Monday, 1 October 2018

இந்து மதத்தின் மீது மட்டும் ஏண் இந்த தாக்குதல்கள்??

நண்பன் ஒருவன்
நம் மதத்தின் மேல் இடி மேல் இடியாக நடக்கின்றதே!!
1) ஓரின சேர்க்கை தவறில்லை என்கிறார்கள்
2) சபரிமலைக்கு பெண்கள் போகலாம் என்கிறார்கள்
3) திருமணத்திற்கு வெளியில் தொடர்பு வைத்துக் கொள்ளலாம் என்கிறார்கள்
4) யார் வேண்டுமானாலும் இந்துமதத்தைப் பற்றி எதை வேண்டுமானாலும் எழுதினால், பேச்சு/கருத்துச் சுதந்திரம் என்கிறார்கள்
5) சங்கராச்சாரியாரை பொய் வழக்கு பொட்டு கைது செய்கின்றார்கள்.  மாற்று மதத்தவன் தவறு செய்தான் என்று நிரூபித்தும் ஒன்றூம் செய்வதில்லை
6) வினாயக சதுர்த்தியின் போது ஊர்வலம் கூடாது என்கிறார்கள்

7) தாமிரபரணி புஷ்கரம் செய்யக் கூடாது என்கிறார்கள்
8)தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கக் கூடாது என்கிறார்கள்

இப்படி தொடர் தாக்குதல் நடக்கின்றதே!! நம் நாட்டில் நமக்கே வஞ்சனை செய்கிறார்களே!! என்று மிகுந்த வருத்தப்பட்டான்.

அவரிடம் நான் சொன்னேன்.  சந்தோஷப்பட வேண்டிய விஷயம்தானே என்றேன்!!“

என்ன சார் இப்படி சொல்றீங்க!” என்றார் சற்று ஆச்சரியம் கலந்த கோவத்துடன். 

இதைப் போன்ற தாக்குதல் நம் சனாதன தர்மத்தில் வெகு காலங்களாகவே நடந்து வரும் ஒன்றுதானே.  இதைத்தானே இதிஹாச புராணங்கள் நமக்குச் சொல்கின்றன என்றேன்!!   எத்தனையோ அரக்கர்கள், ரிஷிகளின் தவத்தை கெடுக்க முற்பட்டனர்

என்று நாம் படிக்கின்றோம்.  அப்பொழுதெல்லாம் சில ப்ரம்ஹா/இந்திரன்/ருத்திரன்/முருகன்/பெருமாள் என்று பல அவதாரங்கள் எடுத்து தர்மத்தை நிலை நாட்டியது நமக்குத் தெரியும்.

கீதையில், 4ஆம் அத்தியாயத்தில் 7-8ஆம் ஸ்லோகங்களில்.

யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர் பவதி பாரத அப்யுத்தானம் அதர்மஸ்ய

ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்|| (4-7)

பரித்ராணாய ஸாதூநாம் விநாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய  ஸம்பவாமி யுகே யுகே|| (4-8)

என்பது இந்த இரண்டு ஸ்லோகங்கள்.  இதன் அர்த்தம்

“எப்பொழுதெல்லாம் தர்மம் குலைகிறதோ அதர்மம் தலை விரித்து ஆடுகின்றதோ, அப்பொழுதெல்லாம் தர்மத்தை.  நிலைநாட்டுவதற்கும், தீய்வர்களை அழிப்பதற்கும், சாதுக்களைக் காப்பதற்கும் நான் ஒவ்வொரு யுகத்திலும் அவதறிக்கிறேன்” என்று ஸ்ரீ க்ருஷ்ண பரமாத்மா சொல்கிறார்.

இன்று அதர்மம் தலைவிரித்து ஆடுவதை நாம் பார்க்கிறோம்.  ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் அல்லவா.   இது ஒரு பக்கம்.  ஆனால் மறுபக்கத்தில் என்ன இருக்கின்றது என்று கீதை சொல்வது நமக்கு சந்தோஷத்தைக் கொடுக்கின்றது.  ஏனென்றால், பெருமாள் அவதரிக்கும் நேரம் வந்துவிட்டது என்பது தெரிகின்றது அல்லவா.  பெருமாளை தரிசிக்கும் பாக்கியம் ஸாதுக்களுக்கு கிட்டப் போகின்றது.  அது நல்ல காலம் தானே!!

அதோடு, ஸநாதன தர்மத்தின் குறிக்கோளே ஒவ்வொரு ஆத்மாவும், மோக்ஷம் பெறுவதே.  அந்த மோக்ஷத்திற்கு தடையாக இருப்பது ஒருவர் செய்யும் புண்ணிய பாவங்கள்.   பாவத்தை சம்பாதிக்க நாம் அஞ்சுகிறோம்.  பாவம் என்பது என்ன?

