Friday, 21 September 2018

அரங்கனும் 7ம் எண்ணும்


அரங்கனும் 7ம் எண்ணும்
7 உலகங்களை உள்ளடக்கிய பொருளில் 7 மதில் சுற்றுக்களையும் "7 உலகங்கள்" என்று கூறுவர் 
 #ஸ்ரீரங்கம்


https://m.facebook.com/story.php?story_fbid=106584473643692&id=100028764180713


1 மாடங்கள் சூழ்ந்துள்ள சுற்று "பூலோகம்" 
2 திரிவிக்ரம சோழன் சுற்று "புவர்லோகம்" 
3 அகளங்கனென்னும் கிளிச்சோழன் சுற்று "ஸுவர்லோகம்" 
4 திருமங்கைமன்னன் சுற்று "மஹர்லோகம்"
5 குலசேகரன் சுற்று "ஜநோலோகம்" 
6 ராஜ மஹேந்திர சோழன் சுற்று "தபோலோகம்" 
7 தர்ம வர்ம சோழன் சுற்று "ஸத்யலோகம்"

7 பெரிய என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில் 
1 பெரியகோவில்  
2 பெரியபெருமாள் 
3 பெரியபிராட்டி 
4 பெரிய கருடன் 
5 பெரியவசரம் 
6 பெரியதிருமதில் 
7 பெரியகோபுரம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு மொத்தம் 7 நாச்சிமார்கள் 
1 ஸ்ரீதேவி 
2 பூதேவி 
3 துலுக்க நாச்சியார் 
4 சேரகுலவல்லி நாச்சியார் 
5 கமலவல்லி நாச்சியார் 
6 கோதை நாச்சியார் 
7 ரெங்கநாச்சியார் ஆகியோர்

PIC 2,3
ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் தங்க குதிரைவாகனத்தில் எழுந்தருளுவார் 
(1) விருப்பன் திருநாள் 
(2) வசந்த உத்சவம் 
(3) விஜயதசமி 
(4)  வேடுபரி 
(5) பூபதி திருநாள் 
(6) பாரிவேட்டை 
(7) ஆதி பிரம்மோத்சவம்

ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார் 
(1) சித்திரை 
(2) வைகாசி 
(3) ஆடி 
(4) புரட்டாசி 
(5) தை 
(6) மாசி 
(7) பங்குனி

ஸ்ரீரங்கம்  கோவிலில் நடைபெறும் உற்சவத்தில் 7ம் திருநாளன்று வருடத்திற்கு 7 முறை  நம்பெருமாள் நெல்லளவு கண்டருலுவார் (1) சித்திரை 
(2) வைகாசி 
(3) ஆவணி 
(4)  ஐப்பசி 
(5) தை 
(6) மாசி 
(7) பங்குனி

PIC 4

ஏழு உற்சவத்தில் குறிப்பிட்ட மண்டபங்களை தவிர மற்ற மண்டபங்களுக்கு பெருமாள் எழுந்தருள மாட்டார் 
(1) வசந்த உத்சவம் 
(2) சங்கராந்தி 
(3) பாரிவேட்டை 
(4) அத்யயநோத்சவம் 
(5) பவித்ரா உத்சவம் 
(6) உஞ்சல் உத்சவம் 
(7) கோடை உத்சவம்

PIC 5

ஏழு சேவைகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கண்டுகளிக்கும் சேவைகளாகும் 
1 பூச்சாண்டி சேவை
2 கற்பூர படியேற்ற சேவை
3 மோகினி அலங்காரம் ரத்னங்கி சேவை 
4  வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாஹனம்
5 உறையூர் ஸ்ரீரங்கம் மற்றும் ராமநவமி சேர்த்தி சேவை
6 தாயார் திருவடி சேவை
7 ஜாலி சாலி அலங்காரம் 

PIC 6,7

திருக்கோயில் வளாகத்தில் உள்ள ஏழு மண்டபங்களில் நம்பெருமாள் ஒரு நாள் மட்டுமே எழுந்தருள்வார் 
(1) நவராத்ரி மண்டபம் 
(2) கருத்துரை மண்டபம் 
(3) சங்கராந்தி  மண்டபம் 
(4) பாரிவேட்டை மண்டபம் 
(5) சேஷராயர் மண்டபம் 
(6) சேர்த்தி  மண்டபம் 
(7) பண்டாரம் ஆஸ்தான மண்டபம் 

நம்பெருமாள் வருடத்தில் 3 முறை எழுந்தருளும் 7 வாஹனங்கள் 1 யானை - தை மாசி சித்திரை
2 தங்க கருடன் - தை பங்குனி சித்திரை
3 ஆளும் பல்லக்கு - தை பங்குனி சித்திரை
4 இரட்டை பிரபை - தை மாசி சித்திரை
5 சேஷன் - தை பங்குனி சித்திரை
6 ஹனுமந்த - தை மாசி சித்திரை
7 ஹம்ச - தை மாசி சித்திரை

ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் நவராத்ரி உற்சவத்தில் 7ம் திருநாளன்று ஸ்ரீரெங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும். தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும் 30 நாட்களும் தங்க குடத்தில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும்.

