Wednesday, 13 December 2017

தட்சிணாமூர்த்தி - குரு பகவான்

#தட்சிணாமூர்த்தி

நான்கு கைகள் கொண்டு ஆலமரத்தின் கீழ் தென்திசையை நோக்கி அமர்ந்துள்ளார். அவருடைய வலதுகால் 'அபஸ்மரா' என்ற அரக்கனை மிதித்த நிலையில் அமர்ந்துள்ளார். அபஸ்மரா அறியாமையை / இருளை குறிக்கின்றது. அவரது ஒரு மேல் கையில் ஒரு ருத்திராட்ச மாலையையும் / ஒரு பாம்பையும் பிடித்துள்ளார். அவரது மற்றொரு மேல் கையில் நெருப்பை கொண்டுள்ளார். அவருடைய கீழ் இடது கையில் தர்பைப் புல்லை / ஓலைச்சுவடி வைத்துள்ளார், கீழ் வலது கையில் ஞான முத்திரையையும் காட்டுகிறார். அவர் தியானத்தில் இருப்பதாக கருதப்படுகிறது.

#திருமேனி

பளிங்கு போன்ற வெண்ணிறம் தூய்மையை உணர்த்தும்.

*வலப் பாதம் முயலகனை மிதித்தமர்ந்திருத்தல்

அனைத்து தீமைகளையும் அடக்கி ஆளும் வலிமை.

*திருக்கரத்திலுள்ள நூல்

இது சிவஞான போதமாகும். ஞானங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கி கொண்டு திகழ்கின்றது. ஞானத்தாலேயே வீடு பேறுகிட்டும்.

*திருக்கரத்தில் உருத்திராக்கமாலை

36 அல்லது 96 தத்துவங்களை உணர்த்துவது. உருத்திராக்க மாலை கொண்டு திருவைந்தெழுத்தைப் பன்முறை எண்ணிப் பல்காலும் உருவேற்றித் தியானித்தலே ஞானம்பெறும் நெறி என உணர்த்தலும் ஆகும்.

*இடக்கரத்தில் அமிர்தகலசம்

அனைத்து உயிர்களுக்கும் பேரின்பம் அளிக்க வல்ல ஆற்றல்.

*சின்முத்திரை

ஞானத்தின் அடையாளம், பெருவிரலின் அடிப்பாகத்தைச் சுட்டுவிரல் தொடவும், ஏனைய மூன்று விரல்களும் விலகி நிற்கும் முத்திரை இது. பெருவிரல் இறைவனையும், சுட்டுவிரல் உயிரையும், மற்ற மூன்று விரல்களுள் நடுவிரல் ஆணவத்தையும், மோதிரவிரல் கன்மத்தையும், சுண்டு விரல் மாயையையும் குறிக்கும். உயிரானது மும்மலங்களின்றும் நீங்கி இறைவன் திருவடி அடைந்து இன்புறுவதே இம்முத்திரையின் தத்துவமாகும்.

*புலித்தோல்

தீயசக்திகளை அடக்கியாளும் பேராற்றல்

*தாமரை மலர்மீது அமர்தல்

அன்பர் இதயதாமரையில் வீற்றிருப்பவர். தாமரை மலர் ஓங்காரத்தை உணர்த்துவது.

*நெற்றிக்கண்

காமனை எரித்த கண்ணுதல்; ஞானமும் வீடும் எய்த விரும்புவோர் எவரும் ஐம்பொறி அவர்களை அறுந்தொழித்துப் புலனடக்கம் உடையராதல், துறவின் சிறப்பு.

*ஆலமரமும் அதன் நிழலும்

மாயையும் அதன் காரியமாகிய உலகமும்

*தென்முகம்

அவரை நோக்கி வடக்காகத் தியானிக்க வேண்டும் என்ற குறிப்பு.

*அணிந்துள்ள பாம்பு

குண்டலினி சக்தியைக் குறிப்பது.

*வெள்விடை

தருமம்

*சூழ்ந்துள்ள விலங்குகள்

பசுபதித்தன்மை அணைத்து உயிர்களுக்கும் அவரே தலைவர்.

*முயலகன்

முயலகன் வடிவம் அறியாமையைக் குறிப்பதால் அறிவுப் பிழம்பாகிய ஆலமர் செல்வன் அறியாமையாகிய முயலகனைக் காலடியில் மிதிப்பதாகக் காட்டுவது அருட்குறிப்பு.

*நூல்கள்

ஞான சூத்திரம், ஞானச் சுருக்கம், ஞான பஞ்சாட்சரம் என பல நூல்களை தட்சணாமூர்த்தி எழுதியுள்ளதாக சித்தர்கள் இராச்சியம் வலைதளம் கூறுகிறது.

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...