இஸ்லாமிய மன்னர்களால் 17 முறை கொள்ளை அடிக்கப்பட்டு, ஒவ்வொரு முறையும் இடிக்கப்பட்ட சோமநாதபுரம் கோவிலை மீண்டும் சீரமைப்பதில் தனக்கு விருப்பமில்லை என்றும், இதனால் இந்து மதம் வளர வாய்ப்பு ஏற்படும் என்றும் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு கூறியதுடன், கோவில் திருப்பணி விழாவில் பங்கேற்க சென்ற அப்போதைய குடியரசுத் தலைவர் இராஜேந்திர பிரசாத்துக்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் ஓய்வு பெற்ற முன்னாள் அதிகாரிகள் கூறியுள்ளது தற்போது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுதந்திரத்துக்கு முன்னர் நடைபெற்ற இந்திய வரலாற்று நிகழ்ச்சிகளில் யாராலும் மறக்க முடியாத இரண்டு சம்பவங்கள் உண்டு. ஒன்று சோமநாதபுரம் கோயில் மீது இஸ்லாமிய மன்னர்கள் 17 முறை படையெடுத்து பல நூறு கோடி மதிப்புள்ள பொருள்களை கொள்ளை அடித்தது மட்டுமன்றி அந்த கோவிலை தரை மட்டமாக இடித்து தள்ளிய சம்பவம். அடுத்துஒ, நூற்றுக்கணக்கான மக்களை காக்கை, குருவிகளை சுடுவது போல சுட்டுக் கொன்ற ஜாலியன் வாலாபாத் படுகொலை. சோமநாதபுரம் சம்பவம் இஸ்லாமிய ஆட்சியாளர்களாலும், ஜாலியன் வாலாபாக் சம்பவம் இங்கிலாந்திருந்து வந்த கிறிஸ்தவ ஆட்சியாளர்களாலும் இந்துக்கள் மீது மிக கொடூரமாக நடத்தப்பட்ட சம்பவங்கள். இந்தியாவிலுள்ள இந்துக்களின் மனதில் ஆறாத தழும்புகளை ஏற்படுத்திய காயங்கள் இவை.
குஜராத்திலுள்ள சோமநாதபுரம் கோயில் இந்துக்களின் மிகவும் புனிதமான கோயில் மட்டுமன்றி, செல்வ வளம் பெற்ற கோவில். இந்த கோவிலின் முக்கியத்துவம் மற்றும் கொள்ளையடிக்கப்பட்டு இடிக்கப்பட்ட வரலாறு, அப்போது மதம் மாற மறுத்த ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டது, கோவிலை திரும்பவும் கட்ட மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஓரளவு சுருக்கமாக நாம் தெரிந்து கொள்வது நல்லது.
சோமநாதர் ஆலய சிறப்பும் அதன் அழிவும்
சோமநாதபுரம் சிவன் கோயில் இந்தியாவின் குஜராத்து மாநிலத்தின் தென்மேற்குக் கரையில், கிர்சோம்நாத் மாவட்டத்தில், பிரபாச பட்டினக் கடற்கரையில் அமைந்துள்ளது. இது இந்தியாவில் உள்ள 12 சோதிர்லிங்கத் தளங்களில் முதன்மையானது.
இசுலாமிய மன்னர்கள் பல முறை சௌராஷ்ட்டிர பகுதி மீது படையெடுத்து சோமநாதபுரம் கோயிலை ஆறு முறை அடியோடு இடித்து தரை மட்டம் ஆக்கிச் சென்றனர். சோமநாதரின் ஆலயத்தை இடித்த இசுலாமிய மன்னர்கள் பெயர்கள் பின்வருமாறு.
