Saturday, 9 December 2017

இடிந்துவிழும் நிலையில் வடரங்கம் ரெங்கநாதப் பெருமாள் கோயில் மேற்கூரை!

ஸ்ரீரங்கம் ரெங்கநாதப் பெருமாள் கோயிலுக்கு இணையாக, நாகை மாவட்டத்திலுள்ள வடரங்கம் ரெங்கநாதப் பெருமாள் கோயிலின் மேற்கூரை இடிந்துவிழும் அபாயநிலையில் உள்ளது.  இதனால் விபரீதம் ஏற்படுவதற்குமுன் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

 

 

நாகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள வடரங்கத்தில், இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான ரெங்கநாதப் பெருமாள் கோயில் உள்ளது.  திருச்சி ஸ்ரீரங்கத்தில் ரெங்கநாத பெருமாள் கோயில் உள்ளதுபோன்று, வடக்கு திசையில் இந்தக் கோயில் அமைந்துள்ளது.  இதனாலேயே வடரங்கம் என்று அழைக்கப்படுகிறது.  இங்குள்ள ரெங்கநாதப் பெருமாளும், ஸ்ரீரங்கத்தில் இருப்பதைப் போன்று பள்ளிகொண்டிருப்பது மிகச் சிறப்பானதாகும். 5 ஊழியர்கள் பணிபுரியும் இக்கோயிலில், தினமும் 3 காலபூஜை நடக்கிறது. 14 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயிலின் கும்பாபிஷேகம் நடந்திருக்கிறது.  

மூலவர் ரெங்கநாதப் பெருமாள் உள்ள சன்னதியின் மேற்கூரை பழுதடைந்துள்ளது. இப்போது, இந்த மேற்கூரையை ஒரு பலகை மட்டுமே தாங்கிநிற்கிறது. இதனால், மேற்கூரை எந்த நேரத்திலும் பெயர்ந்துவிழுந்து விபத்தை ஏற்படுத்தும் அபாயநிலை உள்ளது. இங்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், விபத்து ஏற்படும் முன்பு கோயிலின் மேற்கூரையை உடனே சீரமைக்க ஏற்பாடுசெய்யவேண்டுமென பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...