Friday, 26 October 2018

#திருவெண்ணெய்நல்லூர்_புகழில்_இருந்து...3 (சடையப்ப வள்ளல் பற்றி)

#திருவெண்ணெய்நல்லூர்_புகழில்_இருந்து...3 (சடையப்ப வள்ளல் பற்றி)

கம்ப இராமாயணம் பாடல்களில் பத்து பாட்டுக்கு ஒரு பாட்டு வீதம் தன்னை வளர்த்து ஆளாக்கி படிக்க வைத்து கம்ப இராமாயணம் இயற்றுவதற்கு சோழ மன்னனின் அனுமதி பெற்றுத்தந்த தோடு மட்டும் நில்லாமல்  ஒட்டக்கூத்தருக்கு வாய்ப்பு கிடைக்காததால் சூழ்ச்சி செய்து சோழ மன்னனுடைய பொருளுதவி கிடைக்காத படு செய்துவிட, அதற்கான முழு பொருளுதவி யையும் அளித்து பாடல் அரங்கேற்ற காரணமாக இருந்த #சடையப்ப வள்ளல் பற்றி வைத்தார்.

அதற்கு கடவுளின் வரலாற்றில் மனிதனான  சடையப்பவள்ளல்  பற்றி பத்து பாட்டுக்கு ஒரு பாட்டு வைக்க கூடாது என ஒட்டக்கூத்தர் மறுப்பு தெரிவிக்க நூறு பாட்டிற்கு ஒரு பாட்டு வீதம் வைக்கிறார் அதையும் ஒப்புக்கொள்ளாமல் வேண்டுமானால் ஆயிரம் பாட்டிற்கு ஒரு பாட்டு வீதம் வைத்துக் கொள் என்று கூறிவிட மன்னரும் சபையோரும் அதையே அமோதிக்கிரார்கள்.

அதற்கு கம்பன் சொல்கிறான்....

என் அப்பன் சடையப்ப 10 ல ஒருத்தன்னு நான் சொன்னேன் இல்லை என்றீர்கள், 100 ல ஒருத்தண்ணு சொன்னேன் அதையும் மறுத்தீர்கள்... ஆனால் நான் நினைத்தது தவறு அவன் சாதார மனிதன் அல்ல மாமனிதன் அதனால் அவன் ஆயிரத்தில் ஒருவன்னு எனக்கு உணர்த்திட்டீங்க... என்று பதிலடி கொடுத்து சடையப்ப வள்ளலை ஆயிரத்தில் ஒருவனாக அதிசயப் பிறவியாக அவதார புருஷனாக புகழ்ந்து நம் திருவெண்ணெய்நல்லூர் புகழையும் பாட்டிலே குறிப்பிட்டு இருப்பார்..

நம் திருவெண்ணெய்நல்லூர்  புகழ் கம்பன்.


சடையப்பவள்ளல் பற்றி கம்ப இராமாயணம் பாடல் களின் தொகுப்பை அடுத்த பதிவில் காண்போம்....

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...