#சோமாஸ்கந்தர்
சிவ பார்வதி தம்பதிகள் தங்கள் குழந்தையான கந்தனுடன் காட்சியளிப்பதை சோமாஸ்கந்தர் என்று அழைக்கிறோம். இவ்வடிவத்தில் சைவம் (சிவன்), சாக்தம் (உமை), கௌமாரம் (கந்தன்) ஆகியவற்றின் பிரதானத் தெய்வங்கள் இடம்பெற்றுள்ளன.
மகேசுவர வடிவங்களில் இந்த திருவுருவம், தமிழகத்தில் மட்டும் காணப்படுகின்ற சிறப்பான வடிவமாகும்.
பஞ்சகுண சிவமூர்த்திகளில் சோமாசுகந்தர் கருணா மூர்த்தி என்று அறியப்பெறுகிறார்.
சொல்லிலக்கணம்
சோமாசுகந்தர் என்பது சமஸ்கிருத மொழிச்சொல். சோமன் எனும் சிவபெருமான் ஸ்கந்தர் எனும் முருகனுடனும், உமையுடனும் இருக்கும் உருவ நிலை சோமாஸ்கந்தர் எனப்படுகிறது. சக உமா ஸ்கந்தர் என்பது சோமாஸ்கந்தர் என்று ஆகியது.
வேறு பெயர்கள்
குழந்தை நாயகர்
இளமுருகு உடனுறையும் அம்மையப்பர்
சச்சிதானந்தம்
சிவனுமைமுருகு
No comments:
Post a Comment