Saturday, 10 November 2018

கிழக்கு கடற்கரை சாலை பங்களாவில் சிலைகள் புதைப்பு

சென்னை: கோவில் சிலைகளை திருடி, புதைத்து வைத்திருந்த, தொழில் அதிபர் கிரண் ராவ், சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பங்களாவிலும், சிலைகளை பதுக்கி, வேறு இடத்திற்கு மாற்றியது தெரியவந்துள்ளது.சென்னை, சைதாப்பேட்டையைச் சேர்ந்தவன், ரன்வீர் ஷா, 62. நடிகரும், தொழில் அதிபருமான இவன், அதே பகுதியில் உள்ள, பங்களாவில், பஞ்சலோகம் மற்றும் கற்சிலைகளை பதுக்கி வைத்திருந்தான். காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அடுத்த மோகல்வாடி; படப்பை அருகே கூழாங்கல் சேரியில் உள்ள, விவசாய பண்ணைகளிலும், கற்சிலைகள், பிரமாண்டமான கோவில் துாண்களை பதுக்கி வைத்திருந்தான்.அங்கு, செப்டம்பர், 27 முதல், 30 வரை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தி, சிலைகள் உட்பட, 223 கலை பொருட்களை மீட்டனர்.ரன்வீர் ஷாவின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருப்பவள், கிரண் ராவ், 52. தொழில் அதிபரான இவள், சென்னை, ராயப்பேட்டை, ஒயிட்ஸ் சாலையில், 'அமேதிஸ்ட்' என்ற, நட்சத்திர ஓட்டலை நடத்தி வருகிறாள். அவளுக்கு, சென்னை, போயஸ் கார்டன் அருகே, கஸ்துாரி எஸ்டேட்டில் பங்களா உள்ளது.அந்த பங்களா வளாகத்தில், 4 அடி ஆழத்தில், பஞ்சலோக சிலைகள், கற்துாண் களை புதைத்து வைத்திருந்தாள். அக்., 5, 6ல், ஜே.சி.பி., இயந்திரம் உதவியுடன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தோண்டி எடுத்து, சிலைகள் உட்பட, 24 கலைப்பொருட்களை மீட்டனர். நவ., 4ல், சென்னை, கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள, ரன்வீர் ஷாவின் நிறுவனத்திலும், போலீசார் சோதனை நடத்தினர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழங்கால பொருட்களை பறிமுதல் செய்தனர்.இந்த வழக்கில் சிக்கியுள்ள, ரன்வீர் ஷா, குஜராத்தில் பதுங்கி இருப்பது, போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அவனது தோழி, கிரண் ராவ், சமீபத்தில், சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, பங்களா ஒன்றை, 4 லட்சம் ரூபாய் மாத வாடகைக்கு எடுத்துள்ளாள்.அந்த பங்களாவில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளையும் பதுக்கி வைத்துள்ளாள். போலீசார் நெருங்குவதை அறிந்ததும், சிலைகளை வேறு இடத்திற்கு மாற்றி உள்ளாள்.இதுகுறித்து, ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் கூறுகையில், ''கிழக்கு கடற்கரை சாலை பங்களாவில் இருந்து, சிலைகளை வேறு இடத்திற்கு, கிரண்ராவ் மாற்றியது பற்றி துப்பு துலக்கி வருகிறோம். விரைவில், அந்த இடத்தை கண்டுபிடித்து விடுவோம்,'' என்றார்.
நன்றி தினமலர்

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...