முதல் முறையாக கி.பி. 725-ல் சிந்து மாநில இசுலாமிய அரபு ஆளுனர் ஜூனாயத்தின் கட்டளைப்படி, உருவ வழிபாட்டை எதிர்க்கும் இசுலாமியப் படைகள், சௌராட்டிர தேசத்தை ஆண்டு கொண்டிருந்த, பிரதிஹர குல மன்னான இரண்டாம் நாகபாதர் காலத்தில் சோமநாதபுரம் கோயில் இரண்டு முறையாக இடிக்கப்பட்டது. கி.பி. 1025-ம் ஆண்டு டிசம்பர் மாதம், கஜினி முகமது சோமநாதபுரம் ஆலயத்தை முழுமையாக தரைமட்டம் ஆக்கி, அங்கிருந்த செல்வக்குவியல்களை அள்ளிச்சென்றதுடன், 50,000 இந்துக்களை கொன்று, 20,000 இந்துக்களை அடிமைகளாக இழுத்துச் சென்றான். ஆயிரக்கணக்கான இந்துக்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். சோமநாதபுரம் ஆலய சிவலிங்கத்தை உடைத்து, அக்கற்களை கஜினியில் உள்ள மசூதியின் படிக்கட்டுகளில் பதித்தான். மேலும் ஆலயத்தின் இரத்தின குவியல்கள், தங்கம், வெள்ளி மற்றும் சந்தன கதவுகளை கஜினி நகருக்கு எடுத்துச் சென்றான்.
24.02.1296-இல் குஜராத்தை ஆண்ட இராசா கரன் என்ற மன்னர் காலத்தில், அலாவுதீன் கில்ஜி சோமநாதபுர ஆலயத்தை இடித்து தரை மட்டம் ஆக்கினான். பின்னர் காம்பத் நாட்டின் இரண்டாம் கர்ண தேவ வகேலா மன்னரை கொன்று, அவரின் மனைவி கமலா தேவியை மதமாற்றம் செய்து மணந்து கொண்டான். கில்ஜி, 50,000 ஆயிரம் பேரைக் கொன்று, 20,000 பேரை அடிமைகளாக பிடித்துச் சென்றதுடன் ஆயிரக்கணக்கான கால்நடைகளையும் கவர்ந்து சென்றான். இந்த செய்தியை ஹாசன் நிஜாமைச் சேர்ந்த தாஜ்-உல்-மாசிர் என்ற வரலாற்று இஸ்லாமிய அறிஞரே தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். கி.பி. 1375-ல் ஜூனாகாத் சுல்தான், முதலாம் முசாபர் ஷா, உருவ வழிபாட்டினை அவமதிக்கும் பொருட்டு, சோமநாதபுரம் ஆலயத்தை இடித்து தரைமட்டம் ஆக்கினான். கி.பி. 1451-ல் ஜூனாகாத் சுல்தானாக இருந்த முகமது பேக்டா என்பவன் சோமநாதரின் ஆலயத்தை இடித்து தரை மட்டம் ஆக்கினான். கி.பி. 1701-ல் அவுரங்கசீப் சோமநாதபுர ஆலயத்தை இடித்து தரை மட்டம் ஆக்கிச் சென்றான்.
ஆலய சீரமைப்பும் வல்லபாய் படேலின் பங்கும்
மேற்கண்டவாறு இசுலாமிய வெறி பிடித்த மன்னர்களால் கொள்ளையடிக்கப்பட்டு, இடித்து தரைமட்டமாக்கப்பட்ட சோமநாதபுரம் ஆலயத்தை மீண்டும் 7 முறை சீரமைத்து கட்டியுள்ளனர். இதில் ஆறு முறை இடையில் இந்து மன்னர்களால் அவ்வப்போது புதுப்பித்து கட்டப்பட்டுள்ளது. கடைசியாக சீரமைக்கப்பட்டது 1783-ம் ஆண்டு குவாலியர் மன்னர் ஒத்துழைப்புடன் சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
1783-ஆம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட இந்திய நாடு சுதந்திரம் பெற்ற நாள் வரை இந்த ஆலயம் சீரமைக்கப்படாமல் தொடர்ந்து பாழ்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு வினோதம் என்னவென்றால் இடித்து தள்ளியவர்கள் இஸ்லாமிய மன்னர்களாக இருந்த போதிலும் அவர்களுக்குப் பிறகு இந்த நாட்டை கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள். அவர்கள் காலத்தில் யாரும் இந்தக் கோவிலை புனரமைத்து தரவுமில்லை, சீரமைக்க யாருக்கும் அனுமதி தரவுமில்லை. இதிலிருந்தே இந்துக்களை மதம் மாற்றுவதும், அவர்களிடம் கொள்ளை அடிப்பது மட்டுமே வந்தேறிகளின் நோக்கமாக இருந்தது என்பது கவனிக்கத்தக்கது.