வேதத்தில் பாவம் என்றால் என்ன என்றும் புண்ணியம் என்றால் என்ன என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

புண்ணியம்/பாவம் என்பது என்னவென்றால்
1) செய் என்று சொன்னதை செய்வது - #புண்ணியம்
2) செய்யாதே என்று சொல்வதை செய்யாமல் இருப்பது- #_புண்ணியம்
3) செய் என்று சொன்னதை செய்யாமல் இருப்பது -#_பாவம்
4) செய்யாதே என்று சொன்னதை செய்வது -#_பாவம்

இப்பொழுது ஒரு கோவிலுக்கு பெண்கள் போககூடாது என்று
சொன்னால் போகாமல் இருப்பது #புண்ணியம்.  போனால் #பாவம்.  அல்லவா?!!

அப்பொழுது போகுபவர்கள் கவலைப் படவேண்டுமே ஒழிய, மற்றவர்கள் எதற்குக் கவலைப் படவேண்டும்.

ஆகமங்களில் மாதவிடாய் உள்ளவர்கள் கோவிலுக்குள் போகக்கூடாது என்று சொல்லி உள்ளது.  வாசலில் ஒரு காவலாளியை வைத்து இதை சோதித்து உள்ளே விடுவது சாத்தியமில்லாத ஒன்றல்லவா!!

நம் சனாதன தர்மம், #தனி_மனித_ஒழுக்கம் குறித்தது.  யாரும் எதையும் செய்யலாம்.  ஆனால் அது வேதத்திற்கு உட்பட்டு இருத்தல் வேண்டும்.  அவ்வளவே.  அவரவர் அவரவர் ஒழுக்கத்தை சீர்துக்கி பார்த்துக்கொள்ள வேண்டும்.   அதை பொறுத்து அவர்களின் அடுத்த பிறவி நிர்ணயிக்கப்படும்.  ஆகையால், மாதவிடாய் உள்ளவர் கோவிலுக்குள் போவேன் என்று யாருக்கும் தெர்யாமல் போனால், அவர்கள் அந்த பாவத்தை சம்பாதிக்கவே போகின்றனர். மற்றவர்களுக்கு அந்த பாவம் சேராது. 

அப்பொழுது நம் கடமை ஒன்றும் இல்லையா!!! என்ற கேள்வி எழுகின்றது.  அப்படி இல்லை.  நம் கடமை இங்கு கடை பிடித்து, நம் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்கவேண்டும்..

இப்படித்தான் ஆங்கிலேயர் வரும் முன்வரை நம் நாடு இருந்ந்தன.  அப்பொழுதெல்லாம் நாத்திகவாதமோ, தனி நாடு பிரசாரமோ, சமூக ஏற்றத்தாழ்வோ எதுவும் பேசப்படவே இல்லை என்பது நமக்குத் தெரியும்,

நம் கடமையை நாம் உணர்வோம்!!  நம். குழந்தைகளுக்கு எது சரி  எது தவறு என்று நாம் சொல்வோம். 

அதெல்லாம் இருக்கட்டும்.  எவ்வளவு பேர் சபரிமலைக்கு போய்விடப் போகிறார்கள்.  99 சதவிகித பெண்கள் போகப்போவதில்லை.  ஒன்றிரண்டு போகும்.  அதற்கான பாவத்தை சம்பாதித்துக்கொள்ளும்.  ஓசை ஒடுங்கியதும் அதுவும் போகாது.  ஆக இது குறித்து பெரிதும் கவலைப் படவேண்டாம்.

நம் கடமை நம் கோவிலைக் காப்பது!! நம் ஸம்பிரதாயத்தின் பெருமையை குழந்தைகளுக்குச் சொல்லி கொடுப்பது.  இதிஹாச புராணங்களை தெரிந்து கொள்வது.  பகவத் கீதையை கட்டாயம் படித்து பெரியவர்களிடம் அதன் அர்த்தத்தை கேட்டுக்கொள்வது.  இதை அடிக்கடி செய்வது என்பவையே!!

பகவானின் அவதாரம் வரும் காலத்தை எதிர பார்த்திருப்போம்.  பக்தர்கள் மனதார கூப்பிட்டால் இப்பொழுது வர தயாராக உள்ளான் பகவான்.  கூப்பிடுவோம்.  ஆனால் மனதார கூப்பிடுவோமா?!  .

ஜெய் ஸ்ரீ ராமாநுஜா!
ஜெய் ஸ்ரீ ராம்!
ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணா!
ஜெய் ஸ்ரீ ரங்கநாதா!!!

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...