Sunday, 12 August 2018

ஏன் உடன் கட்டை ஏறினார்கள் இந்துக்கள்...

இந்துக்கள் உடன்கட்டை ஏறுவது,,,,,

தினிக்கப்பட்டதல்ல. சங்ககாலத்தில் கனவன்மீதான அன்பினாலும், அதன்பின்,,,

அடுத்தவன் மனைவியை அபகரிக்கும் அரேபியர்களின் அட்டூழியத்திலிருந்து தன் கற்பை காக்கவே தாமாக முன்வந்து இறங்கினார்கள் என்பதே ஆரம்பகால வரலாறு.

பேரழகி சித்தூர் ராணி பத்மினியின் தியாகம்!

புறநானூற்றில் கணவன் சிதையில் தீக்குளித்த பூதப் பாண்டியன் தேவியர்.
சோழ மன்னன் கிள்ளிவளவன் மனைவியர் தீப்பாய்ந்து இறந்ததைக் கோவூர்க் கிழார் பாடலிலும்.
சிலப்பதிகாரத்தில், மாதரி என்னும் இடைக்குலப் பெண் தீயில்  பாய்ந்ததையும்.
படித்துள்ளோம்.

ஆயினும் சித்தூர் ராணி பத்மினி, நூற்றுக் கணக்கான பெண்களுடன் தீப்பாய்ந்ததைப் படிக்கையில் உடம்பில் புல்லரிக்கும்.

அலாவுதீன் கில்ஜி எனும் அயோக்கியனின் காமப்பசிக்கு இரையாவதைவிட, தீயில் குளிப்பது “மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே” என்று தீயில் குளித்தாள் பேரழகி பத்மினி; அவள் நூறு கிளியோபாட்ராவின் அழகுக்குச் சமமானவள்! இதோ அந்தக் கதை:–

ஏறத்தாழ 700 வருடங்களுக்கு முன், அலாவுதீன் கில்ஜி, டில்லியிலிருந்து அரசோச்சிய காலத்தில் ரஜபுதனத்திலுள்ள சித்தூரை பீமசிங்கன் என்பவன் ஆண்டுவந்தான். அவளுடைய மனைவியின் பெயர் பத்மினி. தாமரை போன்ற அழகிய முகம் வாய்ந்தவள். தைரியசாலி, நல்ல புத்தி சாதுர்யமிக்கவள். அவளுடைய அழகு பற்றிய செய்தி வட இந்தியா முழுதும் பரவியிருந்தது.

அலாவுதீன் கில்ஜிக்கு, எல்லா முஸ்லீம் மன்னர்களுக்கும் இருந்தது போல பல மனைவியர் இருந்தனர். அவன், சித்தூர் ராணி பத்மினியையும் அபகரிக்க விரும்பினான். ஆகவே பெரும்படையுடன் புறப்பட்டு ராஜஸ்தானுக்கு வந்து சித்தூரை முற்றுகையிட்டான். சித்தூரை வெல்ல முடியாதென்று தெரிந்தது. ‘கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற கதையாக, “நான் சித்தூரை வெல்ல வரவில்லை என்றும், பத்மினியின் அழகை ஒரே ஒரு முறை பார்த்துச் செல்லவே வந்ததாகவும்” பீம சிங்கனுக்குச் செய்தி அனுப்பினான்.

பீம்சிங்கன், அவன் வார்த்தையை நம்பி, ஓரிரு வீரர் துணையுடன் கோட்டைக்குள் வரலாமென்றும், ரஜபுத்ரப் பத்தினிப் பெண்கள் வேறு ஆடவரைப் பார்க்கக் கூடாதாகையால் நிலைக் கண்ணாடியில் மட்டும் அவள் உருவத்தைப் பார்க்கலாம் என்றும் நிபந்தனை போட்டான். உடனே அலாவுதீனும் இரண்டொரு வீரருடன் வந்து கண்ணாடியில், பேரழகி பத்மினியைப் பார்த்தான். ஏதேனும் சதி செய்து அவளைக் கவரவேண்டும் என்று எண்ணி, மனதில் சதித்திட்டம் தீட்டினான்.

“நான் உன்னை நம்பி, உன் கோட்டைக்குள், தனியே வந்தேனே. நீயும் என்னை நம்பி என் கூட வந்து வழியனுப்பக்கூடாதா?” என்று பீம சிங்கனிடம் அலாவுதீன் சொன்னான். ரஜபுத்ர இந்துக்கள், சத்ய சந்தர்கள்; உண்மை விளம்பிகள்; டில்லித் துலுக்கர்கள் போல உடல் முழுதும் விஷ ரத்தம் ஓடுபவரல்ல. ஆகவே அலாவுதீனை நம்பி அவன் கூட குதிரையில் செல்லுகையில், அலாவுதீன் உத்தரவிட்டவுடன் ஆப்கானியப் படைகள், பீமசிங்கனைச் சூழ்ந்து கொண்டன. அவனைக் கைது செய்து டில்லிக்குக் கொண்டு சென்றான் அலாவுதீன்.