ராமபிரானால்  பூஜிக்கப்பட்ட பெருமை உடையவர் ஶ்ரீரங்கம் பெரிய பெருமாள்  அந்த ராமாவதாரம்  மகாவிஷ்ணுவின் 7வது அவதாரமாகும். இராப்பத்து உற்சவத்தின்  7ம் திருநாளன்று  நம்பெருமாள் திருகைத்தல சேவை நடைபெறும்.

ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும்
(1) கோடை உத்சவம் 
(2) வசந்த உத்சவம் 
(3) ஜேஷ்டாபிஷேகம் திருப்பாவாடை 
(4) நவராத்ரி  
(5) ஊஞ்சல் உத்சவம்
(6) அத்யயநோத்சவம் 
(7) பங்குனி உத்திரம்

பன்னிரண்டு ஆழ்வார்களும் 7 சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள் 
(1) பொய்கை ஆழ்வார்  பூதத்தாழ்வார் பேயாழ்வார் 
(2) நம்மாழ்வார் திருமங்கை ஆழ்வார் மதுரகவி ஆழ்வார் 
(3) குலசேகர ஆழ்வார் 
(4) திருப்பாணாழ்வார் 
(5) தொண்டரடிபொடி ஆழ்வார் 
(6) திருமழிசை ஆழ்வார் 
(7) பெரியாழ்வார் ஆண்டாள்

PIC 8

திருக்கோயில் வளாகத்தில் ஏழு ஆச்சார்யர்களுக்கு தனி சன்னதி உள்ளது 
(1) ராமானுஜர் 
(2)  பிள்ளை லோகாச்சாரியார் 
(3) திருக்கச்சி நம்பி 
(4) கூரத்தாழ்வான் 
(5) வேதாந்த தேசிகர் 
(6) நாதமுனி 
(7) பெரியவாச்சான் பிள்ளை 

பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள இடமான தென் திசையில் 7 கோபுரங்கள் உள்ளன 
1)  நாழிகேட்டான் கோபுரம் 
2) ஆர்யபடால் கோபுரம் 
3) கார்த்திகை கோபுரம் 
4) ரெங்கா ரெங்கா கோபுரம் 
5) தெற்கு கட்டை கோபுரம்-I 
6) தெற்கு கட்டை கோபுரம்-II 
7) ராஜகோபுரம்

PIC 9,10,11

சந்திர புஷ்கரிணியில் 1முறையும் கொள்ளிடத்தில் ஒருமுறையும் இப்படியாக 7 முறை சின்ன பெருமாள் தீர்த்தவாரி கண்டருள்வார்
1 விருப்பன் திருநாள் சித்திரை
2 வசந்த உற்சவம் வைகாசி


சந்திர புஷ்கரிணியில் 1முறையும் கொள்ளிடத்தில் ஒருமுறையும் இப்படியாக 7 முறை சின்ன பெருமாள் தீர்த்தவாரி கண்டருள்வார்
1 விருப்பன் திருநாள் சித்திரை
2 வசந்த உற்சவம் வைகாசி
3 பவித்ரோத்சவம் ஆவணி
4 ஊஞ்சல் உற்சவம் ஐப்பசி
5 அத்யயன உற்சவம் மார்கழி
6 பூபதி திருநாள் தை
7 பிரம்மோத்சவம் பங்குனி 

 
PIC 12,13

இவைகளை தவிர மற்ற கோவில்களில் காண முடியாதவை
1 தச மூர்த்தி
2 நெய் கிணறு
3 3 தாயார்கள் ஒரே சன்னதியில்
4 21 கோபுரங்கள்
5 நெற்களஞ்சியம்
6 தன்வந்தரி
7 4 திசைகளிலும் ராமர் சன்னதி இப்படியாக பல்வேறு சிறப்புகளை 7 ஏழாக தன்னுள்  கொண்டது பூலோக வைகுண்டமான திருஅரங்கம்(7) என்னும் #ஶ்ரீரங்கம் 

PIC 14,15

Structure of Srirangam Rajagopuram remained incomplete at the base for over 400 yrs. Started during the reign of Achyuta Deva Raya of Vijayanagar, the construction was given up after the king's death & apparently was not resumed owing to some political preoccupations or crisis.

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...