#பிச்சாண்டவர்
பிச்சாடனர் என்றும் பலிதேர் பிரான் என்றும் ஐயங்கொள் பெம்மான் என்றும் அழைக்கப்படுவது, சிவபெருமானின் பிச்சையேற்கும் வடிவிலமைந்த திருக்கோலம் ஆகும்.
தோற்றம்
ஈசனின் இத்திருவுருவை திருமுறைகள் பலவாறு புகழ்ந்துபோற்றுகின்றன. மணிவாசகர் "ஆரூர் எம் பிச்சைத் தேவா" என்று பாடுகின்றார். இ லிங்க புராணம் உள்ளிட்ட புராணங்களில், தாருகாவனத்திருடிகளின் ஆணவம் அடக்கிய ஈசனின் அருளாடல் வியந்தோதப்படுகின்றது.
வைரவரும் இக்கோலமும் கிட்டத்தட்ட ஒன்று போலவே தோற்றமளிக்கும் எனினும், வைரவர் ஆங்காரமாகவும், இவர் பெருவனப்போடும் காட்சியருள்வார். காலில் பாதுகை காணப்படுவதும் பொதுவாக வைரவர்க்கன்றி பலிதேர்பிரானுக்கு மாத்திரமுள்ள சிறப்பம்சமாகும்.
வெண்ணீறு பூசி, பாதங்களில் பாதக்குறடு தாங்கி, வலக்கரத்தில் புற்கட்டும் மானும், இடக்கரத்தில் சூலமும் பிச்சையோடும் என்று நாற்கரத்தினராக பலிதேர்பிரான் சித்தரிக்கப்படுவார். கருணை பொழியும் கண்களும், காண்பாரை மயக்கும் கட்டழகும், பிறந்தமேனியுமாய் அவர் காணப்படுவார். அருகே மோகினியையும் , தாருகாவனத்து மகளிரையும், பூதகணங்களையும் சித்தரிப்பதும் மரபு.
No comments:
Post a Comment