ஆனால் அந்த வந்தேரிகளிலும் ஒரு நல்லவர் இருந்தார். அவர் 1842-ஆம் ஆண்டில் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த லார்டு எல்லன்பரோ இடிக்கப்பட்டுக் கிடந்த சோமநாதர் ஆலயம் குறித்த இந்து மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்ட அவர் கஜினி முகமதுவால் ஆப்கானிஸ்தானுக்கு எடுத்துச் செல்லப்பட்ட சோமநாதர் கோயிலின் சந்தனக் கதவுகளை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வர முயன்றார். இதனால் ஆங்கிலேயரின் பலவிதமான கண்டனங்களுக்கு ஆளானார். தமது தாய்நாட்டின் மதத்திற்கு துரோகம் செய்வதாகவும், சிவலிங்க வழிபாட்டுக்கு முக்கியத்துவம் தருவதாகவும் பலவிதமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார்.
1947-ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றதும் ஜவகர்லால் நேரு பிரதமரானார். சர்தார் வல்லபாய் படேல் துணை பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றிருந்தார். இந்தியா முழுவதும் 600 சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்தன. அவற்றை புதிய இந்தியாவுடன் ஓன்று சேர்க்கும் முயற்சியில் படேல் இரவு பகலாக ஈடுபட்டுக் கொண்டுருந்தார். உடன் படாத சில மன்னர்களின் இராஜ்ஜியங்களை வலுக்கட்டாயமாக சேர்த்துக் கொண்டிருந்தார். அப்போது, சோமநாதபுரம் ஆலயம் இருந்த சௌராஷ்டிரா பகுதி ஜுனகார் நவாப் வசம் இருந்தது. இந்தியாவுடன் அவரது இராஜ்ஜியத்தை இணைக்க படேல் தந்த அவகாசம் முடிவடைந்தது. நவாப்பை கைது செய்ய படேல் தயாரானார்.
ஆனால் 1947-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி ஜுனகார் நவாப் பாகிஸ்தானுக்கு தப்பி ஓடிவிட்டார். 1947 நவம்பர் 9 அன்று இந்திய ராணுவம் படேல் உத்தரவுப்படி ஜுனகாருக்குள் நுழைந்து கைப்பற்றியது. 1947-ஆம் ஆண்டு நவம்பர் 13-ஆம் தேதி ஜுனகார் நகருக்கு சென்ற சர்தார் படேலுக்கு அந்த பிரதேச மக்கள் அமோக வரவேற்பு அளித்தனர். அப்போது அங்குள்ள மக்கள் படேலிடம் சோமநாதர் ஆலயம் 165 ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் கிடப்பதாகவும், உடனடியாக அரசு ஆலய திருப்பணிகளுக்கு உதவ வேண்டும் என்றும், அது மட்டுமே தங்களது தற்போதைய தேவை என்று கூறி வலியுறுத்தினர். அங்கிருந்து டெல்லி வந்து சேர்ந்த சர்தார் பட்டேல் அமைச்சரவையை கூட்ட ஏற்பாடு செய்தார். சோம்நாத் கோவில் கட்டியெழுப்புவதற்கான முடிவு அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேறியது மற்றும் அதற்கான செலவினங்களை மாநில அரசு செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால் மகாத்மா காந்தி வலியுறுத்தலின் பேரில் மக்களே அதற்கான பணம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
வல்லபாய் படேலும், உணவு அமைச்சராக இருந்த கே.எம்.முன்ஷியும் இணைந்து பொது மக்களிடம் நிதி திரட்டி, சோமநாதரின் ஆலயத்தை மீண்டும் கட்டத் துவங்கினர். முதலில் பழைய சோமநாதபுரம் கோயில் இடிபாடுகளை அக்டோபர் மாதம், 1950-இல் அகற்றினர். சோமநாதபுரம் கோயிலை இடித்துக் கட்டிய இடத்தில் இருந்த மசூதியை சில மைல் தூரத்திற்கு அப்பால் இடம் மாற்றி அமைத்தனர். அப்போது தான் வல்லபாய் படேல் திடீரென காலமானார். புகழ் உச்சியில் இருந்த நேரத்தில் படேல் அவர்கள் காலமானது இந்தியாவை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியது. படேல் அவர்களின் தைரியம், நேர்மை, பொது நல பிரியம், உறுதியான மனம், சிறந்த நிர்வாகத்திறன் இவற்றைக் கண்ட பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர் உயிருடன் இருந்தவரை அவரின் முடிவுகள் எதையும் எதிர்த்ததில்லை. என்றாலும், ஜுனகார் நவாப் விஷயத்தில் படேலின் உறுதியான நடவடிக்கைகளில் நேரு கருத்து வேறுபாடு கொண்டிருந்ததாக படேலின் உதவியாளராக பணி புரிந்த அப்போதைய அரசு அதிகாரி வி.பி. மேனன் குறிப்பிட்டுள்ளார்.
