வடுகபாளையம் ஆலமரத்தம்மன் கோவில் அருகே பராமரிப்பின்றி கிடந்த நடுகல்லை, இளைஞர்கள் பாதுகாத்து பராமரித்து "வேட்டைக்கார அப்பச்சி" என வழிபட துவங்கியுள்ளனர்! ஆனால், பாதுகாப்படும் நடுகற்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பம் தான்!


பராமரிப்பின்றி விடப்பட்டு, வீடுகளில் துவைக்கும் கற்களாகவும், வாசற்படி கற்களாகவும் மாறி சிதைந்து அழிந்தவைகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம்! 

இதனால், நடுகற்களின் பின்னணியில் உள்ள தொன்மை மற்றும் வரலாற்று தகவல்கள் யாருக்கும் தெரியாமலேயே அழிந்து விடுகிறது!

தமிழக / மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறை, #பொள்ளாச்சி பகுதியின் தொன்மை சின்னங்களை ஆய்வு நடத்தி, பாதுகாக்க வேண்டும்! 

அவற்றின் பின்னணியில் உள்ள வரலாற்று செய்திகளை முறையாக ஆவணப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்களும்,  வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்!

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...