பிரதமர் நரேந்திர மோடி 'தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டுக்கும் கழிப்பறை அமைக்க உத்தரவிட்டார். "அந்த திட்டத்தின் கீழ் கழிப்பறை அமைக்க வேண்டும் என்றால் பாலியல் ரீதியாக ஒத்துழைக்க வேண்டும்" என்று பெண்ணிடம் கேட்டுள்ளார் பணியில் இருந்த அதிகாரி.
சத்தீஸ்கர் மாநிலம், ராய்கர் மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகத்தில் துணை இன்ஜினியராக பணியாற்றி வருகிறார் சாரதி. 32 வயதாக பெண் ஒருவர் சாரதி மீது போலீஸில் புகார் அளித்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் 509(b) சட்டத்தின் கீழ் சாரதி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.
"நவம்பர் 21-ம் தேதி அந்த பெண் வீட்டில் கட்டிடம் கட்ட தடை விதித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்பிறகு, அவர் சரியான சான்றுகளை காட்டி, கட்டிடம் கட்ட அனுமதி பெற்றார்" என்று போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. " ஒருவேளை நான் பாலியல் ரீதியாக ஒத்துழைக்கவில்லை என்றால் வீட்டை இடித்துவிடுவதாக அந்த அதிகாரி மிரட்டினார்" என்று அந்த பெண் போலீஸிடம் கூறியுள்ளார்
No comments:
Post a Comment