Wednesday, 29 August 2018

#இந்து_மதம்

ஹிந்து மதத்தின் தோற்றம் பற்றி பலவாறான கருத்துக்கள் வரலாற்று ஆசிரியர்களிடம் இருக்கின்றன. அதை எல்லாம் ஒப்பிட்டு பார்க்கும்பொழுது சிந்துசமவெளி நாகரீகத்திற்கு முன்பே ஹிந்து மதம் தோன்றியிருக்கிறது. அதாவது புதிய கற்காலத்தின் இறுதியில். உருவ வழிபாடு ஏதும் இல்லாமல் ஐம்பூதங்கலாகிய நெருப்பு, நீர், நிலம், காற்று, ஆகாயம் கடவுளாக கொண்டு இருந்துள்ளனர்.

கிமு10 நூற்றாண்டில் ஆரம்பித்து கிமு6 நூற்றாண்டு வரை ஹிந்து மத்த்தின் வேதங்கள், மந்திரங்கள் மற்றும் கொள்கைகள் என அனைத்தும் இவர்களாலேயே உருப்பெற்றது. இதற்கு பல சான்றுகள் ரிக் வேத்த்தில் கிடைக்கின்றன. பின்னர் ஹிந்து மதத்தின் இரு பெரும் கிளைகளான சைவமும், வைணவமும் தோன்றியது.

இந்தியாவில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்று நம் ஹிந்து மதம். ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாக விளங்குகிறது. நேபாளம், இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கபூர், அமெரிக்கா, கனடா  மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள்.
          பிற சமயங்கள் போல் இந்து சமயத்தை தோற்றுவித்தவர் என்று யாருமில்லை. இதனைக் நெறிப்படுத்த அல்லது கட்டுப்படுத்த என ஒரு மைய அமைப்பு இதற்கு இல்லை. பல்வேறு வகையில் பரவலான நம்பிக்கைகள், சடங்குகள், சமய நூல்கள் என்பவற்றைக் உள்வாங்கி உருவான ஒரு சமயமே இந்து சமயம்.

ஹிந்து மத கோட்பாடுகள் ஆறு கிளைகளாக பிரிக்கபடுகிறது
1.சம்க்யா(Samkhya),
2.யோகா(yoga),
3.நியாய(nyaya),
4.வைஷேஷிகா(vaisheshika),
5.மிமாச்யா(mimasya),
6.வேதாந்தா(vedantha)

சம்க்யா(Samkhya)
ஹிந்து மத தந்திரங்களை பற்றி கூறுவது சம்க்யா. கபிலர் இதை தோற்றுவித்தார். இதில் மனம், அக ஆற்றல், ஆத்மா, மோட்சம் பற்றி பல குறிப்புகள் உள்ளன. உள்ளார்ந்த நினைவுகளில் சத்வம், ரஜஸ், தமஸ் எனப்படும் மூன்று நிலைகளும் இதில் வருகின்றன. கடவுள் பற்றியோ மோட்சத்திற்கு பிறகு என்ன என்ற குறிப்புகள் இல்லை.

யோகா(yoga)
யோகா மனித மனதை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் வழிகாட்டி ஆகும். தியானம் முதல் சமாதி நிலை வரை பல நிலைகள் பதஞ்சலி முனிவரால் எழுதப்பட்டுள்ளது.
அஷ்டாங்க யோகா எட்டு நிலைகளை கொண்டது. இது தியானம் மூலம் மனிதன் முக்தி அல்லது சமாதி நிலையை அடைய வழிவகுப்பதாகும்

1.யாமா(yama- அஹிம்சை, சத்யம், பிரம்மச்சரியம்):
2.நியாமா(niyama- அகபுற தூய்மை, சந்தோசம், தவம், மத சார்பான புத்தகங்களை படித்தல் மந்திரங்களை தொடர்ந்து ஓதுதல், கடவுளிடம் தன்னை ஒப்படைத்தல்)
3.ஆசனா(asana- இயல்பாக சுவாசித்தல், சிரசாசனம், பத்மாசனம்)
4.பிரானயமா(pranayama- மனதையும் சுவாசத்தையும் ஒன்றாக்கி ஒருநிலைப்படுத்துதல்)

பிராணயாமா மூன்று பெரும் நிலைகளை கொண்டது

I) சுவாசத்தை உள்ளிழுத்தல்
II)சுவாசத்தை வெளிவிடுதல்
III)சுவாசத்தை நிலைப்படுத்துதல்
சுவாசத்தை உள்ளிழுத்து நிலைபடுதுதல்
சுவாசத்தை வெளிவிட்டு நிலைப்படுத்துதல்
சுவாசத்தை நிலைபடுத்தி உள்ளிலுதல் வெளிவிடுதல்

5.பிரத்யஹாரா(prathyahara- நினைவுகளிலிருந்து வெளிவருதல்)
6.தர்ணா(dharna- மன ஒருமைப்பாடு)
7.தியானா(dhayana- தியானம்)
8.சமாதி(samathi- சமாதி நிலை)

நியாய(nyaya)

ஹிந்து மத ஆறு தத்துவங்களில் இதுவும் ஒன்று. ஹிந்து மத்த்தின் அடிப்படை நியாய தர்மங்களை பற்றி இது குறிப்பிடுகிறது.