“உன் மனைவியை என்னிடம் ஒப்புவித்தால் நான், உன்னை விடுவித்து, மீண்டும் சித்தூரின் மன்னனாக்குவேன்” என்று அலாவுதீன் சொன்னான். ஆனால் பீம சிங்கன் இணங்கவில்லை. இந்தச் செய்தி சித்தூர் வரை சென்றது.

பீமசிங்கனின் மனிவியான பத்மினி மஹா புத்திசாலி; வைரத்தை வைரத்தால் அறுக்க வேண்டும், முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்; வஞ்சனையை வஞ்சனையால்தான் வெல்ல வேண்டும் என்று கருதி, அலாவுதீன் கில்ஜிக்குச் செய்தி அனுப்பினாள். என் கணவனை நீ விடுவிப்பாயானால், நான் உன்னிடம் வரத்தயார். ஆயினும் ரஜபுதனப் பெண்கள், எல்லோரும் காணும்படி வெளியே உலவ மாட்டார்கள். ஆகவே என் பரிவாரம் புடை சூழ மூடிய பல்லக்குகளில் வருவோம்” என்றாள். அலாவுதீனும் ஆவலுடன் காத்திருந்தான்.

சித்தூர் கோட்டையிலிருந்து 70 மூடு பல்லக்குகள் புறப்பட்டன. ஒன்றில் கூட பெண்கள் கிடையாது. அத்தனையிலும், தேர்ச்சிபெற்ற 70 வீரர்கள் மறைந்திருந்தனர். ஆறு பல்லக்குத் தூக்கிகள், ஒவ்வொரு பல்லக்கையும் சுமந்தனர். அவர்கள் அனைவரும் வீரர்கள். பல்லக்குகளில் ஆயுதங்களை மறைத்து வைத்தனர். பாந்தால் என்பவன் அவர்களை டில்லியை நோக்கி அழைத்துச் சென்றான். அவன், “பத்மினி, கடைசியாக ஒரு முறை கணவனைப் பார்த்துவிட்டு உன்னிடம் வருவாள்” என்று அலாவுதீனிடம் சொன்னவுடன் “பத்மினியின் பல்லக்கை” கூடாரத்துக்குள் அனுப்பினான். அதிலிருந்த வீரன் வெளியே குதித்து பீமசிங்கனை குதிரையின் மேல் வைத்து தப்பிக்கச் செய்தான். உடனே பெரும் சண்டை நிகழ்ந்தது. இரு தரப்பும் வீரர்களை இழந்தன.

ஓரிரு ஆண்டுகள் உருண்டோடின. அலாவுதீனின் வெறி அடங்கவில்லை. எப்படியும் பத்மினியை அடைந்தே தீருவதென்று முடிவு செய்து, மீண்டும் படையெடுத்து சித்தூரை முற்றுகையிட்டான். இப்பொழுது பீமசிங்கன் பலவீனமான நிலையில் இருந்தான்; ஏனெனில் முந்தைய போர்களில் முக்கியப் படைத் தலைவர்களை இழந்துவிட்டான். ஒரு கட்டத்தில் தோல்வி நிச்சயம் என்று தெரிந்தது. தன் மகனை அருகாமையிலுள்ள ரஜபுதன ராஜ்யத்துக்கு அனுப்பி பாதுகாப்பாக இருக்கும்படி சொல்லிவிட்டு வீரதீரப் போரில் ஈடுபட்டு உயிர்துறந்தான் பீம சிங்கன்.

ரஜபுதனப் பெண்கள் வீராங்கனைகள்; அரண்மனையின் அந்தப் புரத்தில் மாபெரும் தீ வளர்த்தனர். அதில் நூற்றுக் கணக்கானோர், பேரழகி பத்மினியுடன் குதித்து சாம்பலாயினர். வெற்றிக் களிப்புடன் கோட்டைக்குள் நுழைந்த அலாவுதீனுக்கு, வீரர்களின் பிணங்களும், வீரத்தாய்மார்களின் சாம்பலுமே கிடைத்தது!

பாரத நாடு உள்ள வரை, பத்மினியின் புகழும் நீடிக்கும்! ரஜபுதனக் கோட்டை கொத்தளங்களும், பாலைவன மணல் துகள்களும் இன்றும் கூட பத்மினியின் புகழைப் பாடிக்கொண்டிருக்கின்றன!!

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...