பண்டைத்தமிழரின் கணித முறைகளை அறிந்து கொள்ள ஏதுவாக இருப்பது கணக்கதிகாரம் என்ற நூல். காரிநாயனார் என்பவர் எழுதியது. பலாப்பழத்திலுள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறிந்து கொள்ளும் சூத்திரம் இதிலுள்ள ஒரு வெண்பாவில்தான் இருக்கிறது. அதிலிருந்து ஒரு பாடல், அளவைக் கணக்கைக் குறித்து
முப்பத்தி ரண்டு முழம்உளமுட் பனையைத்
தப்பாமல் ஓந்தி தவழ்ந்தேறிச் – செப்பமுடன்
சாணேறி நாங்கு விரற்கழியும் என்பரே
நாணா தொருநாள் நகர்ந்து
32 முழம் உயரமுடைய பனைமரத்தில் ஒரு ஓணான் ஏறுகிறது. நாள் ஒன்றுக்கு சாண் ஏறி நான்கு விரல் இறங்குகிறது. மரம் முழுவதும் ஏற எத்தனை நாள் பிடிக்கும் ?
சாண், முழம் கணக்குத் தெரிந்தால் இதற்கான விடையைச் சொல்லிவிடலாம். இல்லையென்றால் ? விடைக்கான சூத்திரம் இதோ
பனையதனை இரட்டித்துப் பன்னிரண்டால் மாறி
இருநான் கீந்து கொள்.
பனையின் உயரத்தை இரட்டித்து, பன்னிரண்டால் பெருக்கி எட்டால் (2x4) வகுத்தால் விடை கிடைத்துவிடும். கண்டுபிடியுங்கள்
No comments:
Post a Comment