வைஷேஷிகா(vaisheshika)

இது ஹிந்து மத்த்தில் அறிவியல் சம்பந்தமான கோட்பாடுகளை கொண்டது. அணு பற்றிய குறிப்புகள் கூட இதில் உள்ளன.

மிமாச்யா(mimasya)

மிமாச்யா என்பதற்கு விசாரணை என்று பொருள். இது ஹிந்து மதத்தில் உள்ள ஆத்திகம் மற்றும் நாத்திகம் பற்றியதர்க்கான குறிப்புகள் உள்ளன

வேதாந்தா(vedantha)

        ஹிந்து மதத்தில் உள்ள வேதங்களை பற்றி இதில் குறிப்பிடுகின்றனர்
ஆதி சங்கரர் முதன் முதலில் வேதங்களை தோற்றுவித்தார் பின்னர் அது பல கிளைகளாக பல்வேறு முனிவர்களால் பிரிந்தது

இவ்வாறாக ஹிந்து மத தத்துவம் ஆறு கிளைகளாக உள்ளன. ஹிந்து மத தத்துவத்தை அடுத்து ஹிந்து மதத்தின் பிரிவுகளை பற்றி பார்ப்போம்.
ஹிந்து மதம் மூன்று பிரிவுகளாக பிரிக்கபடுகிறது
1.சைவம்
2.வைணவம்
3.ஸ்மார்த்தம்

சைவம்

சைவ சமயம் சிவ பெருமானை முழுமுதற் கடவுளாகக் கொள்ளும் சமயம். பிற சில முக்கிய சமயங்கள் போன்று இச்சமயத்தை ஒரு குறிப்பிட்டவர் தோற்றுவிக்கவில்லை.  இந்து சமயப் பிரிவுகளுள் முதன்மையானதாக கொள்ளப்படுகின்றது. ஆரம்பகால வரலாறு பற்றி சரியான சான்றுகள் இல்லை. பிற்காலத்தில் பாண்டியர்கள் காலத்தில் நாயன்மார்கள் தோன்றி சைவத்தை எழுச்சி பெறச்செய்திருந்தனர். தமிழில்  பதினெண் புராணங்களுள் பத்து புராணங்கள் சிவன் பற்றியவை. இந்தியா, இலங்கை, நேபாளம், தென்கிழக்கு ஆசியா ஐரோப்பா முதலான எல்லா நாடுகளிலும் சிவாலயங்கள் காணப்படுகின்றன

      மொகெஞ்சதாரோ - ஹரப்பா அகழ்வாராய்ச்சிகளிலிருந்து, ஆரியர் வருகைக்கு முன்பே ஒரு நாகரிகம் இந்தியாவில் இருந்த்தென்றும் அது திராவிட நாகரிகம் என்பதற்கும் அறிவியல் பூர்வமான சான்றுகள் கிடைத்தன. இதன் அடிப்படையில் ஜி.யு போப் அவர்கள் ஆரியர் வருகைக்கு முன்பே தெனிந்தியாவில் நிலவிய வரலாற்றுக்கு முற்பட்ட சமயமே சைவம் என்கிறார். அவர் கூறியவை பின்வருமாறு,

