Saturday 17 March 2018

தெய்வம் உண்டா ? இல்லையா?

ஆதிகாலம் முதல் மனிதன் தன்னைத் தானே கேட்டுவரும் கேள்வி இது. அவ்வப்போது பதிலும் சமயோசித மாகவே வந்திருக்கிறது.

உடலில் கொழுப்பு இரத்த வேகமும்  இருக்கும்வரை மனிதனின் மனதில்  நாத்திகமும்,. அந்தச் சக்திகள் அகன்றபின் ஆத்திகமும் எழுந்து நிற்பதே இயற்கையாய் இருக்கிறது.

கொழுப்பும் இரத்த வேகமும் இருப்பவர்களுக்கும் அவர்களின் முயற்சிகள் தோல்வி அடையும்போது தெய்வ சிந்தனை உண்டாகிறது.
#தெய்வம்_இருக்கிறது #அதன்_சக்திதான்_பிரதான_சக்தி என்பதை உணருகிறார்கள்.

இந்த உண்மையை வலியுறுத்தவே ஒரு ஆங்கில ஆசிரியர்
#மனிதப்_பிரயத்தனங்கள்_அனைத்தும்_தோல்வி_அடையும்போது_ #தெய்வம்_பிறக்கிறது.... என்று சொன்னார்.

#அனாதரவான_நிலையில்_ஆண்டவன்_துணை_நிற்கிறான்.
#ஆகவே_அனைத்தையும்_துறந்து_அவனைச்_சரணடைந்து_விடு...

என்று  சனாதன  சரணாகதி சாத்திரமும் உபதேசிக்கிறது....

ராசா

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...