ஆலய புனரமைப்புக்கு நேரு எதிர்ப்பு
அவர் மேலும் தனது கருத்துகளைக் கூறுகையில் நேரு நாடு முழுவதும் சாச்சா என்ற நல்ல பெயருடன் அழைக்கப்பட்டிருக்கலாம். ஆனால், உண்மையில் பெருமைக்குரிய மனிதராகவும் பெரிய மனிதராகவும் வெளியுலகப் பார்வைக்கு தெரியும் நபர்கள் தங்களது துதி பாடிகள் மூலமே அத்தகைய நற்பெயரை தக்கவைத்துக் கொண்டிருந்ததாகவும், வெற்றி பெற்றவரின் வரலாறு விசுவாசிகளால் எழுதப்பட்டது என்றும் நேரு குறித்து மறைமுகமாக சாடியுள்ளார். படேல் அவர்கள் மறைந்ததும் சோம்நாத் கோயிலின் மறு சீரமைப்பு பணிகள் பின்னர் அமைச்சரவை மந்திரி கே.எம்.முன்ஷியால் மேற்கொள்ளப்பட்டது, அவர் அறக்கட்டளை ஆலோசனை குழுவின் தலைவராகவும் ஆனார். இந்த நிலையில் 1951-ஆம் ஆண்டு கே.எம்.முன்ஷியிடம் ஜவகர்லால் நேரு “சோம்நாத் ஆலயத்தை மீட்டெடுக்க முயற்சிப்பது தனக்கு பிடிக்கவில்லை என்றும் இது இந்து மதம் மறுமலர்ச்சியுர வழி வகுக்கும் என்றும்” கூறி முன்ஷியின் முயற்சிகளுக்கு தடை ஏற்படுத்த நேரு முயன்றதாக வி.பி. மேனன் குறிப்பிட்டுள்ளார்.
நேருவை பொருட்படுத்தாத இராஜேந்திர பிரசாத்
ஆனால், முன்ஷி நேருவின் விருப்பத்தை இந்த விவகாரத்தில் பொருட்படுத்தாமல் தொடர்ந்து கோயில் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார். சோமநாதபுர கோயிலை மறுநிர்மாணம் செய்ய 1951 மே மாதம் இந்தியக் குடியரசுத் தலைவர் இராஜேந்திர பிரசாத் தலைமையில், புதிய கோயிலுக்கு அஸ்திவாரக்கல் நடப்படும் நிகழ்ச்சிக்கும், ஜோதிர் லிங்கம் பிரதிஷ்ட்டை செய்யும் நிகழ்ச்சிக்கும் முன்ஷி ஏற்பாடு செய்து, குடியரசுத் தலைவர் இராஜேந்திர பிரசாத் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். இதனால் கோபமடைந்த நேரு பல காரணங்களைக் கூறி இராஜேந்திர பிரசாத் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததாக முன்னாள் மூத்த இந்திய அதிகாரி மாதவ் காட்போல் தான் எழுதிய “The God who failed ” என்ற புத்தகத்தில் நேருவின் தலைமை பண்புகள் குறித்து மதிப்பிட்டு விமர்சித்துள்ளார். ஆனால், இராஜேந்திர பிரசாத் அவர்கள் நேருவின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் பெரும்பான்மை இந்து மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேருவுக்கு அத்வானியின் கடிதம்
இந்த காலகட்டத்தில்தான் நேருவின் செயல்களால் வெறுப்படைந்த தற்போதைய பா.ஜ.க முதுபெரும் தலைவர் எல்.கே.அத்வானி பின் வருமாறு ஒரு கடிதத்தை அன்றைய பிரதமர் நேருவுக்கு எழுதினர்.