சிவனை வழிபடும் சிவநெறியாகிய சைவம் தென்னாட்டில் வரலாற்றுக்காலத்திற்கு முன்பிருந்தே நிலவிய தொன்மைச் சமயமாகும். இதனைச் சைவம் என்ற பெயரால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய மணிமேகலை ஆசிரியர் குறிப்பதால் அறியலாம்.  சைவசமயத்தின் வரலாற்றை நாம் வெளிநாட்டு அறிஞர்கள் எழுதியதை வைத்து பேசுகிறோம், எனது அறிவுக்கு அக்கருத்துகள், வரலாற்று கூற்றுகள் தவறாகப்படுகின்றது. 'சமயமென்பது மனிதர்களை கடவுளின் நிலைகளுக்கு கொண்டு செல்வது. அதாவது ஆன்மாக்களை பக்குவபடுத்தவே சமயத்தை சதாசிவ கடவுள் உலகம் உண்டாக்கப்பட்டபொழுது உண்டாக்கினான். இதை ஸ்ரீகண்ட உருத்தரர் தனது எட்டு சீடர்கள் மூலமாக உலகமக்களுக்கு போதிக்கபட்டது. அவர்களின் காலத்தில் இமயமலை பூமியில் இல்லை. கைலாயம் மேருமலையின் நடுவில் இருந்துள்ளது, மேருமலையோ பூமியின் மத்தியில் இருந்துள்ளது. அதாவது பூமத்திய ரேகையின் மீது, மேருமலைக்கு தெற்கே தில்லை இருந்துள்ளது {திருவாசகத்தில் மாணிக்கவாசகர் தென்தில்லை என்று குறிப்பிட்டு உள்ளார்} தில்லைக்கு தெற்கே இராவணவன்ன ஆண்ட இலங்கை இருந்துள்ளது. (இதை பட்டிணாத்தார் கூறியுள்ளார் 'தனது தாயின் உடலுக்கு நெருப்பு வைக்க பாடியபாட்டில் முன்னே இட்ட தீ தென் இலங்கை'. அன்று வாழந்த உயிரினங்களில் மனிதர்கள், தேவகள், அரக்கர்கள் என்ற உயிரினங்களும் வாழ்ந்து வந்துள்ளார்கள் (ஆராய்ச்சியாளர்கள் பூமியில் மூன்று விதமான மனிதரகள் வாழந்து வந்தார்கள என்கிறார்கள்) அரக்கர்களும், தேவர்களும் தீரா பகையால் சண்டையிட்டு அழிந்து விட்டார்கள் என்கிறது தமிழ். ஆரியன் என்ற சொல் சதாசிவனையும், அவனின் நிலைஅடைந்தவரகளையும் குறிக்கும். செத்து சம்பலாகவும், புழுக்களானவர்களை குறிக்காது. இன்றோ மடிந்து போன மனிதர்கள் உண்டாக்கிய மதங்கள் இப்பூமியை நரகமாக்கிறது. திருமந்திரத்தை படித்தால் நான் சொல்லியுள்ள கருத்துகள் உண்மை எனபதை உணர்வீர்கள்.
பழம்பெருஞ் சமயமாகிய சைவத்தில் கடவுள் வழிபாட்டு பண்பும், பயனும் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டுள்ளன. வாழ்ந்தே ஆகவேண்டிய தவிர்க்க முடியாத நியதிக்கு உட்பட்டிருக்கும் நமது வாழ்க்கை பதி (கடவுள்), பசு (உயிர்), பாசம் என்ற மூலங்கள் மூன்றின் சேர்க்கையால் ஆனது. இவற்றில் பதிக்குப் பாசத்தால் ஆவதொன்றுமில்லை. பாசத்துக்குப் பதியைத் தொழுது பயன் பெற்றுக் கொள்ளமுடியாது. மூன்றாவதாகிய பசுவே பதியின் இடையறாத உபகாரத்தால் தனது வினைப் பயனாகப் பிறந்து இறந்து பெறும் நீண்ட கால அனுபவத்தில் பாசத்தடையில் இருந்து நீங்கிப் பதியினைச் சார்ந்து விடுதலை பெறுவதற்கான நிலையில் உள்ளது. இந்த நிலையே ஞானம் எனப்படுகிறது. இந்த ஞானமே சைவ வழிபாட்டின் தனித்துவப் பண்பாகும்

வைணவம்
வைணவ சமயம், விஷ்ணுவை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயமாகும். இச்சமயம் வைணவம் என்றும் வைஷ்ணவம் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இச்சமயம் ஹிந்து மதத்தின் உட்பிரிவுகளுள் ஒன்றாகும். தமிழ் மொழிக்கு வைணவம் என்ற பெயருண்டு.

உலகில் தீமைகள் ஓங்கும் போது இறைவன் அவதாரம் எடுத்து அவற்றை அழிப்பார் என்பது வைணவ நம்பிக்கை. வைணவக் கடவுளான விஷ்ணு எண்ணற்ற அவதாரங்கள் எடுத்துள்ளதாகவும் நம்புகிறார்கள். விஷ்ணு அவதாரங்களில் மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, இராம, பலராம, கிருஷ்ண, கல்கி என்ற பத்து அவதாரங்கள் தசவதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. உபநிடதங்களில் பதின்மூன்று வைணவ உபநிடதங்களாகும்.

குப்தர் போன்ற அரசர்களின் காலத்தில் செல்வாக்கு பெற்று தென் ஆசிய முழுவதும் வைணவம் பரவியிருந்தது. வைணவத்தில் வடகலை, தென்கலை என்று இருபிரிவுகள் உள்ளன.
வைனவர்களிடத்தில் திருமண் இட்டுக் கொள்வதில் இரண்டு யோக முறைகள் உண்டு:

வடகலை திருமண்காப்பு: பாதம் இல்லாமல் போடும் வடகலை நாமம்
தென்கலை திருமண் காப்பு: பாதம் வைத்துப் போடும் தென்கலை நாமம்

வடகலை
தென்கலை
திருமால் தெய்வம்
திருமகளும் தெய்வம்
வடமொழி வேத வழி
நாலாயிர திவ்யபிரபந்தம் நூலும் போற்றப்படும்
பிராமணர்களுக்கு முதன்மை
மக்களில் உயர்வு-தாழ்வு இல்லை
வடக்கிலுள்ள திருப்பதிக்கு தென்கலை நாமம்.
தெற்கிலுள்ள திருவரங்கம் கோவிலுக்கு வடகலை நாம்ம்

ஸ்மார்த்தம்

ஸ்மார்த்தம் என்பது ஹிந்து மதத்தின் ஒரு பிரிவாகும். இதனைப் பின்பற்றுபவர்கள் சிவன்,சக்தி, திருமால், விநாயகர், சூரியன், மற்றும் முருகன் என்ற அறுவரையும் முழுமுதல் கடவுளாக வணங்குகின்றனர்.

ஸ்மார்த்தம் பழங்காலம் தொட்டே இருந்து வரும் இறைவழிதான் என்றாலும், ஆதிசங்கரர் தான் சீர்தூக்கி ஒரு புதுமுகத்தைக் கொடுத்தார். தனித்தனியாய் அவரவர்க்கு உகந்த இஷ்ட தேவதைகளை வணங்கிக் கொண்டு தனித்தனிப் பிரிவாய் கிடந்தவர்களை அழைத்து, இதோ உங்களுக்கெல்லாம் பொதுவானதொரு ஷ்ணமதம் என அதற்கான முறைகளை சீர்படுத்தினார். இதன் படி சிவன், சக்தி, திருமால், கணேசர், சூரியன் மற்றும் முருகன் என்ற அறுவரையும் முழுமுதல் கடவுளாக வணங்கலாம். பொதுவாக இந்த முறையினை பின்பற்றுவர்களுக்கு ஸ்மார்த்தர் என்று இந்நாளில் வழங்கப்படுவாதால், இந்த வழிமுறையை 'ஸ்மார்த்தம்' என்றே வழங்கலாம். இந்த வழியில் எல்லா வழிகளையும் ஏற்றுக் கொள்ளும், இலகுவான வளைந்து கொடுக்கும் தன்மையை ஏற்படுகிறது. இன்று இந்து மதம் என்று நாமெல்லாம் பொதுவாக சொல்லும் ஒரு பொது முகம் உருவாகுவதற்கு இந்த வழிதான் தான் வித்து.

ஸ்மார்த்தர்களுக்கு ஆதி சங்கரரின் அத்வைதம் தான் அடித்தளம். அதாவது இறைவன் ஈஸ்வரனும், நம் ஜீவனும் உண்மையில் முழுதிலும் பிரம்ம்மே.  மாயையில் சிக்குண்டதால், ஈஸ்வரன் வேறு ஜீவன் வேறு என்பதாகத் தெரிகிறது. உயர் ஞானம் கிட்டுமாயின், இந்த வேறுபாடு தெளிந்திடும். முக்தி அடைவதற்கு ஒரே பாதை ஞானம் என்பது பெரும்பாலான ஸ்மார்த்தர்களின் நம்பிக்கை. இவ்வாறாக பிரிந்த ஹிந்து மதம் இன்று வரை தனித்தன்மையுடன் தலைதோங்கி நிற்கிறது.
பின்னர் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பல மன்னர்களால் பின்பற்றப்பட்ட வந்த ஹிந்து மதம். இஸ்லாமியர்கள் வருகைக்கு பின்பு பல்வேறு இன்னல்களை சந்தித்தது. ஒரு மதத்தை தோற்றுவித்தவர் என்று யாரும் இல்லாமல், ஒரு தனி அமைப்பு என்று ஏதும் இல்லாமல் கிட்டத்தட்ட 2000 வருடத்திற்கு மேல் இந்தியாவை முஸ்லிம்கள் ஆண்டும்,  300 வருடங்களுக்கு மேல் பிரிட்டிஷ்காரர்கள் ஆண்டும் ஹிந்து மதத்தை ஒன்றும் செய்ய இயலவில்லை என்பதே அதன் தனி பெருமை.

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...