அக்கடிதத்தில் “நேற்று நீங்கள் இந்து மதம் மறுமலர்ச்சி குறித்து உங்கள் பேச்சில் குறிப்பிட்டிருந்தீர்கள். அமைச்சரவை கூட்டத்திலும் சோமநாதர் ஆலயம் குறித்து பேசினீர்கள். இவ்வாறு நீங்கள் ஆர்வம் காட்டுவது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. நம் அனைவரது கூட்டு முயற்சியால் சோமநாதபுரம் ஆலயம் திரும்ப கட்டப்படுவது பெரும்பான்மை மக்களின் அழுத்தமான விருப்பத்தின் எதிரொலி ஆகும். இது சுதந்திரம் கிடைத்ததன் முழு மகிழ்ச்சியை தருகிறது. சோமநாதபுரம் ஆலயத்தில் பல மதத்தினருமே உள்ளே சென்று வழிபட்டுள்ளனர். இந்த நிலையில் நமது இந்து மதத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் மட்டும் கோயிலுக்குள் நுழைவதை சில சம்பிரதாய வாதிகள் விரும்பவில்லை. எனினும் இந்து மதத்தின் புனிதம் மற்றும் அதில் சொல்லப்பட்ட நல்ல கருத்துக்களை மட்டுமே உள்வாங்கி ஹரிஜனங்கள் உட்பட அனைத்து பிரிவு மக்களும் உள்ளே சென்று வழிபட செய்ய வேண்டும். இந்து மதத்தின் மகிமையை நான் உணர்ந்தவன். அந்த விருப்பத்தின் அடிப்படையில் நவீன நிலைமைகளின் கீழ் இந்தியா ஒரு மேம்பட்ட நாடாக மாறும் என்ற நம்பிக்கையிலும், நம் கடந்த காலத்திலும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நாம் நல்ல எதிர்காலத்தை எதிர்நோக்குகிறோம். பகவத் கீதையை பறித்து விட்டு இந்தியாவின் சுதந்திரத்தை மதிக்க முடியாது. ஏனெனில் கோடிக்கணக்கானோர் அதன் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.
அவர்களின் உணர்வை தூக்கி எறிந்தால் நமது வாழ்க்கையின் வடிவமைப்பே அழிந்து விடும். சோம்நாத் புனரமைப்பு பற்றிய எனது இடைவிடாத கனவு உண்மையாகி வருவதைப் பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது. அது என்னை கிட்டத்தட்ட உறுதிப்படுத்துகிறது – இந்த சன்னதி மூலம் நம் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடத்திற்கு மீண்டும் வருவதன் மூலம், நம் மக்களுக்கு மதத்தின் தூய்மையான கருத்தாக்கத்தையும், நமது பலத்தின் தெளிவான நினைவுகளையும் வழங்குவோம்.”
இவ்வாறு அத்வானி 68 ஆண்டுகளுக்கு முன்பு நேருவுக்கு எழுதிய கடிதத்தில் தனது மற்றும் தான் சார்ந்த அமைப்பின் உணர்வை புலப்படுத்தி இருக்கிறார். மேலும் இந்த கடிதத்தின் வாயிலாக நேருவுக்கு இந்து ஆன்மீகத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ள பெரும்பான்மை மக்களின் மனதை புண் படுத்தக் கூடாது என்பதையும், காலத்துக்கு ஏற்ற மாற்றங்களை பழமை முழுவதும் சாய்ந்து விடாமல் சீரமைப்பது குறித்தும் அத்வானி அறிவுரை கூறியுள்ளார்.
இந்த கடிதத்தில் இருந்தே நேருவுக்கும் அத்வானிக்கும் இடையேயான தலைமைப் பண்புகளை அறியலாம். நேரு இந்து ஆலயங்களை புதுப்பிக்க கூடாது என்கிறார். கோடிக்கணக்கான மக்களின் இது போன்ற உணர்வுகளை மதித்தால் அது இந்து மதம் வளர வழி ஏற்பட்டுவிடும் என்கிறார். அதே சமயத்தில், அவர் காலத்தில் மிகப்பெரிய சர்ச்சுகள் கட்டப்படுவது, கிறிஸ்தவ மிஷனரிகளால் மிகப்பெரிய சர்ச்சுகள் புதுப்பிப்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார்.
இன்னொரு பக்கம் அத்வானி தாங்கள் பிறந்த பழம் பெரும் பாரத மண்ணின் பெருமைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்கிறார். இந்து மதத்தின் உயர்ந்த கருத்துக்கள் மதிக்கப்பட வேண்டும் என்கிறார். இந்து பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்கிறார். அதே சமயம் நவீன காலத்துக்கேற்றவாறு பழம் பெருமைகள் கெடாமல் மாறிக்கொள்ளவும் வேண்டுமென்கிறார். ஹரிஜன மக்கள் மற்ற பிரிவினரைப் போல ஆலயத்துக்குள் செல்ல வேண்டும் என்கிறார்.
காந்தி விரும்பிய காங்கிரஸ் இல்லாத இந்தியா
மிகப்பெரிய கோடீஸ்வர வீட்டுப் பிள்ளையான நேருவுக்கு அரசியல் என்பது மிகப்பெரிய அதிகாரமிக்க பொழுது போக்கு இடமாகவே பயன்பட்டிருக்கிறது. எப்போதும் பெரும்பான்மை மக்களின் உணர்வு, உடனிருப்பவர்களின் அர்ப்பணிப்பு உணர்வு போன்றவற்றை அவர் கண்டு கொண்டதில்லை. இதனால் தான், மகாத்மா காந்தி “சுதந்திரம் பெற்றுத்தருவது மட்டுமே காங்கிரஸ் நோக்கம். அந்த நோக்கம் தற்போது நிறைவேறி விட்டதால் அந்த கட்சியை கலைத்து விடலாம்” என்றார். நேரு தலைமையிலான ஆட்சியினர் காங்கிரஸ் என்ற வார்த்தையை பயன்படுத்தி மக்களிடம் வாக்குகள் கேட்பதை அவர் எதிர்த்தே வந்தார்.
இது போன்ற கருத்துக்கள் நேருவுக்கு பிடிக்க வில்லை. சுயநலமற்ற வல்லபாய் படேல் போன்றவர்களையும் அவருக்கு பிடிக்காது. சுபாஷ் சந்திர போஸையும் அவர் அறவே விரும்பியதில்லை. அவருக்கு பிடிக்காதவர்களெல்லாம் எதிர்பாராத வகையில் திடீரென இறந்து போய் விட இந்த நிலையில் தமது குடும்ப சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் வாய்ப்பு அவருக்கு அன்றே யாராலும் தடுக்க முடியாத வகையில் கிடைத்து விட்டது. கோகலே, பாலகங்காதர திலகர் போன்ற மூத்த தலைவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, மகாத்மா காந்தி போன்ற சுயநலமற்ற தலைவர்களால் வளர்க்கப்பட்ட காங்கிரசுக்கும், தற்போதைய காங்கிரசுக்கும் இடையிலான வேறுபாட்டை மக்கள் தெளிவாக புரிந்து கொண்டு விட்டார்கள். அதனால் தான், காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற கோஷம் இப்போது முன்பை விட மிகவும் சப்தமாக கேட்கிறது.
No comments:
Post a Comment